Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
ஆடைகளை நீண்ட காலம் பாதுகாப்பதற்கான 10 எளிய வழிகள்!!!
வரலாற்று காலம் தொட்டு, ஆடைகள் மனிதனின் அடையாளத்தை வெளிப்படுத்தி வருகின்றன. அத்தகைய ஆடைகளை கடை கடையாக ஏறி. இறங்கி மற்றும் ஆற்றல், நேரம், மற்றும் பணத்தை செலவழித்து வாங்குகிறோம். எனவே, ஆடைகள் வாழ்வின் ஒரு அங்கமாகவே இருந்து வந்திருக்கின்றன. அதிலும் பிறந்த நாளின் பொழுது பெற்றோர் பரிசளித்த சட்டை, முதன் முதலில் வேலைக்கு செல்லும் பொழுது அணிந்திருந்த ஆடை, திருமணத்தின் பொழுது வாங்கிய திருமண உடை போன்றவை அனைவரின் மனதிலும் என்றும் பசுமையாக நினைவில் இருக்கும்.
சில ஆடைகளை குறிப்பிட்ட விழாக்களுக்கு மட்டுமே பயன்படுத்துவோம். மேலும் சில ஆடைகளை, சில பருவங்களுக்கு மட்டுமே பயன்படுத்த இயலும். எனவே ஆடைகளை தேர்ந்தெடுத்து வாங்குவதை விட, ஆடைகளை கவனமாக பாதுகாத்து வருவது மிகவும் முக்கியம். அவ்வாறு இல்லையெனில் மனதிற்கு பிடித்த ஆடைகள் வெறும் குப்பைகளாகிவிடும். எனவே இங்கு ஆடைகளை பாதுகாப்பதற்கான 10 வழிகளை வழங்குகின்றோம். அதைப் படித்து பின்பற்றுங்கள்.

ஆடைகளை கவனமாக தேர்ந்தெடுக்கவும்
ஷாப்பிங் செய்யும் போது, வாங்கும் ஆடைக்கு எந்த விதமான பராமரிப்பு தேவைப்படும்? என பார்த்து கவனமாக ஆடைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது ஒரு அழகான மற்றும் சிறப்பான வேலைப்பாடுகள் அமைந்த ஆடை கவனத்தை கவரலாம். ஆனால் அத்தகைய ஆடைகளுக்கு சிறப்பு கவனம் தேவைப்படலாம். இருப்பினும், அத்தகைய ஆடைகளை பராமரிக்க முடியும் என்கிற நம்பிக்கை இருந்தால் மட்டுமே, அதை வாங்க வேண்டும். ஏனெனில் இத்தகைய ஆடைகளை வழக்கமான முறையில் சுத்தம் செய்ய முடியாது. இது போன்ற ஆடைகளுக்கு ட்ரை க்ளீனிங் தேவைப்படலாம். எனவே ஆடைகளை கவனமுடன் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆடைகளை பிரித்து வைக்கவும்
ஒவ்வொரு ஆடைகளும் பல்வேறு வகையான துணிகளால் தயாரிக்கப்படுகின்றன. மேலும் அவற்றின் பராமரிப்பும் வேறுபடுகிறது. எனவே ஆடைகளை அவற்றின் துணிகளின் அடிப்படையில் பிரித்து வைப்பது என்பது மிகவும் எளிது. இதன்படி அத்துணிகளுக்கு தேவைப்படும் சிறந்த பராமரிப்பை வழங்க முடியும். உதாரணமாக, தினசரி ஆடைகளை பிற ஆடைகளிடமிருந்து பிரித்து வைக்கவும். அப்பொழுது தான் ஆடைகளை சலவைக்கு கொடுக்கும் பொழுது எளிதாக இருக்கும்.

ஆடைகளை மடித்து அல்லது தொங்க விடவும்
சில ஆடைகளை மடித்து அலமாரியில் வைத்து பாதுகாக்க முடியும். ஆனால் சில ஆடைகளை தொங்க விட்டு பராமரிக்க வேண்டும். உதாரணமாக, காக்டெய்ல் ஆடைகள் மற்றும் கோட் போன்றவை. மேலும் மடிக்க வேண்டிய ஆடைகளை தொங்கவிட்டும், தொங்க விட வேண்டிய ஆடைகளை மடித்தும் வைக்கக்கூடாது.

