Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
இந்த உண்ணி எப்படியோ வீட்டுக்குள்ள வந்துடுதா?... ஈஸியா எப்படி விரட்டலாம்?...
உண்ணி அல்லது தெள்ளுப்பூச்சி என்னும் இறக்கை இல்லாத பூச்சியை பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். பொதுவாக நாய், பூனை, முயல், போன்ற விலங்குகளின் முதுகெலும்பில் இவை ஊறுவதை நாம் பார்த்திருக்கலாம்.
உண்ணி அல்லது தெள்ளுப்பூச்சி என்னும் இறக்கை இல்லாத பூச்சியை பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். பொதுவாக நாய், பூனை, முயல், போன்ற விலங்குகளின் முதுகெலும்பில் இவை ஊறுவதை நாம் பார்த்திருக்கலாம்.

சில நேரம் மனிதர்கள் மீதும் இவை மையம் கொண்டிருக்கலாம். இவற்றைப் பார்த்தாலே நமக்கு தூக்கம் பிடிக்காது. அந்த அளவிற்கு அருவருப்பான ஒரு பூச்சியாக இவை உள்ளன.

விலங்கு உண்ணிகள்
ஒன்று அல்லது இரண்டு உண்ணிகள் இருந்தாலும் அவைகள் வீட்டின் எந்த மூலையிலும் முட்டையிட்டு சில நாட்களில் அவை மிக அதிகமாக வளர காரணமாக இருக்கின்றன. இந்த முட்டைகள் முதலில் நுண் புழுக்களாக மாறி பிறகு உண்ணியாக வளர்கின்றன. உண்ணியின் முட்டைகள் ஒரு வருடம் வரை செயலற்றதாக இருக்க முடியும். ஆகவே ஒரு முறை வீடு முழுதும் தூய்மை படுத்திவிட்டு, இனி எப்போதும் உண்ணிகள் தொல்லை இல்லை என்று நீங்கள் நினைத்தால் ஏமாறுவது நீங்கள் தான். திடீரென்று வீட்டின் எந்த மூலையில் இருந்தும் உண்ணிகள் மறுபடி தோன்றலாம். ஆகவே உண்ணிகளை வெளியேற்றிய பிறகும் அடிக்கடி வீட்டை பராமரித்தால் மட்டுமே உண்ணிகளை முற்றிலும் ஒழிக்க முடியும்.

இயற்கை வழிகள்
உண்ணிகளைப் போக்க சில எளிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பின்பற்றி உண்ணிகளை அழிப்பது மட்டுமல்லாமல், மறுபடி அவை தோன்றாமல் இருக்க வழி செய்யலாம். உண்ணியைப் போக்க சில பயனுள்ள எளிய குறிப்புகள் இதோ...
உண்ணியைப் விரட்ட ஒரு எளிய வழி, அவற்றை வலையில் அடைப்பது தான். ஆகவே உண்ணி வலையை பயன்படுத்தி, அவற்றை அழிக்கலாம். பாத்திரம் தேய்க்கும் திரவம் கொண்டு நாய்களைக் குளிப்பாட்டினால் அதன் உடம்பில் உள்ள உண்ணிகளும் அழிந்து விடும். இருந்தாலும், உண்ணி வலையை பயன்படுத்தி வீடு முழுவதும் உள்ள உண்ணியைப் விரட்டி அடிக்கலாம்.

