உங்கள் வீட்லும் குறைந்த செலவில் அழகாய், எளிதாய் இப்படியொரு குளம் வேண்டுமா!!!

Posted By:
Subscribe to Boldsky

அனைவருக்கும் அவரவர் வீட்டை அழகாகவும், மற்றவர் பார்த்து வியக்கும் படியும் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். சின்ன சின்ன விஷயங்கள் தான் அழகை இன்னும் மெருகேற்றி காண்பிக்கும். வீடும் அப்படி தான்.

அரண்மனை போல் கட்டமைக்கப்பட்ட ஷாருக்கானின் "மன்னத்" இல்லம்!!

வெறும் வீடாக மட்டும் இல்லாமல், சிறிய தோட்டம், ஓரிரு மரங்கள், சின்ன நாய் வீடு போன்ற சின்ன சின்ன விஷயங்கள் உங்களது வீட்டை மேலும் அழகாக்கிக் காட்டும். சரி, வீட்டில் குளம் அமைக்க முடியுமா என்ன? அதற்கு அரண்மனை தான் கட்ட வேண்டும் என்று அலுத்துக்கொள்ள வேண்டாம்.

உலகின் விலையுயர்ந்த அம்பானியின் "அண்டிலியா" வீட்டை பற்றிய வியக்கவைக்கும் தகவல்கள்!

உங்கள் வீட்டின் முன் பகுதியில் ஆறுக்கு ஆறடி இடம் இருந்தால் மட்டுமே போதும், மிக எளிதாய், குறைந்த செலவில், அழகான சின்ன குளம் ஒன்று அமைத்துவிடலாம்....

பிரமிக்க வைக்கும் மைகேல் ஜாக்சனின் "ஃபேண்டசி ஐ-லேன்ட்" வீட்டைப் பற்றிய தகவல்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ட்ராக்டர் டயர் ஒன்று

ட்ராக்டர் டயர் ஒன்று

இந்த சிறிய அழகான குளத்தை உங்கள் வீட்டில் அமைக்க முதலில் முக்கியமாக தேவை ஓர் ட்ராக்டர் டயர். படத்தில் கான்பிக்கபப்டுள்ள படி, அந்த டயரை அறுத்து பிறகு நிலத்தில் இரண்டடி குழி வெட்டி அதில் புதைக்க வேண்டும்.

பிளாஸ்டிக் கவர்

பிளாஸ்டிக் கவர்

பிறகு அதை முற்றிலும் ஓர் பிளாஸ்டிக் கவர் கொண்டு சுற்ற வேண்டும்.உள்புறம், வெளிப்புறம் என இரு புறங்களிலும் சரியாக பிளாஸ்டிக் கவர் கொண்டு சுற்ற வேண்டியது அவசியம்.

களிமண்

களிமண்

பிறகு, சமநிலத்தில் இருந்து ஓரடி மேல் உள்ளவாறு நாம் அமைத்து வைத்துள்ள அந்த டயரை சுற்றி குன்று போல சுற்றியும் களிமண் பரப்ப வேண்டும். இறுக்கமாக களிமண் கொண்டு நிரப்ப வேண்டியது அவசியம்.

பெரிய கற்கள்

பெரிய கற்கள்

படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள படி, பெரிய பெரிய கற்களை டயரின் வெளிப்புறம் சுற்றி அமைக்க வேண்டும். அழகாக கற்களை அழகாக அமைக்க வேண்டியது அவசியம். கற்கள் விழுகாதவாறு இறுக்கமாக அடுக்க வேண்டும்.

செடிகள்

செடிகள்

வெளிப்புறத்திலும், கற்களுக்கு நடுவிலும் சின்ன சின்ன செடிகள் நட்டு வைத்தால், குளத்திற்கு இன்னமும் கொஞ்சம் அழகு சேர்க்கும்.

தண்ணீர் ஊற்றி நிரப்பவும்

தண்ணீர் ஊற்றி நிரப்பவும்

கடைசியாக, ட்ராக்டர் டயரின் உட்பகுதியில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும்.

அழகான குளம் உங்கள் வீட்டில்!!

அழகான குளம் உங்கள் வீட்டில்!!

தாமரை பூக்களும், கொக்கு பொம்மை / சிலை, விளக்கு போன்ற அலங்காரங்கள் செய்து வைத்தால் உங்கள் குளம் இன்னும் அழகாக காட்சியளிக்கும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்