For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க வீட்டு ரோஜா செடியில் இப்படி கொத்து கொத்தா பூக்கணுமா? இத மட்டும் போடுங்க போதும்...

மண் இல்லாமல் உங்கள் வீட்டில் ரோஜாச் செடிகளை சூப்பராக நிறைய பூக்கும்படி வளர்ப்பது பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம். அதைப் படித்துப் பயன்படுத்தி, பயன்பெறுங்கள்.

By Mahibala
|

நம்முடைய வீடுகளில் செடிகள் வளர்ப்பது என்றால் எல்லோருக்கும் பிடித்த விஷயம். அதில் ஆண், பெண் வேறுபாடு என்றெல்லாம் கிடையாது. ஏனென்றால் அது தன்னையும் அழகுபடுத்திக் கொண்டு நம்முடைய வீட்டையும் அழகுபடுத்தும். அது மட்டுமில்லங்க. நம்முடைய மனதை அமைதிப்படுத்தி புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

Grow Roses

அதிலும் குறிப்பாக, ரோஜாச்செடிகள் வளர்க்கப் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா என்ன? ரோஜாக்களைப் பார்த்தாலே நம்முடைய மனம் மகிழ்ச்சியடைந்து விடும். ரோஜாக்கள் தான் எப்போதுமே நம்முடைய தோட்டங்களை அழகுபடுத்தும். அதேசமயம் அது நம்முடைய தோட்டத்தில் நிறைய இடத்தையும் அடைத்துக் கொள்ளும் வாய்ப்புண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொட்டிகளில் வளர்க்கலாமா?

தொட்டிகளில் வளர்க்கலாமா?

ரோஜாச் செடிகளை தொட்டிகளில் வளர்ப்பதை விடவும் மண்ணில் வளர்த்தால் தான் நிறைய பூக்கும். தொட்டிகளில் வளர்க்கக்கூடாது என்றெல்லாம் சிலர் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் உண்மை அப்படியல்ல. எங்கு வளர்த்தாலும் அந்த செடிகள் வளரத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்தால் போதும். தொட்டிகளில் தாராளமாக ரோஜாச் செடிகளை வைத்து நிறைய கொத்து கொத்தாக பூக்கள் பூக்க வைக்க முடியும்.

MOST READ: நம்ம முழு உடம்பையும் தாங்கிப்பிடிக்கறது இந்த எலும்புதானாம்... எப்படி தாங்குதுனு நீங்களே பாருங்க...

மண்ணே தேவையில்லை

மண்ணே தேவையில்லை

பொதுவாக செடிகள் வளர்க்க நல்ல மண் வளம் இருக்க வேண்டும். இல்லையென்றால் செடி வேகமாக பட்டுப்போய்விடும். செழித்து வளராது. பூக்காது. காய்க்காது எ்னறு சொல்வார்கள். அதனால் தொட்டிகளில் கூட மண்ணை நிரப்பித் தான் வளர்ப்பார்கள். ஒரு விஷயத்தை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். தொட்டிகளில் அடைக்கப்பட்ட மண்ணில் எவ்வளவு நாள் ஊட்டச்சத்து அப்படியே இருக்கும்?

ஆம். அதனால் தொட்டிகளில் மண்ணே இல்லாமல் மிக எளிதாக சூப்பராக கொத்துக் கொத்தாக பூக்கும்படி செடிகளை வளர்க்க முடியும். எப்படி என்று பார்க்கலாம்.

கொக்கோ பெட் பிரிக்

கொக்கோ பெட் பிரிக்

மண்ணுக்கு பதிலாக இந்த கொக்கோ பெட் பிரிக்கைத் தான் பயன்படுத்தப் போகிறோம். பேரை பார்த்து பயப்படாதீங்க. இது ஒன்னுமில்ல. நன்கு சுத்தப்படுத்தி மட்க வைக்கப்பட்ட தேங்காய் நார் கலவை தான். இது செங்கல் போன்று பேக் செய்யப்பட்டு விற்கப்படும். இதை வெளியில் எங்கும் தேடி அலையத் தேவையில்லை. செடிகள் விற்கும் நர்சரி கடைகளிலேயே கிடைக்கும். இது நிறைய அளவுகளில் கிடைக்கும். ஒரு செங்கல் அளவு உள்ள பாக்கெட்டை வாங்கிளால் 3 செடிகள் வரை உங்களால் நட முடியும். இது வெறும் 30 ரூபாய் முதல் 45 ரூபாய் தான் செலவாகும்.

மண் புழு உரம்

மண் புழு உரம்

மண் புழு உரம் முழுக்க முழுக்க செடிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்தைக் கொடுக்கும் என்பது என்பது உங்களுக்குத் தெரியும். செடிகள், உரங்கள் விற்கும் கடைகளில் இந்த மண்புழு உரங்கள் கிடைக்கின்றன. ஆனால் கிலோ 40 ரூபாய் அளவு வரை விற்கிறார்கள். ஆனால் நம்முடைய ஊர்களில் அரசாங்கத்தால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஒரு அலுவலகம் கிராமப்புரங்களில் கூட இருக்கிறது. அங்கு சென்று வாங்கினால் மண்புழு உரம் உங்களுக்கு கிலோ பத்து ரூபாய்க்கு கூட கிடைக்கும்.