டிஸ்வாஷ்
மூலப்பொருட்கள் :
பாத்திரம் கழுவும் திரவம்
தட்டு அல்லது கிண்ணம்
மெழுகுவர்த்தி
வெந்நீர்
செய்முறை
இரவு நேரத்தில் வீட்டின் ஒவ்வொரு அறையிலும் நடுவில், எதாவது ஒரு தட்டு அல்லது கிண்ணத்தை தரையில் வைக்கவும். அந்த பாத்திரத்தில் வெந்நீரை நிரப்பவும். அந்த நீரில் பாத்திரம் கழுவும் திரவத்தைச் சேர்க்கவும். ஒரு மூடி அளவு திரவத்தை சேர்க்கலாம். ஒவ்வொரு தட்டு அல்லது கிண்ணத்திலும் மெழுகுவர்த்தியை வைக்கவும். கிண்ணத்தில் மெழுகுவர்த்தியை வைக்க முடியவில்லை எனில், கிண்ணத்தின் அருகில் வைக்கவும்... இப்போது மெழுகுவர்த்தியை பற்ற வைக்கவும். இந்த வெளிச்சத்தை நோக்கி உண்ணிகள் வரும்போது, அவை பிசுபிசுப்பு நிறைந்த இந்த நீரில் விழுந்து இறந்துவிடும். மறுநாள் காலையில் இந்த நீரை நீங்கள் அகற்றி விடலாம்.
உண்ணிகள் மிகவும் அதிகமாக இருந்தால் இந்த முறையை தொடர்ந்து மூன்று அல்லது நான்கு இரவுகள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கவனிக்க வேண்டியது
இரவில் நெருப்பை பற்ற வைப்பதால் சற்று கவனமாக இருக்க வேண்டும். மெழுகுவர்த்தி எரிந்து முடியும் வரை விழித்திருப்பது நல்லது. குழந்தைகளும், வீட்டு விலங்குகளும், அங்கும் இங்கும் அறையில் நடந்து கொண்டிருக்காமல் பார்த்துக் கொள்ளவும்.

மூலிகை ஸ்ப்ரே
வீட்டில் அதிகமாக உண்ணிகள் இருந்தால் நீங்கள் மூலிகை ஸ்ப்ரேயை முயற்சிக்கலாம். இந்த மூலிகை ஸ்ப்ரே , எலுமிச்சை சாறு மற்றும் விட்ச் ஹஸல் போன்ற மூலப்பொருட்களைக் கொண்டது. இவை குழந்தைகளுக்கும் வீட்டிலுள்ள விலங்குகளுக்கு பாதுகாப்பானதாக இருப்பவை. இப்போது இந்த ஸ்ப்ரே செய்யும் முறையைப் பார்க்கலாம்.
மூலப்பொருட்கள்
வினிகர் - 1 கேலன்(4 லிட்டரை விட சற்று குறைவு )
தண்ணீர் - 1/2 கேலன் ( 2 லிட்டரை விட சற்று குறைவு )
எலுமிச்சை சாறு - 16அவுன்ஸ் (500மிலி விட சற்று குறைவு)
விட்ச் ஹஸல் - 8அவுன்ஸ் (250 மிலி விட சற்று குறைவு)
தோட்ட ஸ்ப்ரேயர் - 1 (6-7 லிட்டர் தண்ணீர் கொள்ளும் அளவிற்கு இருத்தல் வேண்டும் )
பிரெஷ் வாக்யும் பை - 1
செய்முறை
முதலில் எல்லா இடத்தையும் சுத்தம் செய்யவும் பின் மூலிகை ஸ்ப்ரே பயன்படுத்தி உண்ணியை அகற்றவும் வாக்கம் க்ளீனரால் சுத்தம் செய்ய முடியாத பொருட்களை நீரில் கழுவி விடவும். இதன் மூலம் நுண் புழுக்கள் மற்றும் உண்ணி முட்டைகள் அகன்று விடும். இப்போது வாக்கம் கிளீனர் கொண்டு வீட்டின் எல்லா மூலைகளையும் சுத்தம் செய்யவும். புதிய வாக்யும் பையை பயன்படுத்துவதால் காற்றோட்டம் தங்கு தடையின்றி கிடைக்கும். ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்ட பையாக இருந்தால் அதில் இருக்கும் குப்பைகளால் காற்றோட்டம் தடைபடும். சுத்தம் செய்து முடித்தவுடன், வினிகர், எலுமிச்சை சாறு, விட்ச் ஹஸல் ஆகியவற்றை சேர்த்து கலந்த நீரை எடுத்துக் கொள்ளவும். தோட்ட ஸ்ப்ரேயரில் இந்த நீரை ஊற்றிக் கொள்ளவும். ஸ்ப்ரே செய்யத் தொடங்கவும். உங்கள் வீட்டின் கார்பெட், மரக்கலன்கள் , வீட்டு விலங்கின் படுக்கை, ஜன்னல் இடுக்குகள், தரை , என்று வீட்டின் எல்லா மூலை முடுக்கிலும் இந்த நீரைத் தெளித்து விடுங்கள். உங்கள் வீட்டில் உண்ணியின் தாக்கம் இருப்பதற்கு ஏற்ப 2-7 நாட்கள் வரை இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்திடுங்கள். உண்ணி அதிகம் தென்படாதபட்சத்தில் 3-4 நாட்களுக்கு ஒரு முறை இதனைச் செய்து வரலாம். அதன் பிறகு வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம். உண்ணி படர ஆரம்பிக்கும் போதே இந்த ஸ்ப்ரே அடிக்கத் தொடங்கினால், வாரத்திற்கு ஒரு முறை இதனைச் செய்தால் போதுமானது.

