Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து வெளிவரும் பாலின் நாற்றத்தை நீக்க சில வழிகள்!!!
வீட்டில் சமைக்க பயன்படுத்தும் நிறைய பாத்திரங்களில் பால், முட்டை, பூண்டு, மீன், இறைச்சி போன்றவற்றின் துர்நாற்றம் வீசும். அத்தகைய துர்நாற்றம் வீசும் பாத்திரங்களை எவ்வளவு தான் சோப்பு பயன்படுத்தி தேய்த்து கழுவினாலும், அதிலிருந்து வெளிவரும் நாற்றம் மட்டும் போகாது. ஆனால் ஒருசில ட்ரிக்ஸ் பயன்படுத்தினால், நிச்சயம் அத்தகைய துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.
இப்போது அதில் பால் துர்நாற்றத்தை பாத்திரம், குழந்தைகள் பால் குடிக்கும் பாட்டில், துணி போன்றவற்றில் இருந்து நீக்குவது எப்படி என்று என்று பார்ப்போம். குறிப்பாக பால் துர்நாற்றமானது நாட்கள் போக போக அழுகிய முட்டையின் நாற்றம் போல் வீசும். ஆகவே அப்படி நாற்றம் வீசுவதற்குள், கீழே கொடுக்கப்பட்டுள்ள ட்ரிக்ஸ் பயன்படுத்தி பாருங்கள். இதனால் பாலின் நாற்றமானது நீங்கிவிடும்.

உடனே அலசவும்
பாட்டில், கார்பெட், துணி போன்றவற்றில் பாலின் துர்நாற்றம் வீசாமல் இருக்க வேண்டுமானால், அதனை காய வைக்காமல், ஈரமாக இருக்கும் போதே கழுவ வேண்டும். அதிலும் சோப்பு நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும். அதுவே துணியில் என்றால், சுத்தமான நீரில் அலசிவிட்டு, பின் சோப்பு பயன்படுத்தி துவைக்க வேண்டும்.

சுத்தப்படுத்தும் நீர்மம்
கடைகளில் விற்கப்படும் நறுமணமிக்க நீர்மங்களைக் கொண்டு துணி மற்றும் தரைவிரிப்புக்களில் உள்ள பால் நாற்றத்தைப் போக்கலாம். இல்லாவிட்டால் சோப்பு நீர் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதிலும் சோப்பு நீர் பயன்படுத்துவதாக இருந்தால், அதனை சோப்பு நீரில் 20 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமான நீரில் அலச வேண்டும்.

எலுமிச்சை
எலுமிச்சையில் உள்ள நறுமணம் அனைத்து விதமான துர்நாற்றத்தையும் போக்கிவிடும். அதற்கு எலுமிச்சை துண்டைக் கொண்டு, பாத்திரங்கள் மற்றும் பாட்டிலை தேய்த்து கழுவ வேண்டும். இல்லாவிட்டால், எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, அதில் பாத்திரங்களையோ அல்லது பாட்டிலையோ ஊற வைத்து, பின் சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும். இதனால் பாலின் துர்நாற்றம் போய்விடுவதோடு, கறைகள் முற்றிலும் நீங்கிவிடும்.

வினிகர்
பால் கூட கறைகளை ஏற்படுத்தும். எனவே அப்போது வினிகரைப் பயன்படுத்தினால், பாலினால் ஏற்பட்ட கறைகள் நீங்குவதோடு, பாலின் துர்நாற்றமும் போய்விடும்.

சுடுநீர்
பாலை காய்ச்சிய பின்னர், அதில் சுடுநீரை ஊற்றி ஊற வைத்து, பின் சோப்பபு பயன்படுத்தி கழுவினாலும் துர்நாற்றம் நீங்கும். ஒருவேளை அப்படி போகாவிட்டால், அப்போது எலுமிச்சை துண்டு கொண்டு தேய்த்து கழுவுங்கள்.



Click it and Unblock the Notifications