Latest Updates
-
சங்கரா மீன் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
3 ஸ்பூன் வேர்க்கடலை இருந்தா பீர்க்கங்காயோட சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - தாறுமாறா இருக்கும -
ஹிமாலயன் வயகரா என்று அழைக்கப்படும் இந்த காளானின் விலை எவ்வளவுனு தெரிஞ்சா மயக்கமே வந்துரும்... -
சிம்ம ராசியில் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 2 நாட்கள் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
1 கப் முருங்கைக்கீரையும், 1/2 கப் பொட்டுக்கடலையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 04, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
தீபாவளிக்கு பின் உதயமாகும் புதன்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசப்போகுது! -
சனிபகவானின் வக்ர இயக்கம் முடிவுக்கு வருவதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
1/2 கப் ரவை இருந்தா போதும்.. தீபாவளிக்கு சூப்பரான ஸ்வீட் செய்யலாம்.. என்னன்னு பாருங்க.. -
Skin Care: முகப்பரு இல்லாத கண்ணாடி மாதிரி சருமம் வேண்டுமா? அப்ப இந்த தானியங்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க
உருளைக்கிழங்கு சமையலறையை தாண்டி உங்கள் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்தும் அற்புதங்கள் என்ன தெரியுமா?
உருளைக்கிழங்கிற்கு சமையலறையைத் தாண்டியும் பல பலன்கள் உள்ளது. நமது வீட்டை சுத்தமாக பராமரிப்பது முதல் காயங்களை ஆற்றுவது வரை உருளைக்கிழங்கு பல நன்மைகளை நமக்கு வழங்குகிறது.
நாம் சாப்பிடும் அனைத்து உணவுப்பொருள்களுக்கும் உணவுப்பொருள் என்பதை தாண்டி பல்வேறு பலன்கள் இருக்கிறது. ஆனால் பெரும்பாலும் நாம் அதை அறிவதில்லை. அந்த வகையில் உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு உணவுப்பொருள் உருளைக்கிழங்காகும். அனைத்து இந்திய சமையலறைகளிலும் உருளைக்கிழங்கு நிச்சயம் இடம் பெற்றிருக்கும்.

உருளைக்கிழங்கிற்கு சமையலறையைத் தாண்டியும் பல பலன்கள் உள்ளது. நமது வீட்டை சுத்தமாக பராமரிப்பது முதல் காயங்களை ஆற்றுவது வரை உருளைக்கிழங்கு பல நன்மைகளை நமக்கு வழங்குகிறது. இந்த பதிவில் உருளைக்கிழங்கு மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னென்னெ என்று தெரிந்து கொள்ளாலாம்.

கறைகளை நீக்க
மஞ்சள், பெர்ரி மற்றும் பீட்ரூட் போன்ற உணவுகள் உணவிற்கு அற்புதமான வண்ணங்களை கொடுக்கக்கூடிய பொருட்களாகும். ஆனால் இவை ஆடையில் கடுமையான கறைகளை ஏற்படுத்தக்கூடும். இதனை போக்க கடினமாக துவைக்க வேண்டியிருக்கும். எனவே ஆடையை துவைக்கும்போது அரை உருளைக்கிழங்கை கறையுள்ள பகுதியின் மீது நன்கு தேய்க்க வேண்டும். இது புல் மற்றும் மை கறைகளிலும் நன்றாக வேலை செய்யும்.

வெப்பநிலையை தக்க வைக்க
இது பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு முறையாகும். உருளைக்கிழங்கு வியக்கத்தக்க அளவில் நீண்ட நேரம் அவற்றின் வெப்பநிலையைத் தக்க வைத்துக் கொள்ளும் குணம் கொண்டது. எனவே நீங்கள் இரவில் ரொம்ப குளிராக உணர்ந்தால், உங்கள் பாக்கெட்டில் சூடான இரண்டு உருளைக்கிழங்கை வைத்துக்கொள்ளவும். இது உங்கள் உடலின் வெப்பநிலையை சமநிலைக்கு கொண்டுவரும்.