உப்பு நீர்
உங்கள் வீட்டின் கார்பெட்டில் பரவி இருக்கும் உண்ணியைப் போக்க உப்பு ஒரு சிறந்த தீர்வாகும். உண்ணிகளின் உடலில் இருந்து நீர்சத்தை வெளியேற்ற உப்பு உதவுகிறது. மிக எளிமையான இந்த குறிப்பைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.
மூலப்பொருட்கள்
கல் உப்பு அல்லது தூள் உப்பு (உண்ணி இருக்கும் இடத்திற்கு ஏற்ப இதன் அளவு தேவைப்படும்.)
ஸ்ப்ரே பாட்டில்
செய்முறை
கல் உப்பாக இருந்தால் அதனை தூளாக்கிக் கொள்ளவும்.
ஸ்ப்ரே பாட்டிலில் உப்பை சேர்த்து நீர் ஊற்றிக் கொள்ளவும்.
உப்ப கரைந்தவுடன், கார்பெட்டில் இந்த நீரை தெளித்து விடவும்.
12-48 மணிநேரம் அப்படியே விடவும்.
2 நாட்கள் கழித்து வாக்யும் க்ளீனரால் உங்கள் வீட்டை சுத்தம் செய்யவும்.

போரிக் அமிலம்
உண்ணிகளை விரட்டும் நேரத்தில், போரிக் அமிலம், உப்பை போல் செயல்படுகிறது. போரிக் அமிலம், உண்ணிகளில் உள்ள நீர்சத்தை வற்றச் செய்து, அதனால் உண்ணிகள் உயிரிழக்கின்றன. உண்ணிகள் அல்லது அந்த முட்டை அல்லது நுண் புழுக்கள் இருப்பதாக சந்தேகிக்கும் இடங்களில் போரிக் அமிலத்தை தெளிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.
மூலப்பொருட்கள்
போரிக் அமிலம்
ஷேக்கர் (உப்பு அல்லது மிளகிற்கு பயன்படுத்தும் ஒரு டப்பா ) ஒரு பிளாஸ்டிக் மூடி இருக்கும் ஒரு டப்பாவை எடுத்துக் கொள்ளவும். அதன் மூடியில் சிறு சிறு ஓட்டைகள் போட்டு கொள்வதால் வீட்டிலேயே ஒரு ஷேக்கர் செய்து விடலாம்.) இந்த டப்பாவில் மிகச் சிறிய கூழாங்கற்களைப் போடுவதால், அதில் சேமித்து வைக்கப்படும் போரிக் அமிலம் கட்டிப் பிடிக்காமல் இருக்கும். பிறகு இந்த டப்பாவில் மூன்றில் இரண்டு பங்கு அளவிற்கு போரிக் அமிலத்தை சேர்க்கவும். மறக்காமல் இந்த டப்பாவில் போரிக் அமிலம் என்று பெயர் எழுதி வைக்கவும்.
