Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
பிளாஸ்டிக் பொருட்களை சுத்தம் செய்ய சில அருமையான யோசனைகள்!!!
தற்போது பெரும்பாலான வீடுகளில் பிளாஸ்டிக் பொருட்கள் தான் அதிகம் உள்ளது. அப்படி பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒருமுறை பயன்படுத்தினால், அதில் இருந்து நாற்றமானது அவ்வளவு சீக்கிரம் போகாமல் அப்படியே இருக்கும். பொதுவாக இப்படி பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து நாற்றம் வெளிவரும் போது, அதனைப் போக்க சோப்புகளைப் பயன்படுத்துவோம்.
சில சமயங்களில் அந்த சோப்புகளால் கூட நாற்றத்தைப் போக்க முடியாதவாறு ஆகிவிடும். ஆகவே அப்போது பிளாஸ்டிக் பொருட்களில்ல் இருந்து வெளிவரும் நாற்றத்தைப் போக்க, முதலில் குளிர்ச்சியான நீரில் அலசி, பின் வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, பின்பு ஒரு சில இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்தால், அதிலிருந்து வெளிவரும் நாற்றத்தைப் போக்கலாம்.
சரி, இப்போது பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து வெளிவரும் நாற்றத்தைப் போக்க ஒருசில அருமையான வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

செய்தித்தாள்
பிளாஸ்டிக் டப்பாவில் இருந்து நாற்றம் போகாமல் இருந்தால், டப்பாவை நன்கு சோப்பு போட்டு அலசிய பின்னர், அதனுள் செய்தித்தாளை போட்டு நிரப்பி, இரவு முழுவதும் வைத்து மறுநாள், சுடுநீரில் அலசினால், அதில் இருந்து வெளிவரும் நாற்றத்தைப் போக்கலாம்.

நிலக்கரி
நிலக்கரியை பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடி வைக்க வேண்டும். குறிப்பாக அப்படி போட்டு மூடி வைக்கும் போது, டப்பாவானது ஈரமாக இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, அந்த பேஸ்ட்டைக் கொண்டு பிளாஸ்டிக் டப்பாவை தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவினால், நாற்றமானது நீங்கும்.

எலுமிச்சை
எலுமிச்சை மிகவும் சிறப்பான வாசனையைக் கொண்டிருப்பதால், அந்த எலுமிச்சையைக் கொண்டு பிளாஸ்டிக் டப்பாவை தேய்த்தால், அதில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்துடன், அழுக்கையும் நீக்கிவிடும்.

காபி
காபித் தூளைக் கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை தேய்த்து சிறிது நேரம் கழித்து, சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால், நிச்சயம் துர்நாற்றமானது நீங்கும்.



Click it and Unblock the Notifications
