Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
அக்குள், காலர் கறைகளை ஒரே சலவையில் எளிமையாக போக்க வேண்டுமா?
உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, உடை ஆரோக்கியத்திற்கும் இயற்கை முறையே நல்ல பயன் தரும் என்பதற்கு இந்த வினிகர் ட்ரீட்மெண்ட் தான் அடையாளம்.
நமக்கு பிடித்தமான, ராசியாக கருதும் உடைகள் சிலவன இருக்கும். சில சமயம் நாம் அதை அடிக்கடி உடுத்துவதாலேயே அது பழையது போல ஆகிவிடும். பிறகு அதை விரும்பும் போது, முக்கியமான நிகழ்வுகளின் போது உடுத்த முடியாமல் போகும்.

மேலும், சில சமயம் வியர்வை தொல்லையால் அக்குள் மற்றும் காலர் பகுதிகளில் நீக்க முடியாத அழுக்கு சேர்ந்துவிடும். இதன் காரணத்தால் கூட பிடித்த சட்டையை அணிய முடியாமல் சிலர் தவிர்ப்பார்கள். அதற்கெல்லாம் ஒரே தீர்வு தான் இந்த ஒயிட் வினிகர் ட்ரிக்...

தேவையான பொருட்கள்:
இதமான நீர் - தேவையான அளவு
ஒயிட் வினிகர் - அரை க்ளாஸ் அளவு

அலசும் முறை | ஸ்டெப் #1
கறைப்படிந்த உங்கள் சட்டையை இதமான சூட்டில் இருக்கும் நீரில் ஊற வையுங்கள். அதில் அரை கிளாஸ் ஒயிட் வினிகரை சேர்த்துக் கொள்ளுங்கள். இதை ஒரு இரவு முழுக்க ஊற வைக்க வேண்டும்.

அலசும் முறை | ஸ்டெப் #2
காலையில் எழுந்ததும், முதல் வேலையாக, எப்போதும் நீங்கள் துவைக்கும் முறையில் துவைத்துவிடுங்கள். ஒயிட் வினிகர், கறையை போக்கி உடைகளுக்கு மிருதுவான தன்மை அளிக்கும்.

அலசும் முறை | ஸ்டெப் #3
முக்கியமாக அக்குள் பகுதி, காலர் பகுதிகளில் படிந்திருக்கும் வேர்வை அழுக்கை போக்க இந்த ஒயிட் வினிகர் மிகையாக உதவும்.

அலசும் முறை | ஸ்டெப் #4
மேலும், வாஷிங் மெஷினில் துவைக்கும் போது டிடர்ஜென்ட் உடன் அரை கிளாஸ் வினிகரும் சேர்த்துக் கொள்ளலாம். மெஷினில் துவைக்கும் போது துணிகளுக்கு மென்மையான தன்மை அளிப்பதுடன், மெஷினில் டிட்டர்ஜென்ட் தங்காமல் செய்கிறது.



Click it and Unblock the Notifications