செய்முறை
போரிக் அமிலம் ,சமயலறையில் பயன்படுத்தும் பொருட்களைப்போல் இருப்பதால் யார் வேண்டுமானாலும் அதனை எடுத்து பயன்படுத்தலாம். அதனால் மறக்காமல் அதில் பெயர் எழுதி வைக்கவும். போர்க் அமிலம் தெளிக்கும் முன்பு, அந்த இடத்தை சுத்தம் செய்து கொள்ளவும். கீழே இருக்கும் பொம்மைகள், பை, ஷூ போன்றவற்றை வேறு இடத்தில் மாற்றி வைக்கவும்.
ஒரு மெல்லிய படலமாக போரிக் அமிலத்தை தரையில் தெளிக்கவும். டப்பாவை நன்றாக குலுக்கி கார்பெட்டில் இந்த அமிலத்தை தெளிக்கவும். ஒரு மென்மையான பிரஷ் கொண்டு தெளித்த அமிலத்தை முழு கார்பெட்டிலும் தடவுங்கள். போரிக் அமிலம் துணிகளின் நிறத்தை மாற்றலாம். ஆகவே பயன்படுத்துவதற்கு முன் இதனை ஒரு முறை சோதித்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் உள்ள மரக்கலன்கள் மீதும் மறவாமல் இந்த அமிலத்தைத் தெளித்திடுங்கள். 12-48 மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு போரிக் அமிலம் தெளித்த இடங்களை முற்றிலும் சுத்தம் செய்திடுங்கள். தொடர்ச்சியாக சுத்தம் செய்து கொண்டே இருங்கள். கார்பெட்டிற்குள் மற்றும் வேறு இடங்களில் போரிக் அமிலத்தை செலுத்தியதால் அவை தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருக்கும். ஆகையால் உண்ணிகள் அழிந்த வண்ணம் இருக்கும். தொடர்ந்து சுத்தம் செய்தால் இறந்த உண்ணிகளை உடனுக்குடன் சுத்தம் செய்து விடலாம்.
ஒரு மாதத்திற்கு பிறகு உங்கள் கார்பெட்டை ஒரு முறை துவைத்துக் கொள்ளலாம். போரிக் அமிலத்தில் நச்சுத்தன்மை மிகக் குறைந்த அளவே உள்ளது. மனிதருக்கும், விலங்குகளுக்கும் இது எந்த ஒரு தீங்கையும் தராது. இருந்தாலும், குழந்தைகள் மற்றும் விலங்குகள் இதனை பயன்படுத்தாத விதத்தில் வைக்கவும். சாப்பாடு அருகில் இதனை வைக்க வேண்டாம். உணவு சமைக்கும் இடத்தில் இதனைத் தெளிக்க வேண்டாம்.

புதைபடிவ பாசிநிலம்
இது என்ன புதைபடிவ பாசிநிலம்? டயடோம் என்பது , ஒரு நுண்ணிய பாசி படிமங்கள் . மாவு போன்ற வடிவத்தில் இருக்கக்கூடிய தூளாகும். உப்பு நீர் மற்றும் சுத்தமான நீரில் இருக்கக்கூடிய பாசியின் ஒரு வகை தான் இந்த டயடோம். அது சரி, இந்த பாசி, உண்ணிகளின் இருப்பை எப்படி அழிக்கும்? டயடோமின் அனுச்சுவர்கள், சிலிக்காவால் ஆனது. சிலிக்கா என்பது கண்ணாடியின் முக்கிய கூறாகும். இந்த நுண்ணிய டயடோமின் வெளிப்புறத் தோற்றம் உண்ணி மற்றும் வேறு பூச்சிகளுக்கு அபாயத்தை தோற்றுவிக்கும் வகையில் இருக்கும். டயடோமில் உள்ள சிலிக்கா, உண்ணிகளின் உடலை கிழிக்கும்படி இருப்பதால் அவை இறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலும், இந்த டயடோம், மனித மற்றும் விலங்கு உயிர்களுக்கு எந்த ஒரு பாதிப்பையும் செய்வதில்லை. குளங்களை வடிகட்டுவதற்கு பயன்படுத்தும் பாசி அல்லாமல், உணவிற்கு பயன்படுத்தும் பாசிகளை வாங்கி பயன்படுத்துவது நல்லது.