ஜன்னல்களை சுத்தப்படுத்த
உருளைக்கிழங்கு கண்ணாடியை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. சமைக்காத உருளைக்கிழங்கை எடுத்து, உங்கள் ஜன்னல்கள், கார் விண்ட்ஸ்கிரீன் அல்லது கண்கண்ணாடிகளுக்கு மேல் தேய்க்கவும். இதன்மூலம் உங்கள் கைகளுக்கு சேதம் விளைவிக்காமல், கெமிக்கல்கள் இல்லாமல் ஒளிரும் கண்ணாடியை பெறலாம். இது பிளாஸ்டிக்கிலும் நன்றாக வேலை செய்யும்.

உருளைக்கிழங்கு சாறு
உருளைக்கிழங்கு சாறு பல நூற்றாண்டுகளாக பல்வேறு நோய்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. இது புண்கள், சுளுக்கு, கீல்வாதம், சியாட்டிகா, நெஞ்செரிச்சல் மற்றும் சிராய்ப்பு ஆகியவற்றிற்கு எதிராக பயனுள்ளதாக கருதப்படுகிறது. உருளைக்கிழங்கு சாற்றில் பல வைட்டமின்கள் நிறைந்துள்ளது, மேலும் இதனை செய்வது மிகவும் எளிதானது. அல்சர் இருப்பவர்கள் உருளைக்கிழங்கு சாறை குடிப்பது அவர்களுக்கு விரைவில் நிவாரணத்தை வழங்கும்.

மருக்களை அகற்ற
மருக்கள் எரிச்சலை ஏற்படுத்தும் ஒன்றாகும். இதனை விரைவில் நீக்க விரும்பினால் உருளைக்கிழங்கை பயன்படுத்தலாம். ஒரு உருளைக்கிழங்கை வெட்டி அதன் முனையை மருவின் மீது நன்றாக தேய்த்து அதன் சாற்றை மருவின் மீது விடவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் மருக்கள் மறையத் தொடங்கும்.

பாத்திரங்கள் பிரகாசிக்க
உங்கள் பாத்திரங்கள் கறையுடனும், பிரகாசம் குறைந்தும் காணப்பட்டால் அதனை சரி செய்ய உருளைக்கிழங்கை தாராளமாக பயன்படுத்தலாம். பாத்திரத்தில் கறை இருக்கும் இடத்தில் உருளைக்கிழங்கை தேய்க்கலாம், இதைவிட சிறந்த வழி உருளைக்கிழங்கு நீரில் பாத்திரத்தை ஊறவைத்து விளக்குவது. உருளைக்கிழங்கு வேகவைக்கப்பட்ட நீரில் பாத்திரத்தை ஊறவைத்து கழுவினால் பாத்திரம் பிரகாசமடையும். சிறந்த முடிவுகளுக்கு எந்த உரிக்கப்படுகிற தோல்களையும் தண்ணீரில் சேர்க்கவும்.

பூச்செடிகள் வளர்க்க
உருளைக்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் பானை தாவரங்களை வளர்க்க உதவும். உருளைக்கிழங்கில் ஒரு துளையிட்டு அதற்குள் செடியை வைத்து அதனை அதற்க்குபின் அதனை மண்ணிற்குள் புதைக்கவும். செடிகள் வளரத் தொடங்கிய பின் வெட்டிய உருளைக்கிழங்கை சுற்றி தூவவும். இது செடி நன்கு வளர்வதற்கான ஊட்டச்சத்தை வழங்கும்.

தலைவலி மருந்து
பல நூற்றாண்டுகளாக தலைவலியைக் குறைக்க உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது, இதற்கு உங்களுக்கு சில துண்டுகள் மட்டுமே தேவைப்படும். தலையில் உருளைக்கிழங்கை அழுத்தி தேய்க்கவும் அல்லது உருளைக்கிழங்கு துண்டை தலையில் கட்டாக கட்டவும்.

உணவில் இருந்து உப்பை நீக்க
சமைக்கும்போது தெரியாமல் உணவில் உப்பு அதிகமாகி விட்டால் அதனை தூக்கி எறிய வேண்டாம். மாறாக அதில் சில உருளைக்கிழங்கு துண்டுகளை நறுக்கி போடவும். இதனை பத்து நிமிடம் அப்படியே உணவில் இருக்க விட்டால் இது உப்பின் அளவை சமநிலைப்படுத்தும்.



Click it and Unblock the Notifications
