For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

படுக்கை விரிப்புக்களில் படிந்த இரத்த கறைகளைப் போக்க சில டிப்ஸ்...

By Boopathi Lakshmanan
|

அழகிய மெத்தை விரிப்புகளை வாங்கி போட வேண்டும் என்று ஆசையா? ஆசைக்காக போட்டு பின்னர் அதில் ஏற்படும் கறைகளை நீக்குவது சிரமம் என்று நினைக்கின்றீர்களா? அப்படி என்றால் இந்த பகுதி உங்களுக்கானது தான். படித்துப் பயன் பெறுங்கள்!

இரத்த கறை படிந்த படுக்கை விரிப்புகளை சுத்தம் செய்வது எளிதான காரியம் கிடையாது. இதனால் பலர் கறை படிந்த விரிப்புகளை மீண்டும் பயன்படுத்துவதில்லை. அது உபயோகமற்று போய் விடுகின்றது. இதனால் பணமும் வீணாகிறது. ஆனால் இழப்பு இதனுடன் நிற்பதில்லை. வேறு விரிப்பை வாங்குவதற்கும் பணம் செலவாகின்றது.

இத்தகைய வீண் செலவுகளை குறைக்கவும் கறை படிந்த விரிப்புகளை மீண்டும் சுத்தம் செய்து பயன்படுத்தவும் இங்கு சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். இதை படித்து செயல்படுத்தி பயனடையுங்கள்.

Removing Blood Stains From Bed Sheets: Tips

கறைகளை உடனடியாக படிந்த உடன் சுத்தம் செய்யுங்கள்

ஒரு வேளை கறைகளை படிந்த உடன் பார்த்தால் உடனடியாக அதை சீக்கிரம் குளிர்ந்த தண்ணீரில் ஊற வைத்து துவைத்து விடுங்கள். இரத்தக் கறையை போக்குவதற்கு இதுவே எளிய முறையாகும். நீங்கள் சாதாரணமாக பயன்படுத்தும் சோப்பை பயன்படுத்தினால் போதும். உங்கள் விரிப்பு பழைய நிலைக்கு வந்துவிடும். இதை உலர்சலவை செய்ய வேண்டும் என்ற அவசியமும் இதில் கிடையாது.

கறை காய்ந்திருந்தால்

குறை படிந்து நெடுநேரம் ஆன பின் நீங்கள் கவனித்தால் படுக்கை விரிப்பை தூக்கி போடவோ அல்லது உலர் சலவை செய்ய தர வேண்டும் என்றோ எண்ண வேண்டாம். இரத்தக் கறைகளை நீக்குவதற்கு ஹைடிரோஜின் பேராக்சைட் உதவுகின்றது. இது சிறந்த முறையில் கறைகளை போக்கக் கூடியது. ஆனால் இதை துணியில் போட்டு ஊற வைத்தால் மட்டும் கறையை முழுமையாக போக்க முடியாது. ஒரு பழைய துணி அல்லது டிஸ்யூ பேப்பர் கொண்டு இதை தொட்டு கறை படிந்த இடத்தில் தேய்க்க வேண்டும். இது கறைகளை நீக்க பயன்படுத்தும் சிறந்த வழிமுறைகளில் ஒன்றாகும்.

ஷாம்பு போட்டு கழுவுங்கள்

நீங்கள் பொதுவாக பயன்படுத்தும் ஷாம்புக்களை இதற்காக பயன்படுத்தலாம். குறைந்த விலை கொண்ட ஷாம்புவாக இருந்தாலும் நீங்கள் பயன்படுத்தும் விலை உயர்ந்த பொருளாக இருந்தாலும் இவை நிச்சயம் சரியான வேலையை செய்யும். எப்படி உங்களுக்கு பிடித்த விரிப்புகளை இரத்தக் கறையிலிருந்து சுத்தம் செய்வது என்று கவலையுற்று இருந்தால் இந்த எளிய முறையை பயன்படுத்தலாம். முயற்சி செய்து பலனை பாருங்கள்.

ஆப்பச் சோடா/பேக்கிங் சோடா

இரத்தக் கறை படிந்த படுக்கை விரிப்புகளை சுத்தம் செய்வதில் ஆப்பச் சோடாவை பயன்படுத்துவது பாதுகாப்பான மற்றும் விலை குறைந்த முறையாகும். இதைக் கொண்டு ஒரு திரவத்தை தயார் செய்து அதாவது எவ்வளவு ஆப்பச் சோடா எடுக்கின்றீர்களோ அதற்கு இரு மடங்கு குளிர்ந்த தண்ணீரை எடுத்துக் கொண்டு கறை படிந்த இடங்களில் இட்டு 30 நிமிடங்கள் அந்த இடத்தை மட்டும் ஊற வைத்து, பின்னர் அதை தேய்த்து கழுவ வேண்டும். இதுவும் கறை படிந்த இடங்களை சுத்தம் செய்வதில் சிறந்த முறையாக கருதப்படுகின்றது.

கறி டென்டரைசர்

உலர்ந்த இரத்தக் கறை படிந்த மெத்தை விரிப்புகளை எப்படி சுத்தம் செய்வது என்று நீங்கள் நினைத்திருந்தால் மீட் டென்டரைசர் அல்லது கறியை குத்தி மிருதுவாக்கும் முறையை பயன்படுத்தி பாருங்கள். இந்த கறி டென்டரைசரை கொண்டு துணியை அடிக்கும் போது மிகவும் கடினமாக கட்டியுள்ள புரதத்தை இது உடைத்து இரத்த கறையை போக்குகின்றது. அடுத்த முறை நீங்கள் கறையை எடுக்க மறந்து விட்டால் இம்முறையை பயன்படுத்துங்கள்.

English summary

Removing Blood Stains From Bed Sheets: Tips

Removing blood stains from bed sheets are no easy task and people sometimes go on to discard their bed sheets or bedding as a whole. Some people spend hefty money on dry cleaning too. Below are a few tips on how to remove blood stains from bed sheet.
Story first published: Saturday, February 1, 2014, 16:35 [IST]
Desktop Bottom Promotion