இந்த டயடோமை எப்படி பயன்படுத்துவது
கீழே கூறப்பட்டுள்ள வழிமுறைகள் படி இதனை பயன்படுத்த வேண்டும்.
கார்பெட்களை பிரஷ் மூலமாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். வாக்யும் க்ளீனரால் சுத்தம் செய்ய முடியாதவற்றை வெந்நீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளுங்கள். உண்ணிகள் இருப்பதாக சந்தேகிக்கும் இடங்களில் டயடோமை தெளித்து விடுங்கள். கார்பெட், விலங்கின் படுக்கை என்று எல்லாவற்றிலும் இதனை தெளிக்கலாம். 12-48 மணிநேரம் அப்படி விடவும். இதனை தெளித்து 4-6 மணி நேரம் கழித்து உண்ணிகள் அழியத் தொடங்கும். இன்னும் சில நேரம் அப்படியே விடுங்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு மறுபடி வாக்யும் க்ளீனரால் சுத்தம் செய்யுங்கள். மறக்காமல் குப்பை பையை அப்புறப்படுத்தி விடுங்கள். இந்த டயடோமை வீட்டின் முற்றத்திலும் தெளிக்கலாம். ஆனால் அதற்கு மிக அதிக அளவு டயடோம் தேவைப்படும்.
கவனிக்க வேண்டியது
உணவுத் தரம் பொருந்திய டயடோமை வாங்குவது எப்போதும் நல்லது. இது ஒரு மிருதுவான தூளாக இருந்தாலும், இதனை நுகர்வதால், கண் மற்றும் தொண்டை பாதிப்படையலாம். ஆகவே இதனைப் பயன்படுத்துவதற்கு முன் முகமூடி அல்லது மாஸ்க் அணிந்து கொண்டு வேலை செய்யுங்கள். தொட்டி அல்லது குளங்கள் சுத்தம் செய்ய பயன்படுத்தும் பாசியை அல்லது டயடோமை வாங்க வேண்டாம். இது உடலுக்கு தீங்கு தரக் கூடியது. இதனை நுகர்வதால் பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகள் தோன்றும். ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்களில் மற்றும் ஈரமான டயடோம் நல்ல பலனைத் தராது. காய்ந்த பாசியை மட்டுமே பயன்படுத்தவும். வீட்டு விலங்கின் அருகில் இதனை வைக்க வேண்டாம். சில நேரங்களில் இவை அதன் சருமத்தில் பாதிப்பை உண்டாக்கலாம்.

பென்னிராயல் மூலிகை:
பென்னிராயல் என்பது புதினா இலை வகையைச் சேர்ந்த ஒரு மூலிகை ஆகும். இந்த மூலிகை பல்வேறு வகைப்படும். ஐரோப்பிய பென்னிராயல், (மெந்தா புல்லியம்), அமெரிக்கன் பென்னிராயல் (ஹெடியோமா புலேஜியோடைஸ்), போன்றவை உண்ணிகளைப் போக்க பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படுபவையாகும். புதினா வகையைச் சேர்ந்த பென்னிராயல் மனித மற்றும் விலங்கு உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவையாகும். அமெரிக்காவை தாய்நாடாகக் கொண்டவர்கள், இந்த மூலிகையை கருச்சிதைவிற்கு பயன்படுத்துகின்றனர். பூனை மற்றும் நாய்கள் கூட, இதனை பயன்படுத்தினால், கருவுறுதலில் பாதிப்பை அடைகின்றன. சில விலங்குகள் இந்த மூலிகை எண்ணெய்யை சுவைத்தாலோ அல்லது மூலிகை இலையை தின்றாலோ, மரணம் கூட சம்பவிக்கலாம். இருந்தாலும், உண்ணிகளை போக்க இதனை கவனத்துடன் கையாளுவது மிகவும் அவசியம்.