சலவையில் கவனம் தேவை
சில அடர்ந்த நிறமுடைய ஆடைகளை சலவை செய்யும் பொழுது அவற்றின் நிறம் குறைந்து போகலாம். எனவே வெளிர் நிற ஆடைகளை, அவற்றுடன் சேர்த்து சலவை செய்யும் பொழுது, பிற ஆடைகளுக்கு கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும். எனவே ஆடைகளை வண்ணத்தின் அடிப்படையில் தனித் தனியாக சலவை செய்யு வேண்டும். குறிப்பாக ஆடைகள் வண்ணம் இழக்காது என உறுதியாக தெரிந்தால், ஆடைகளை ஒன்றாக சலவை செய்யலாம்.

மென்மையான ஆடைகளை தனியே பிரித்து வைக்கவும்
பட்டு சரிகைகள், பளபளப்பான வேலைப்பாடுகள் நிறைந்த பட்டு துணிகள் மற்றும் நெட்டட் ஆடைகளை சுத்தம் செய்யும் போது அதிக கவனம் தேவைப்படுகிறது. அதிலும் இவற்றிற்கு டிரை க்ளீனிங் மட்டுமே செய்ய வேண்டும். ஆகவே இத்தகைய ஆடைகளை பிரித்து வைத்து பாதுகாப்பது மிகவும் அவசியம்.

சலவைக்கு குளிர்ந்த நீர்!!
சுடு நீர் ஆடைகளை மிக கடுமையாக பாதிக்கும். மேலும் இது ஆடைகளின் ஆயுளை குறைக்கும். எனவே, ஆடைகளை எப்பொழுது சலவை செய்தாலும், குளிர்ந்த நீரையே பயன்படுத்த வேண்டும்.

துணி உலர்த்தியை பயன்படுத்த வேண்டாம்
துணி உலர்த்திகளில் உருவாகும் வெப்பம் துணிகளை மங்கச் செய்துவிடும். மேலும் இது நீண்ட கால அடிப்படையில் ஆடைகளுக்கு பாதிப்பை உண்டாக்குகிறது. ஆகவே சூரிய ஒளியில் ஆடைகளை உலர்த்துவது ஆடைகளுக்கு நன்மை கிடைக்கும். மேலும் அவ்வாறு உலர்த்தும் பொழுது ஆடைகளை உட்பக்கமாக உலர்த்த வேண்டும்.

பருவ கால ஆடைகளை கவனமாக பாதுகாக்கவும்
பருவ கால ஆடைகளை கவனமாக பூஞ்சை, ஈரப்பதம் போன்றவற்றிலிருத்து பாதுகாக்க வேண்டும். அதற்கு ஆடைகளை வைக்கும் அலமாரியில் பூஞ்சை எதிர்ப்பு மாத்திரைகளை பயன்படுத்த வேண்டும். இதனால் மிகவும் பிடித்த ஸ்வெட்டர் போன்ற பருவ கால ஆடைகளில் துளைகள் உருவாக்குவதை தடுக்கும்.

உடனடியாக சேதத்தை சரி செய்யவும்
ஆடைகளின் பட்டன் பாதியாக உடைந்து அல்லது கிழிந்து போனால், விரைவில் சரி செய்து விட வேண்டும். அவைகள் முற்றிலும் சேதம் அடையும் வரை காத்திருக்க வேண்டாம். துணிகளை சரியான முறையில் கையாண்டால், அவை நீண்ட காலம் வரை உழைக்கும்.

விவரங்களை பார்க்க மறவாதீர்கள்!!
ஆடைகள் அவற்றுக்குரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் கிடைக்கின்றன. வெவ்வேறு ஆடைகளை ஒரே முறையில் கையாள முடியாது. அவைகளுக்கு உண்டான சரியான வழிமுறைகளின் படி சலவை செய்து, உலர்த்தி பாதுகாப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆடைகளில் முறையான வழிமுறைகளை கொடுக்கப்படவில்லை என்றால் தவறான வழியை கையாளக் கூடாது. அதற்கு பதிலாக ஆடை பராமரிப்பிற்கான வழிமுறைகளை கடைக்காரரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications