For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கம்பளி போர்வையை வீட்டிலேயே சுத்தம் செய்ய சில குறிப்புகள்!!!

By Ashok CR
|

குளிர்காலங்களில் சூடான மெத்தையை விட சுகமாக இருப்பது வேறு எதுவும் இல்லை. ஆனால் இந்த குளிர்காலத்தில் கம்பளி போர்வையை சுத்தம் செய்வதற்கு சிறிது மெனக்கெட வேண்டும். குளிர்காலத்தில் கம்பளி போர்வையை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைப்பது மிகவும் முக்கியமானது.

குளிர்காலத்தில் கம்பளி போர்வையை சுத்தம் செய்வது என்பது படுக்கையை ஆரோக்கியமாக வைக்கும் விஷயங்களில் ஒன்று. ஆனால் இதில் ஏற்படும் தோல்விகள் சில பிரச்சனைகளையும், தொந்தரவுகளையும் ஏற்படுத்தும். காற்றில் உள்ள ஈரத்தன்மை, கம்பளி போர்வையில் ஒரு கெட்ட வாடையை ஏற்படுத்தும். இந்த ஈரத்தன்மை, கம்பளி போர்வையில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா உருவாக காரணமாகிறது. கம்பளி போர்வையில் தூசிகள் சேர்ந்தால் அது ஆஸ்துமா மற்றும் அலர்ஜியை அதிகரிக்கிறது.

Cleaning Winter Blankets At Home

நீங்கள் உங்கள் கம்பளி போர்வையை அடுத்த குளிர்காலத்திற்காக உள்ளே வைக்கும் முன் சுத்தம் செய்ய வேண்டும். கம்பளி போர்வையின் அளவு மற்றும் எடையால், அதை சுத்தம் செய்வதற்கு சிறிதளவு கடினமாக உள்ளது. சரியாக துவைக்காவிடில், சோப்புத்தூளின் கசடுகள் கம்பளி போர்வையில் தங்கி விடும். உங்கள் சலவை இயந்திரம் கம்பளி போர்வையை சுத்தம் செய்யும் அளவிற்கு வடிவமைக்கப்படாமல் இருந்தால், நீங்கள் இதை ட்ரை கிளீன் செய்யவும்.

பெரும்பாலும், இந்த குளிர்கால கம்பளி போர்வையை சுத்தம் செய்வதற்கு, வழக்கமான சுத்தம் செய்யும் முறைகள் ஒத்து வராது. எனவே இந்த நேரம், குளிர்கால கம்பளி போர்வையை சுத்தம் செய்யும் குறிப்புகளை பற்றி யோசிப்பதற்கு சரியானது. குளிர்கால கம்பளி போர்வையை சுத்தம் செய்வதற்கு சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வழிமுறைகளை படித்தல்

குளிர்கால கம்பளி போர்வையை சுத்தம் செய்வதற்கு முன், உற்பத்தியாளர்கள் கூறி உள்ள வழி முறைகளை பார்த்துவிட்டு அதன்படி சுத்தம் செய்வது நல்லது. இந்த முறைகள் உங்கள் குளிர்கால கம்பளி போர்வையை எந்த வித பாதிப்பும் இல்லாமல் சுத்தம் செய்வதற்கு உதவுகிறது.

தூசிகளை அப்புறப்படுத்துதல்

குளிர்கால கம்பளி போர்வை சில நேரங்களிலேயே தூசிகளை தன்னிடம் குவித்துவைக்கிறது. குளிர்கால கம்பளி போர்வையை சுத்தம் செய்வதற்கு முன் அதை உதறி தூசிகளை வெளியேற்ற வேண்டும். நீங்கள் வேக்கம் கிளினர் பயன்படுத்தியும் தூசிகளை வெளியேற்றலாம். இது கம்பளி போர்வையை சுத்தம் செய்வதற்கு ஒரு முக்கியமான குறிப்பாக உள்ளது.

லேசான சோப்புத்தூளை உபயோகித்தல்

குளிர்கால கம்பளி போர்வையை சுத்தம் செய்வதற்கு வீரியமுள்ள சோப்புத்தூளை உபயோகிக்க கூடாது. கறைகள் இல்லாவிட்டால் வீரியமில்லாத சோப்புத்தூளை உபயோகித்து போர்வையை சுத்தம் செய்தாலே போதுமானது. போர்வை அதிக தூசியாக இருந்தால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள பிற குறிப்புகளை பயன்படுத்தி போர்வையை சுத்தம் செய்யலாம். ட்ரை க்ளீன்னையும் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.

கறைகளை அகற்றுதல்

குளிர்கால கம்பளி போர்வையை சுத்தம் செய்வதற்கு முன் கறைகள் எங்கு உள்ளது என்று பார்த்துகொள்வது நல்லது. கறைகளை திரவ சோப்பின் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். இது கம்பளி போர்வையை சுத்தம் செய்வதற்கு ஒரு முக்கியமான குறிப்பு. கம்பளி போர்வையை சுத்தம் செய்வதற்கு முன் கறைகளை அகற்றினால் இந்த வேலையை எளிதாக்கும்.

கலக்கக்கூடாது

கம்பளி போர்வையை வேறு துணிகளுடன் கலந்து துவைக்கக் கூடாது. இது நிறத்தை அதிக அளவில் மாற்றி விடலாம். கம்பளி போர்வையை தனியாக சுத்தம் செய்வது, கம்பளி போர்வையை சுத்தம் செய்யும் குறிப்புகளில் முக்கியமானது.

ப்ளீச்சிங் செய்யக்கூடாது

கம்பளி போர்வையை சுத்தம் செய்யும் போது ப்ளீச்சிங்கை உபயோகிக்கக்கூடாது என்று நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். இந்த ப்ளீச்சிங் அல்லது துணி மென்படுத்திகள் சில, தண்ணீருக்கு மற்றும் போர்வைக்கும் ஏற்றதாக இல்லாமல் இருக்கும். குளிர்கால கம்பளி போர்வையில் லேசான சோப்புத்துளை உபயோகித்தல் நல்லது.

உலர்த்துதல்

கனமான கம்பளி போர்வைகளை கையால் கசக்குதலும் முறுக்குதலும் முடியாத ஒன்று. நீங்கள் உங்கள் சலவை இயந்திரத்தில் உள்ள உலர்த்தும் பட்டனை பயன்படுத்தி அதனை உலர்த்த முயற்சிக்கவும். குறைவான வெப்பத்தில் கம்பளி போர்வையை துவைப்பதென்பது முக்கியமான குறிப்புகளில் ஒன்று.

புரஃபெஷனல் ட்ரை க்ளீன்

உங்கள் குளிர்கால கம்பளி போர்வையை சுத்தம் செய்வது கடினமாக இருந்தால், புரஃபெஷனல் ட்ரை க்ளீன் அலுவலகத்தை அணுகுவது மிகவும் நல்லது. சில கம்பளி போர்வையை, ட்ரை க்ளீன் மட்டுமே செய்ய முடியும். ட்ரை க்ளீன் கம்பளி போர்வையை சுத்தம் செய்வதற்கு மிகவும் சிறந்த வழி.

English summary

Cleaning Winter Blankets At Home

Most of the conventional washing technique may not be sufficient for washing winter blankets. So, it is time for you to think about some useful tips to clean blankets. Here are some tips that you can try while washing winter blankets.
Story first published: Tuesday, January 7, 2014, 15:45 [IST]
Desktop Bottom Promotion