Latest Updates
-
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்
சமையலறை பாதுகாவலன் : பளிச் தோற்றம் பார்ப்போரை ரசிக்க வைக்கும்

எளிய முறையில் ஏர்பான் சுத்தம்
முதலில் நம்முடைய ஏர்பான் எந்தமாதிரியான துணியில் உருவாக்கப்பட்டது என்பதை படித்து பார்த்து அதற்கேற்ப துவைக்கவேண்டும். வெது வெதுப்பான நீரில் சோப் பவுடர் போட்டு அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் லேசாக கசக்கினாலே போதும் பிசு பிசுப்பு ஒடிவிடும்.
காய்ந்து போய் நாள்பட்ட அழுக்காக உள்ளதை அம்மோனியா போட்டு துவைக்கலாம். அரைவாளி தண்ணீரில் மூன்று டீஸ்பூன் அமோனியா விட்டு இருபது நிமிடங்கள் ஊறவைக்கவும் பின்னர் பிரஸ் வைத்து தேய்த்தால் அழுக்கு எளிதில் போகும்.
சமையல் வாசனை போக
ஏப்ரானில் வெங்காயம், வெள்ளைப்பூண்டு, உள்ளிட்ட வாசனைகள் வருவது இயல்பு. எனவே இந்த வாசனை நீங்க ஹைட்ரஜன் பெராக்ஸைடை 10 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் துவைக்கவேண்டும்.
பால் வாசனை போக
ஏப்ரானில் அடிக்கடி பால் கொட்டி ஒரு மாதிரியான வாசனை ஏற்படும். இதனை வாசனைப் போக வெள்ளை வினிகர் விட்டு ஊறவைத்து அலசினால் வாசனை போகும். ஏப்ரான் பளிச் என்று ஆகும்.
கைப்பிடி துணிகள்
சமையலறையில் அதிகம் உபயோகப்படுத்தும் ஒரு பொருள் கைப்பிடித்துணிகள். என்னதால் ஸ்டீல் கைப்பிடிகள் இருந்தாலும் துணியில் லாவகமாக பிடித்து உபயோகிப்பதையே பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். சமைலறை மேடை சுத்தம் செய்வதற்கும் துணிகள்தான் வசதியானது. எனவே அவற்றை தினமும் துவைத்து காயப்போடவேண்டியது அவசியம். சோப் பவுடர் போட்டு ஊறவைத்து அலசிய பின்னர் எலுமிச்சையுடன், உப்பு சேர்த்த தண்ணீரில் அலசி காயவைத்தால் தேவையற்ற பிசுக்குகளும், வாசனைகளும் போகும் துணியும் சுகந்த வாசனையோடு சுத்தமாகும்.



Click it and Unblock the Notifications