MOST READ: இவ்ளோ அழகா இருந்தும் முரட்டு சிங்கிளாதான் இருப்பேன்னு அடம்பிடிக்கும் நடிகைகள் யார்யார் தெரியுமா?

எப்படி தயார் செய்வது?

எப்படி தயார் செய்வது?

கொகோ பெட் பிரிக்கை (ஒரு செங்கல் அளவு) ஒரு பெரிய பௌல் எடுத்துக் கொண்டு அதில் 3 லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி அதற்குள் போட்டு ஊற விடுங்கள். கிட்டதட்ட முக்கால் மணி நேரத்தில் முழுமையாக ஊறிவிடும். கிட்டதட்ட 3 கிலோ அளவுக்கு உங்களுக்கு உதிரியாகக் கிடைக்கும். அது முழுதும் ஊறியதும் சற்று உலர விடுங்கள்.

உரக்கலவை

உரக்கலவை

லேசாக அந்த தண்ணீர் முழுக்க நார் உறிஞ்சிக் கொண்ட பின் அந்த தேங்காய் நார் எவ்வளவு இருக்கிறதோ அதே அளவுக்கு சரிக்கு நிகராக மண் புழு உரத்தையும் அதில் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். இரண்டும் ஒன்றோடு ஒன்று கேலந்த பின் தொட்டிகளில் நிரப்ப ஆரம்பிக்கலாம்.

ரோஜா செடி நடுவது எப்படி?

ரோஜா செடி நடுவது எப்படி?

எந்த தொட்டியில் அல்லது பிளாஸ்டிக் டப்பாக்களில் செடி நடப்போகிறோமோ அதை எடுத்து இரண்டு கரண்டி அளவு இந்த மண்புழு உரம் மற்றும் தேங்காய் நார்க்கலவையை போடுங்கள். அதற்கடுத்து இரண்டு கைப்பிடி அளவுக்கு வெங்காயத்தோல் மற்றும் வீட்டில் இருந்த காய்கறிக் கழிவு சேருங்கள். நிறைய சேர்க்கக்கூடாது. செடி வெப்பமாகி பட்டுப் போய்விடும்.

பிறகு மீண்டும் மண்புழு உரம் மற்றும் தேங்காய் நார்க்கலவையை போட்டு அரை தொட்டி வரை நிரப்பி, அதில் வாங்கி வந்த ரோஜா செடியை வெளிப்புறத்தில் இருக்கும் பிளாஸ்டிக் பேப்ரை மெதுவாகக் கிழித்து விட்டு தொட்டியில் நடுங்கள். குறிப்பாக அற்த செடி இருக்கிற மண் கட்டியை உடைத்து விட்டு விடக்கூடாது. மீண்டும் மீதி உள்ள தொட்டி முழுவதும் தேங்காய் நார் கலவையைப் போட்டு நரப்பி தண்ணீர் தெளிக்க வேண்டும். அவ்வளவு தாங்க. பத்தே நாளில் இந்த செடி துளிர்த்து மொட்டு வைக்க ஆரம்பித்து விடும்.

MOST READ: மனித பிறப்பும் இறப்பும் இந்த லோகத்தில் தான் தீர்மானிப்பாங்களாம்... தேவி லோக மர்மங்கள்...

ரோஜா செடியை பராமரிக்கும் முறை

ரோஜா செடியை பராமரிக்கும் முறை

தொட்டியில் என்பதால் அடிக்கடி தொட்டியை இடம் மாற்றி வைக்கக் கூடாது.

உச்சி வெயில் படும் இடங்களில் ரோஜா தொட்டியை வைக்கக்கூடாது.

தினமும் காலை, மாலை இரண்டு வேளை தண்ணீர் அவசியம் ஊற்ற வேண்டும். மதிய நேரத்தில் கட்டாயம் ஊற்றக்கூடாது.

அவ்வப்போது வெங்காயத் தோல், முட்டை ஓடு, டீ டிகாஷன் ஆகியவற்றை அளவாகப் போடுங்கள். இரண்டு வாரத்துக்கு ஒரு முறை சிறிதளவு மண்புழு உரத்தை தூவி விடலாம்.

பூக்கள் நிறைய பூக்க வேண்டும், நலல் அடர் நிறத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தால், பீட்ரூட் தோல், வேகவைத்த உருளைக்கிழங்கு தோல் ஆகியவற்றையும், நல்ல நிறம் கிடைக்க தர்பூசணி தோலையும் சிறிது சிறிதாக வெட்டி செடியைச் சுற்றி போடுங்கள்.

பிறகு பாருங்கள். நீங்களே எதிர்பார்க்காத படி ஒவ்வொரு செடியும் ஒரு தோட்டம் போல பூத்துக் குலுங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Grow Roses Without Soil At Home

Roses are among the most beautiful of all garden plants, but they take up a lot of space in the garden. One option is to grow them in containers, which lets you take advantage of the space on a deck or patio, or even on stairways. Planting in pots also offers you more control of moisture levels and exposure to sunlight.
Story first published: Wednesday, June 19, 2019, 12:41 [IST]
Desktop Bottom Promotion