பயன்படுத்தும் வழிகள்
உங்கள் வீட்டின் தோட்டத்தில் அல்லது முற்றத்தில் குறிப்பாக நாய்கள் தாங்கும் இடங்களுக்கு அருகில் பென்னிராயல் செடியை வளர்க்கலாம். ஆனால் நாய்கள் அதனை தொடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கை நிறைய பென்னிராயல் இலைகளை எடுத்து அரவை இயந்திரத்தில் வைத்து நசுக்கி, சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். இந்த சாற்றை ஒரு சீஸ் துணியில் எடுத்து கட்டிக் கொள்ளவும். இந்த சாறு வெளியில் சிந்தாதவாறு பார்த்து கவனமாக வைத்துக் கொள்ளவும். உண்ணிகள் பாதிக்கப்பட்ட இடத்தில் இந்த துணியை கட்டித் தொங்க விடவும். குழந்தைகள் அல்லது வீட்டு விலங்குகள் கைகளில் படும்படி வைக்க வேண்டாம். உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் இந்த மூலிகையைப் பற்றிய செய்தியை எடுத்துச் சொல்லுங்கள். இதனால் வீணான எந்த ஒரு சோதனையும் இதில் நடத்த வேண்டாம். நாய்களுக்கு காலர் அணிவிப்பவர்கள், இந்த காலரில் சில சொட்டு, பென்னிராயல் மூலிகை எண்ணெய்யை தெளித்து பின் அதனை நாயின் கழுத்தில் அணிவிக்கலாம். ஆனால் நாயின் சருமத்தில் இது படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நாயின் சருமத்தில் எதாவது பாதிப்பு ஏற்பட்டால், உடனே அந்த காலரை எடுத்து விடுங்கள். டீ பையில் சில காய்ந்த பென்னிராயல் இலைகளை வைத்துக் கொள்ளுங்கள். இவற்றை தரையில் பரப்பி வையுங்கள். குழந்தைகள் அல்லது வீட்டு விலங்குகள் இருந்தால் அவர்கள் கையில் எட்டாத உயரத்தில் இதனை வைத்துக் கொள்ளுங்கள். காய்ந்த பென்னிராயல் மூலிகைகள் சேர்த்து ஒரு நீளமான துணியில் வைத்து ஒரு காலர் போல் செய்தது உங்கள் வீட்டு பூனைக்கு அணிவிக்கலாம்.

ரோஸ்மேரி
உண்ணிகளால் அதிக பாதிப்பு இல்லாமல் ஓரளவிற்கு பாதிப்புகள் இருந்தால் நீங்கள் ரோஸ்மேரி மூலிகையை பயன்படுத்தலாம். இதனை எண்ணெய் , இலை, பவுடர் என்று எந்த வடிவத்திலும் பயன்படுத்தலாம். ரோஸ்மேரி இலைகளால் கொதிக்க வைத்த நீரில் நாய்களை குளிப்பாட்டலாம். பூனைகளுக்கு இந்த சிகிச்சையை கொடுக்க வேண்டாம். இவை எதிர் வினைகளை உண்டாக்கலாம். உங்கள் வீட்டு விலங்கின் காலரில் சில துளி ரோஸ்மேரி எண்ணெய்யை ஊற்றலாம் . வீடு முழுவதும் உள்ள உண்ணிகளைப் போக்க பின்வரும் முறையை பின்பற்றலாம்.
மூலப்பொருட்கள்
ரோஸ்மேரி
ரூ
வோர்ம்வுட்
சோம்பு
புதினா
மேலே கூறிய அனைத்தையும் சம அளவு எடுத்துக் கொள்ளவும்.
செய்முறை
மேலே கூறிய எல்லாவற்றையும் சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ளவும்.
