For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மர அலமாரியை சுத்தம் செய்வதற்கான சில டிப்ஸ்...

By Ashok CR
|

புது அலமாரி வாங்குவதற்காக, உங்கள் பழைய மர அலமாரியை கழித்து விட முடிவு செய்து விட்டீர்களா? அப்படியானால் சரியான நேரத்தில் தான் இந்த கட்டுரையை படிக்க வந்துள்ளீர்கள். உங்கள் நேரத்தையும் சிறிதளவு இதற்கு செலவிட்டால், உங்கள் பழைய மர அலமாரியையே புதிது போல மாற்றி விடலாம். மர அலமாரியை எப்படி சுத்தம் செய்வதென்று தெரிந்து கொண்டால், அதற்கு ஒரு புது வாழ்க்கையையே அளித்து விடலாம்.

சில டிப்ஸ்கள் தெரிந்தால் போதும், மர அலமாரியை சுத்தம் செய்வது ஒன்றும் கடினமான வேலையாக இருக்காது. உலோகம் மற்றும் வேறு சில மூலப்பொருளால் செய்யப்பட அலமாரிகளை விட, மரத்தால் செய்யப்பட்ட அலமாரியை பராமரிப்பதில் கூடுதல் கவனம் தேவை.

வாஷிங் மெஷினில் துணியை துவைக்கிறவங்களா? இதெல்லாம் ஞாபகத்துல வெச்சுக்கோங்க...

அதனை சுத்தப்படுத்தும் போது, சரியான சுத்தப்படுத்தும் பொருட்கள் மற்றும் சுத்தப்படுத்தும் முறைகளை பயன்படுத்தவில்லை என்றால் சீக்கிரத்திலேயே அது கெட்டுவிடும். இப்போது அதிக சிரத்தை இல்லாமல், மர அலமாரியை சுத்தப்படுத்தும் வழிகளைப் பற்றி பார்க்கலாமா...?

Tips For Cleaning A Wooden Wardrobe

மைக்ரோ ஃபைபர் துணியை பயன்படுத்துங்கள்

எரிச்சல் ஏற்படாமல் மர அலமாரியை துடைக்க வேண்டுமா? அப்படியானால் மைக்ரோ ஃபைபர் துணியை பயன்படுத்துவது தான் எளிய தீர்வாகும். இதனை பயன்படுத்தும் போது மர அலமாரியில் கீறல்கள் விழாது.

வெள்ளை வினிகரை பயன்படுத்துங்கள்

உங்கள் அலமாரி அழுக்கு படிந்து தூசியுடன் காணப்பட்டால், வெள்ளை வினிகரை பயன்படுத்துவது சிறந்த வழியாகும். துடைக்கும் துணியில் கொஞ்சம் வெள்ளை வினிகரை ஊற்றி, அதனை வைத்து அலமாரியை துடைக்கவும். எஞ்சியிருக்கும் அழுக்குகளை தண்ணீர் ஊற்றி துடைத்து, ஈரத்தையும் ஒத்தி எடுத்துவிடுங்கள்.

மூலை முடுக்குகளை துடையுங்கள்

மர அலமாரியின் மூலை முடுக்குகளை துடைக்க மறந்து விடாதீர்கள். இதனை செய்ய தண்ணீரில் முக்கிய பஞ்சுருண்டையை பயன்படுத்துங்கள். துடைத்த பின், அந்த பகுதிகளில் உள்ள ஈரத்தை ஒத்தி எடுக்க மறந்துவிடாதீர்கள்.

சிராய்ப்பான ஸ்பாஞ்சை எப்போதும் பயன்படுத்தாதீர்கள்

சிராய்ப்பான ஸ்பாஞ்சை பயன்படுத்தி மர அலமாரியை துடைப்பது ஒரு தவறான தேர்வாகும். இதனால் அலமாரியின் மேற்பரப்பில் கீறல்கள் ஏற்படும். அதுவும் வார்னிஷ் செய்யப்பட அலமாரியை இப்படி துடைக்கும் போது, உங்களை வருத்தத்தில் ஆழ்த்தி விடும்.

ஈரப்பதம் இல்லாமல் வைக்க வேண்டும்

உங்கள் மர அலமாரி வார்னிஷ் செய்யப்பட்டது என்றால், அதன் மீது ஈரப்பதத்தை இருக்கச் செய்வது நல்லதல்ல. நாம் பயன்படுத்தும் வார்னிஷ்கள் பலவும் நீர் எதிர்ப்பு இல்லாதவையாகும். அதனால் காலப்போக்கில் அதன் மரம் பாதிக்கப்பட்டு விடும். தண்ணீர் ஊற்றி அலமாரியை கழுவினால், உடனே ஈரத்தை துடைத்து காய வைத்துவிடுங்கள்.

அழுத்தி தேய்க்காதீர்கள்

மர அலமாரியை துடைக்கும் போது எப்போதுமே வட்டமான அசைவில் துடைக்கவும். மேற்பரப்பின் மீது எப்போதுமே அழுத்தி துடைக்காதீர்கள். ஒட்டிக் கொள்ளும் அழுக்குகளை கண்டால், மிதமான துடைக்கும் பொருட்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பேக்கிங் சோடா பயன்படுத்தக்கூடாது

துடைப்பதற்கு பேக்கிங் சோடா சிறந்த தேர்வாக இருந்தாலும் கூட, மர அலமாரியை துடைப்பதற்கு அது சிறந்ததல்ல. மர அலமாரியை பேக்கிங் சோடாவை கொண்டு துடைத்தால் அதன் அமைப்பு நயம் பாதிப்படையும்.

வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்

உங்கள் மர அலமாரிகள் மற்றும் ஃபர்னிச்சர்களையும் இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது துடைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இப்படி செய்வதால் உங்கள் அலமாரி எப்போதுமே புதிதானதை போல் காட்சி அளிக்கும். தூசி படிய வைத்தால், உங்கள் வேலைப்பளு தான் அதிகரிக்கும்.

English summary

Tips For Cleaning A Wooden Wardrobe

If not using the perfect cleaning agents and cleaning techniques while cleaning wooden wardrobes, it may get damaged fast. Here we discuss how to clean a wooden wardrobe without much exertion and sweat.
Desktop Bottom Promotion