Latest Updates
-
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
சிட்ரஸ் பழங்களை வெச்சு வீட்டையும் சுத்தம் பண்ணலாம்!!!

எலுமிச்சை : எலுமிச்சையின் தோலை வைத்து, காப்பர், மெட்டல் மற்றும் அலங்காரப் பொருட்களை மிகவும் அழகாக எந்த கறையும் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். மேலும் கடினமாக பிளாஸ்டிக், டப்பர்வேர், கண்ணாடி கதவுகள், ஜன்னல்கள் ஆகியவற்றில் இருக்கும் கறைகள் மற்றும் இரும்புகளில் இருக்கும் துருக்கறைகள் போன்ற அனைத்தையும் மிகவும் சுத்தமாக நீக்கும். அதுமட்டுமல்லாமல், துணிகளில் இருக்கும் கறைகளையும் எலுமிச்சையின் சாறு மற்றும் தோலை வைத்தும் நீக்கலாம். அதிலும் எலுமிச்சையின் தோலை எலுமிச்சை சாற்றை விட்டு நன்கு அரைத்து, பேஸ்ட் போல் செய்தும் கறையை நீக்கலாம்.
இதன் தோலை குப்பைத் தொட்டி இருக்கும் இடத்தில் வைத்தால், நாற்றம் அடிக்காமல் இருக்கும். மேலும் அதன் தோலை வைத்து, காய்கறி நறுக்கும் தட்டில் தேய்த்தால், தட்டில் இருக்கும் கிருமிகள் அழிந்துவிடும். கைகளில் அடிக்கும் வெங்காயம், பூண்டு, மீன் மற்றும் சிக்கன் போன்றவற்றை தொட்டு சமைக்கும் போது, கைகளில் ஏற்படும் நாற்றத்தை எலுமிச்சையின் ஒரு துண்டுகளை வைத்து தேய்த்தால், நாற்றம் போய்விடும்.
ஆரஞ்சு : ஆரஞ்சு பழத்தின் தோல் மற்றும் சதைப்பகுதி நிறையவற்றை சுத்தம் செய்யப் பயன்படுகிறது. ஆகவே ஆரஞ்சு பழத்தின் தோலை நன்கு காய வைத்து, அதனை நன்கு பொடி செய்து கொள்ளவும். பின் அதில் சிறிது வெள்ளை வினிகரை கலந்து, பாத்திரங்கள், டேபிள், தட்டுக்கள் போன்றவற்றை தேய்த்தால், அழுக்குகள் பறந்தே போய்விடும். மேலும் நீண்ட நாட்களாக துணிகளில் போகாத கறைகளையும், இதனைக் கொண்டு நீக்கலாம்.
ஆரஞ்சு பழத்தின் தோலை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, ரூம் ஃப்ரஸ்னர் ஆக பயன்படுத்தலாம். மேலும் ஆரஞ்சு பழத்தின் துண்டுகளை குப்பைத் தொட்டிகளில் போட்டாலும், அங்கு கிருமிகள் வராமல் இருப்பதோடு, துர்நாற்றமும் வராமல் இருக்கும்.
திராட்சை : அனைவருக்கும தெரியும் திராட்சை ஒரு சிறந்த, சருமத்திற்கு ஏற்ற ஒரு ஸ்கரப், ஃபேஸ் பேக் மற்றும் துளைகளை போக்கும் திறன் கொண்டது. ஆகவே வீட்டை சுத்தம் செவ்தற்கு திராட்சையின் தோலை காய வைத்து, அதில் உப்பை போட்டு, பாத்திரங்கள் மற்றும் இதரப் பொருட்களைச் சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். இது எந்த ஒரு கறையையும் நீக்கவல்லது. ஆரஞ்சை போலவே, திராட்சையின் தோலை காய வைத்து அரைத்து அல்லது அதன் ஜூஸை, வெள்ளை வினிகருடன் கலந்து பயன்படுத்த வேண்டும்.
ஆகவே இவையெல்லாம், உடலை மட்டும் பிட்டாக அழகாக வைக்கப் பயன்படுவதில்லை, வீட்டில் இருக்கும் கறைகளை நீக்கியும் அழகாக வைக்கிறது.



Click it and Unblock the Notifications