மென்மையான தூளாக ஆகும்வரை அரைத்துக் கொள்ளவும். இந்த மூலிகைப் பொடியை, உங்கள் வீட்டின் கார்பெட், மரச்சாமான்கள், விலங்குகளின் படுக்கை, மரக்கலன்களுக்கு அடியில் , ஜன்னலில் என்று எல்லா இடத்திலும் தெளித்து விடுங்கள். இவை உண்ணியை சாகடிக்காமல் விரட்டும் இயற்கை தீர்வாகும்.

வீட்டிலேயே தயாரிக்கும் உண்ணி ஸ்ப்ரே
உண்ணிகளைப் போக்க சந்தையில் பல்வேறு ரசாயனக் கலவையுடன் கூடிய ஸ்ப்ரே கிடைக்கின்றன. ஆனால் நாளாவட்டத்தில் அவற்றால் பல தீங்குகள் விளைகின்றன. நீங்கள் உங்கள் வீட்டில் மூலிகை கலந்த ஸ்ப்ரே செய்வதால், இந்த பலன்களைத் தவிர்க்கலாம். இவை எலுமிச்சை, ரோஸ்மேரி, மற்றும் சில அத்தியாவசிய எண்ணெய்கள் கொண்டு செய்யப்பட்டது. இதன் செய்முறை இங்கே:
மூலப்பொருட்கள்
எலுமிச்சை மெலிதாக நறுக்கியது - 6
ரோஸ்மேரி இலைகள் - ஒரு கை அளவு
கொதிக்கும் நீர் - 1 லிட்டர்
ஜெரேனியம் எண்ணெய் - 3 அல்லது 4 துளிகள்
ஸ்ப்ரே பாட்டில் - 1
செய்முறை
ஒரு பெரிய கிண்ணத்தில் எலுமிச்சை துண்டுகளைப் போடுங்கள். ரோஸ்மேரி இலைகளை நறுக்கிக் கொள்ளுங்கள். நறுக்கிய இலைகளை எலுமிச்சை துண்டுகளுடன் சேர்த்து, சிறிது ஜெரேனியம் எண்ணெய் ஊற்றி கொதிக்கும் நீரில் போடவும். மூடி வைத்து, ஒரு இரவு முழுக்க அப்படியே விடவும். மறுநாள் காலை, அந்த நீரை வடிகட்டி, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். இப்போது இந்த உண்ணி மருந்து தயார். இந்த திரவத்தை உங்கள் வீட்டின் கார்பெட், மரச்சாமான், படுக்கை என்று எல்லா இடத்திலும் தெளிக்கலாம். இந்த திரவம் மிகவும் பாதுகாப்பானதால், விலங்கின் படுக்கை போன்ற இடத்திலும் பயன்படுத்தலாம். இதனால் உண்ணிகள் விரட்டப்படுகிறது.

வெட்டிவேர் எண்ணெய்
இயற்கையான உன்னி தடுப்பானாக வெட்டிவேர் காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது செம்போபோகன் நார்டஸ் (சிலோன் சிட்ரோனெல்லா) அல்லது சிம்போபோகான் வின்டேரடஸ் (ஜாவா வகை சிட்ரோனெல்லா) ஆகியவற்றின் தண்டுகளிலிருந்து பெறப்பட்ட எண்ணெயாகும். மேலும் இவை பச்சை நீல எலுமிச்சை-வாசனையுடனான இலைகள் கொண்டிருக்கும். மனிதர் மற்றும் விலங்குகள் பயன்படுத்தக்கூடிய அளவிற்கு இது மிகவும் பாதுகாப்பான ஒரு எண்ணெயாகும். கொசு, ஈ , உண்ணி போன்ற பூச்சிகளை விரட்டும் தன்மை உள்ளது இந்த வெட்டிவேர் எண்ணெய். வீடுகளைத் துடைக்கும் போது அந்த நீரில், சிறிது வெட்டிவேர் எண்ணெய் சேர்த்து துடைப்பத்தால் இத்தகைய பூசிகள் அண்டாமல் இருக்கும். வெட்டிவேர் எண்ணெய்யை எப்படி உண்ணியை விரட்ட பயன்படுத்தலாம் என்பதை இப்போது பார்ப்போம்.
