Latest Updates
-
ஜூன் 17-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
இனிமே டீ குடிக்கும் போது இந்த 5 உணவுகளை தெரியாம கூட சாப்பிடாதீங்க - இல்லனா உங்களுக்குத்தான் ஆபத்து -
இதுல உங்க கை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்.. -
அடுத்தமுறை தேங்காய் சட்னியை இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
1 கப் மீல் மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்களை காதலிக்க எல்லோரும் ஆசைப்படுவார்களாம் - நீங்க பிறந்த மாதம் இதுல இருக்கா? -
எச்சரிக்கை! இந்த 5 பழங்களை அதிகமா சாப்பிடாதீங்க.. இல்லன்னா முகப்பரு அதிகமா வந்துடும்.. -
இந்தியாவில் மது விற்பனையில் முன்னணியில் உள்ள டாப் 5 மாநிலங்கள் - தமிழ்நாடு முதல் இடத்தில் இல்லையாம் தெரியுமா? -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் இரட்டை ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? அப்ப உப்பை வெச்சு துவைங்க...
நீங்க ஜீன்ஸ் வாங்கி எத்தனை நாள் ஆச்சு? எத்தனை தடவை துவைத்து இருக்கிறீர்கள்? என்று கேட்டால் அனைவரும் யோசிப்பார்கள். ஏனெனில் அதைத் துவைத்து பல மாதங்கள் ஆகியிருக்கும். மேலும் அடிக்கடி துவைத்தால், ஜீன்ஸ் அதன் தன்மை, நிறம் போன்றவற்றை இழந்துவிடும் என்றும் நினைத்து, அடிக்கடி வீட்டில் துவைப்பதையும் நிறுத்திவிட்டனர். அதிலும் சிலர் ஜீன்ஸ் துவைப்பதற்கு லாண்டரி தான் சிறந்த வழி என்று எண்ணி அங்கு கொடுத்து துவைக்கின்றனர்.
ஆனால் ஜீன்ஸை சூப்பராக வீட்டிலேயே ஈஸியான முறையில் நிறம் போகாமலும், அதன் தன்மை மாறாமலும் இருக்க அழகாக துவைக்கலாம். அதற்கு உப்பு தான் சிறந்த பொருள். எப்படியெனில் உப்பை வைத்து ஜீன்ஸை துவைத்தால், ஜீன்ஸில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு, துணியின் தன்மையும் அப்படியே இருக்கும். இப்போது உப்பை வைத்து எப்படி துவைப்பது என்று பார்ப்போமா!!!

உப்பை வைத்து எப்படி துவைக்க வேண்டும்?
முதலில் பக்கெட்டில் தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு டீஸ்பூன் உப்பை சேர்த்து, ஜீன்ஸை போட்டு 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பின் அந்த ஜீன்ஸை எடுத்து, வாஷிங் மிசினிலோ அல்லது கையிலோ லேசாக சோப்பு போட்டு துவைத்து, நீரில் அலச வேண்டும். அதிகமாக தேய்த்து விட வேண்டாம். ஏனெனில் பின் அதில் உள்ள துணியின் தன்மை குறைந்துவிடும்.
பின்பு மற்றொரு பக்கெட்டில் நீரை ஊற்றி, அதில் உள்ள நுரை போகும் வரை நன்கு அலச வேண்டும். பின் அதனை காய வைக்க வேண்டும்.
முக்கியமாக ஜீன்ஸ் துவைக்கும் போது, உட்பகுதி வெளியே இருக்க வேண்டும். பின் காய்ந்ததும், அதனை ஐயர்ன் செய்து சரியாக மடித்து வைக்க வேண்டும். இதனால் ஜீன்ஸ் நன்கு புதிது போன்று அழகாக சுத்தமாக இருக்கும்.
எதற்கு ஜீன்ஸை உப்பை வைத்து துவைக்க வேண்டும்?
* புதிய ஜீன்ஸை உப்பை வைத்து துவைத்ததால், ஜீன்ஸில் உள்ள நிறம் போகாமல், புதிது போன்று காணப்படும்.
* உப்பு துணிகளில் படியும் கறைகளை எளிதில் நீக்கிவிடும். அதாவது கறைகளை கஷ்டப்பட்டு தேய்த்து நீக்க வேண்டும் என்று இருக்காது.
* ஜீன்ஸை எப்போது துவைக்கும் போதும், உட்பகுதி வெளியே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் சாயம் போய், வெளுப்புடன் காணப்படுவதைத் தடுக்கலாம்.
* உப்பை சேர்த்து துவைத்தால், துணிகளில் உள்ள சாயம் வெளி வராமல் இருக்கும். மேலும் மற்ற துணிகளில் இருந்து வரும் சாயமும் எந்த துணிகளோடும் கலக்காமல் இருக்கும்.
* அதிலும் உப்போடு, சிறிது வெள்ளை வினிகரை கலந்து துவைத்தால், நல்லது.
* எப்போதும் ப்ளீச்சிங் பவுடரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை துணியில் உள்ள நிறத்தை முற்றிலும் வெளியேற்றிவிடும், பின் துணியின் தன்மையையும் குறைத்துவிடும்.
ஆகவே மேற்கூறியவற்றை நினைவில் வைத்து, ஜீன்ஸை துவைத்தால், ஜீன்ஸை சூப்பராக இருப்பதோடு, லாண்டரியில் துணிகளை போட வேண்டிய அவசியமில்லை. மேலும் வேறு எப்படியெல்லாம் ஜீன்ஸை துவைக்கலாம் என்று தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...



Click it and Unblock the Notifications