For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாவு பிசையும்போது இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணா... பந்துபோல மென்மையான சப்பாத்தி வருமாம்...!

மாவை பிசைந்த பிறகு, ஈரமான மஸ்லின் துணியால் மூடி வைக்க வேண்டும். மென்மையான ரொட்டியை தயார் செய்ய குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் மாவை ஊற வைக்க வேண்டும்

|

ரொட்டி அல்லது சப்பாத்தி ஒரு இந்திய பிரதான உணவாகும். இது பருப்பு அல்லது கறிகளுடன் ருசிக்கப்படுகிறது. நாம் அன்றாடம் ரொட்டி அல்லது சப்பாத்தியை செய்து சாப்பிடுகிறோம். சப்பாத்தி செய்வது எளிமையானதாகத் தோன்றினாலும், பதமான அளவில் மாவைப் பிசைந்து வட்ட வடிவ ரொட்டியை உருட்டுவது நிச்சயமாக ஒரு கலை. மாவை பிசைந்த பிறகும் ரொட்டிகள் பந்துபோல எழாமல், மென்மையாக இல்லை என்றால், நீங்கள் மாவை சரியாக பிசையவில்லை என்று அர்த்தம். நிறைய பேர் வீட்டில் சப்பாத்தி செய்யும்போது, அது பேப்பர் அல்லது அப்பளம் போல மென்மையாக இல்லாமல் இருக்கும்.

easy-tips-to-make-softer-rotis-at-home-in-tamil

நீங்களும் இந்தச் சிக்கலைத் தொடர்ந்து எதிர்கொண்டால், இனி கவலையை விடுங்க. வீட்டிலேயே பந்துபோல மென்மையான ரொட்டியை உருவாக்க உதவும் எளிய உதவிக்குறிப்புகளைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துங்கள்

வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துங்கள்

உணவு நிபுணர்களின் கூற்றுப்படி, சப்பாத்தி மற்றும் ரொட்டி மாவு செய்யும்போது வெதுவெதுப்பான நீரை பயன்படுத்த வேண்டும். மென்மையான ரொட்டியை உருவாக்க வெதுவெதுப்பான நீர் உங்களுக்கு உதவும். மாவிற்கு ஏற்ப தண்ணீர் ஊற்றி பிசைந்து ரொட்டியை தயாரித்தால், சப்பாத்தி மற்றும் ரொட்டி மென்மையாக வரும்.

மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும்

மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும்

மாவை பிசையும்போது, அவசரப்பட வேண்டாம். எப்பொழுதும் மாவை பிசைய உங்களுக்கு நேரம் கொடுங்கள். மாவை நன்றாக பிசைய வேண்டும். அது எல்லா கோணங்களிலும் நன்றாக தெரிகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நன்றாக மாவை பிசையும்போது, அது மென்மையான ரொட்டி வர உதவும்.

மென்மையான மாவை பிசையவும்

மென்மையான மாவை பிசையவும்

ரொட்டிக்கு மாவை பிசையும் போது, மாவு கெட்டியாகவோ அல்லது கடினமாகவோ இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மாவை உருண்டைகளாக உருட்டும் அளவுக்கு மென்மையாகவும், உருட்டல் மென்மையாகவும் எளிதாகவும் இருக்க வேண்டும். ரொட்டியை உருட்டும்போது நீங்கள் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டியிருந்தால், உங்கள் மாவு சரியாக இருக்காது. மென்மையாக மாவை பிசைந்தால்தான், சப்பாத்தி மற்றும் ரொட்டி மென்மையாக இருக்கும்.

20 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும்

20 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும்

மாவை பிசைந்த பிறகு, ஈரமான மஸ்லின் துணியால் மூடி வைக்க வேண்டும். மென்மையான ரொட்டியை தயார் செய்ய குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் மாவை ஊற வைக்க வேண்டும். மாவு 20 நிமிடங்கள் ஊறினால், சப்பாத்தி மற்றும் ரொட்டி மென்மையாகவும் பந்துபோலவும் வரும்.

மற்றொரு நிமிடம் பிசையவும்

மற்றொரு நிமிடம் பிசையவும்

ரொட்டியை உருட்டுவதற்கு முன், குறைந்தபட்சம் 1 நிமிடமாவது மாவை மீண்டும் பிசைவதை உறுதி செய்து கொள்ளுங்கள். பிசைந்த மாவை உருண்டை செய்து தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு எடுங்கள். இருபுறமும் பொன்னிறமாக வரும்வரை மாற்றிபோட்டு சப்பாத்தியை எடுக்கவும். இப்போது உங்கள் சப்பாத்தி மென்மையாகவும் பந்துபோலவும் வரும். அதற்கு குருமா அல்லது சட்னி செய்து சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

easy tips to make softer rotis at home in tamil

Here we are talking about the easy tips to make softer rotis at home in tamil.
Story first published: Monday, January 23, 2023, 16:08 [IST]
Desktop Bottom Promotion