Latest Updates
-
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்..
மனதை கவரும் மலர் பராமரிப்பு

மலராத மொட்டுக்கள்
பூக்களை அலங்கரிக்க வாங்கும் போது முழுமையாக மலராத மொட்டுக்களை தேர்ந்தெடுப்பது நல்லது. அப்போதுதான் அவை வீட்டினுள் வைக்கும்போது மலரும். அத்துடன் நீண்ட நாட்களுக்கு வாடிப்போகாமல் இருக்கும். கூடவே சுகந்தமான நறுமணமும் கிடைக்கும்.
தண்ணீர் அவசியம்
பூ ஜாடியில் அலங்கரிக்கும் முன்பு அழுகிய, சேதமடைந்த இலைகளையும், பூக்களின் இதழ்களையும் அகற்றிவிட வேண்டும். பூக்களின் காம்புகள் முழுமையாக மூழ்கும் வகையில் தண்ணீரை ஊற்றி, 24 மணி நேரம் வைக்க வேண்டும். இதன் பிறகு பூக்களை சாடியில் வைக்கலாம்.
ஐந்து இலைகளை விட்டு, காம்பை வெட்டவும். பூக்களுக்கு சேர வேண்டிய தண்ணீர் மற்றும் சத்து காற்றடைப்பால் சேராமல் போவதை தடுக்க காம்பைத் தண்ணீருக்கு அடியில் வைத்து வெட்ட வேண்டும். காம்பை சாய்வாக வெட்டுவதால் பூக்களுக்கு அதிக அளவில் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது.
பூ ஜாடியில் பாக்டீரியாக்கள் வளர்ந்து பூக்களின் தண்ணீர் ஈர்க்கும் சக்தியை பாதிக்காமல் இருக்க சாடியில் செம்பில் தயாரிக்கப்பட்ட சிறிய பொருளை போட்டு வைக்கலாம்.
குளிர்ச்சியான இடம்
பூக்கள் அதிக நாள் வாடாமல் இருக்க அவற்றை குளிர்ந்த காற்று படும் வகையில் ஜன்னலுக்கு அருகில் வைப்பது நல்லது. எந்த சூழ்நிலையிலும் வெயில் படக்கூடாது. பழங்கள், காய்கறிகள் ஆகியவை "எத்திலீன்" என்ற வாயு வெளியிடுகின்றன. இதனால் அவற்றிர்கு அருகில் பூக்களை வைத்தால் அவை விரைவில் வாட வாய்ப்புள்ளது. எனவே எந்த பாதிப்பும் இல்லாமல் குளிர்ச்சியாக வைக்கவும். அது மட்டுமல்லாது தினமும் பூ ஜாடியில் உள்ள தண்ணீரை மாற்ற வேண்டும். இது போல கவனம் செலுத்தி பராமரித்தால் பூக்கள் நீண்ட நாட்களுக்கு வாடாமல் மலர்ந்து சிரிக்கும்.



Click it and Unblock the Notifications