For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழைப்பழத்தை சாப்பிட்டதுக்கு அப்புறம் தோலை தூக்கி போடாதீங்க...

By Maha
|

அனைவரும் வாழைப்பழத்தை சாப்பிட்டால், அதன் தோலை தூக்கிப் போட்டுவிடுவோம். ஆனால் அப்படி அதன் தோலை தூக்கிப் போடாமல் வைத்திருந்தால், அதனைக் கொண்டு பலவற்றை சுத்தப்படுத்தலாம். மேலும் எவற்றையெல்லாம் சுத்தம் செய்யும் என்று பார்த்தால், அசந்து போய்விடுவீர்கள்.

பொதுவாக அனைவரும் வீட்டை சுத்தம் செய்ய நிறைய பணம் செலவழிப்போம். ஆனால் பணம் அதிகம் செலவழிக்காமலேயே வீட்டில் உள்ள சிலவற்றை எளிதில் சுத்தம் செய்யலாம் என்பது தெரியுமா? இங்கு அப்படி வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எவற்றையெல்லாம் சுத்தம் செய்யலாம் என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, இனிமேல் வாழைப்பழத்தின் தோலை தூக்கிப் போடாமல், அதனைக் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு செய்து பாருங்கள். நிச்சயம் அசந்து போய்விடுவீர்கள்.

இப்போது வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எவற்றையெல்லாம் சுத்தம் செய்யலாம் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சில்வர் பொருட்கள்

சில்வர் பொருட்கள்

வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு சில்வர் பொருட்களை தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சில்வர் பொருட்களானது நன்கு பளபளப்புடன் மின்னும்.

ஷூ பாலிஷ்

ஷூ பாலிஷ்

வீட்டில் ஷூ பாலிஷ் தீர்ந்துவிட்டால், அப்போது வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு ஷூவைத் தேய்த்தால், ஷூவானது பாலிஷ் செய்தது போன்று பொலிவோடு இருக்கும்.

செடிகளை பிரகாசமாக காண்பிக்க...

செடிகளை பிரகாசமாக காண்பிக்க...

வீட்டினுள் வளர்க்கும் செடிகளில் தூசி படிந்து, அசிங்கமாக காணப்படுகிறதா? அப்படியானால் அப்போது அதன் மேலே தண்ணீர் ஊற்றுவதற்கு பதிலாக, அதன் இலைகளை வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு துடைத்து எடுத்தால், செடியின் இலைகளானது நன்கு பிரகாசமாக இருக்கும்.

தண்ணீர் டேங்க்

தண்ணீர் டேங்க்

தண்ணீர் டேங்க்குகளை சுத்தம் செய்ய நினைத்தால், அப்போது வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு துடைத்து கழுவினால், டேங்க்கில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, டேங்க்கானது சுத்தமாக இருக்கும்.

மெழுகை அகற்ற

மெழுகை அகற்ற

கண்ணாடி டேபிளில் மெழுகானது படிந்திருந்தால், அதனைப் போக்குவதற்கு ஒரு சிறந்த வழியென்றால் அது வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு தேய்த்து எடுப்பது தான். அதிலும் இதனைக் கொண்டு தேய்க்கும் போது, மெழுகானது மென்மையாகிவிடும். பின் ஈரமான துணியைக் கொண்டு துடைத்தால், எளிதில் வந்துவிடும்.

மரத்தாலான பொருட்கள்

மரத்தாலான பொருட்கள்

மரத்தாலான பொருட்கள் நன்கு ஜொலிக்க வேண்டுமானால், வாழைப்பழத்தின் தோலைப் பயன்படுத்துங்கள். அதற்கு முதலில் மரத்தாலான பொருட்களை வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு தேய்த்து, 10 நிமிடம் கழித்து ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

மைக்கறைகள்

மைக்கறைகள்

கைகளில் மைக்கறைகளானது படிந்திருந்தால், அப்போது வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு கைகளை தேய்த்து, பின் சோப்பு பயன்படுத்தி கழுவினால், கைகளில் படித்த மைக்கறைகளானது எளிதில் போய்விடும்.

சிடிக்கள்

சிடிக்கள்

சிடிக்களில் கீறல்கள் விழுந்திருந்தால், அப்போது வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு, சிடிக்களை வட்ட வடிவில் தேய்த்து, பின்பு சுத்தமான மற்றும் மென்மையான துணியால் துடைத்து எடுத்து, பின் சிடிக்களைப் பயன்படுத்தினால், படமானது நிற்காமல் நன்றாக ஓடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Clean Your Home With Banana Peels

Banana peels have many surprising home uses. Don't throw away your banana peel after eating the fruit as you can use it to clean your home.
Story first published: Friday, February 21, 2014, 17:10 [IST]
Desktop Bottom Promotion