மூலப்பொருட்கள்
வெட்டிவேர் எண்ணெய் - 20 துளிகள்
டீ ட்ரீ எண்ணெய் - 10 துளிகள்
லெமன் க்ராஸ் எண்ணெய் - 10 துளிகள்
ஜெரனியம் எண்ணெய் - 5 துளிகள்
வெதுவெதுப்பான நீர் - 1 கேலன் (4 லிட்டருக்கு சற்று குறைவு)
செய்முறை
வாக்யும் கிளீனர் பயன்படுத்தி வீட்டை முற்றிலும் சுத்தம் செய்யவும். வாக்யும் பையை உடனடியாக குப்பையில் போடவும். வெதுவெதுப்பான நீருடன் மேலே கூறிய எல்லா எண்ணெயையும் சேர்த்து கலக்கவும். மாப் குச்சி அல்லது துணியால் அந்த நீரைக் கொண்டு வீடு முழுதும் துடைக்கவும்.
முதல் சில நாட்கள், தினமும் இந்த வாசனை நீரால் துடைத்து வாருங்கள். கொசுக்கள் மற்றும் உண்ணியின் தாக்கம் சற்று குறைந்தவுடன் வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்து வரலாம்.

ஹார்ஸ் ஆப்பிள்
ஹார்ஸ் ஆப்பிள் என்பது மல்பெர்ரி குடும்பத்தை சார்ந்த ஒரு பழ வகையாகும். இதனை பொதுவாக ஓசேஜ் ஆரஞ்சு என்று கூறுவார். ஹார்ஸ் ஆப்பிளின் மற்ற பெயர்கள், ஹெட்ஜ் ஆப்பிள், மங்கி பால், பாயிஸ் டி ஆர்க் , போடர்க் போன்றவையாகும். பூச்சிகளை விரட்ட பாரம்பரியமாக ஹார்ஸ் ஆப்பிள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.
செய்முறை
ஹார்ஸ் ஆப்பிளை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
உங்கள் வீட்டின் அறைகள், ஜன்னல், முற்றம் என்று எல்லா இடத்திலும் இந்த துண்டுகளை வைத்திடுங்கள். ஒரு அறைக்கு ஒரு பழம் என்ற வீதத்தில் வைத்திடுங்கள். குளிர் சாதன வசதி செய்யப்பட்ட அறைகளில் இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை இந்த பழம் கெட்டுப் போகாமல் இருக்கும்.
சிலர் ஹார்ஸ் ஆப்பிள் காய் நல்லது என்று கூறுகின்றனர். சில பழம் தான் நல்ல தீர்வைத் தருகிறது என்று கூறுகின்றனர். பழங்களை விடுத்து காய்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அவை காய்ந்து போகும் வரை உங்கள் அறைகளில் வைத்திக் கொள்ளுங்கள். முழுவதும் காயும் வரை இதன் செயலாடுகள் நன்மையைத் தரும். பாம்பு, எலி போன்றவற்றைத் தடுக்கவும் இவை பயன்படுகின்றன. உண்ணிகள் அதிகரிக்கும் காலம் வருவதற்கு முன்பே, எந்த ஒரு தீர்வையும் செயல்படுத்தத் தொடங்குங்கள். ஒருமுறை உண்ணிகள் உங்கள் வீட்டை ஆக்கிரமித்தால் பின்பு அவற்றை விரட்டுவது மிகவும் கடினம். தொடக்க காலத்திலேயே அதன் வளர்ச்சியை தடுக்காமல் விட்டால் பின்பு அவற்றை ஒழிப்பது மிகவும் சவாலான ஒரு காரியம்.



Click it and Unblock the Notifications











