For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மிகவும் சிம்பிளான சில தோட்டக்கலை டிப்ஸ்...

By Ashok CR
|

உலகத்தில் பலருக்கும் பல வகையான பொழுதுபோக்குக்கள் உள்ளது. அதனை பொதுவான சில வகையாக நாம் வகைப்படுத்தலாம். அப்படி சில முக்கியமான பொழுதுபோக்கில் ஒரு வகை தான் தோட்டக்கலை. தோட்டக்கலையும் ஒரு வகை விவசாயம் தான். அதனை செய்ய தனி பக்குவம் தேவை. அனைவராலும், அதனை சரிவர செய்ய முடியாவிட்டாலும், விருப்பம் உள்ளவர்கள் அதில் ஈடுபட்டு தேர்ச்சி அடைவார்கள்.

அப்படி தோட்டத்தை பராமரிப்பதில் பல டிப்ஸ்கள் உள்ளது. காபி கொட்டையை பயன்படுத்துவது முதல், தோட்டக்கலையில் ஈடுபடும் போது நகத்தில் ஏற்படும் அழுக்கை எடுப்பதிலிருந்து அதற்கு பல டிப்ஸ் உள்ளது. அதில் வல்லுனராக உள்ள பால் ஜேம்ஸ் அதனை பற்றிய ஒரு 14 டிப்ஸ்களை நமக்காக அவர் பகிர்ந்துள்ளார்.

14 Simple Gardening Tips And Tricks

1. மண் தொட்டியில் உருவாகும் உப்புப்படுவை நீக்க, வெள்ளை வினிகர், ரப்பிங் ஆல்கஹால் மற்றும் தண்ணீரை சரிசமமான அளவில் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றவும். இந்த கலவையை தொட்டியின் மீது தெளித்து, பிளாஸ்டிக் பிரஷை கொண்டு நன்றாக தேய்க்கவும். அதில் செடியை நடுவதற்கு முன், நன்றாக காய விடுங்கள்.

2. தோட்ட வேலையில் ஈடுபடும் போது, உங்கள் விரல் நகங்களுக்குள் அழுக்கு நுழையாமல் இருக்க, உங்கள் நகங்களை சோப்பின் மீது அழுத்தி தேய்க்கவும். இதனால் நகங்களை சுற்றி அது பாதுகாப்பு வலையத்தை உருவாக்கி விடும். தோட்ட வேலை முடிந்த பின், நக பிரஷை கொண்டு சோப்பை நீக்கிடுங்கள். அதன் பின் உங்கள் நகங்கள் பளிச்சிடும்.

3. செடிகளை ட்ரிம் செய்யும் கருவி பழுதடையாமலும் உடையாமலும் பாதுகாக்க, அதனை பயன்படுத்துவதற்கு முன், அதன் மீது காய்கறி எண்ணெய்யை தெளித்திடுங்கள்.

4. நீண்ட கருவி அல்லது கம்பி/குச்சியை அளவு கோலாக பயன்படுத்துங்கள். நீண்ட கைப்பிடி கொண்ட தோட்ட கருவி ஒன்றினை தரை மீது போடுங்கள். அதன் அருகில் ஒரு அளவை டேப்பையும் வைத்துக் கொள்ளுங்கள்.ஒரு நிரந்தர மார்க்கரை வைத்து அதனு மீது இன்ச் மற்றும் அடி கணக்கை குறியுங்கள். ஒரு குறிப்பிட்ட இடைவெளி விட்டு செடிகளை நட வேண்டும் என்றால், இந்த கருவியையே நீங்கள் அளவு கோலாக பயன்படுத்தலாம்.

5. தோட்டத்திற்கு தேவையான நூல் கயிற்றை ரெடியாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு ஒரு சிறிய நூல் கயிறு உருண்டையை மண் தொட்டியுடன் ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள். கயிற்றின் ஒரு முனையை வடிகால் துளையின் வழியாக இழுத்து, தோட்டத்தில் உள்ள தொட்டியை தலைகீழாக வைத்து விடுங்கள். இதனை செய்து விட்டால், நூல் கயிற்றை தேடி இனி அலைய தேவையில்லை.

6. சிறிய களிமண் தொட்டிகள், இரவு நேரம் ஏற்படும் உரை பனியிலிருந்து, செடிகளைப் பாதுகாக்கும் கண்ணாடி மூடியாக இருந்து பாதுகாக்கும்.

7. களிமண் தொட்டியை நெளிவுக்குழாய் வழிகாட்டியாக மாற்ற, தோராயமாக 1 அடி நீளமுள்ள இரும்பு கம்பியை தோட்டத்தின் மண் மீது ஊன்றி, அதன் மீது இரண்டு களிமண் தொட்டிகளை கவிழ்த்தி வைக்கவும். அதில் ஒன்று தரையை நோக்கி இருக்க வேண்டும், மற்றொன்று வானை நோக்கி இருக்க வேண்டும். இதனை செய்வதால், நெளிவுக்குழாயை மண்ணோடு சேர்த்து இழுக்கும் போது, உங்கள் செடிகளுக்கு பாதிப்பு ஏற்படாது.

8. இயற்கையான மார்க்கர் பயன்பாடு சரியாக அமைய, செடிகளின் பெயர்களை, நிரந்தர மார்க்கரை கொண்டு, தட்டையான கற்களில் எழுதி அவைகளை அந்தந்த செடிகளின் கீழ் வைத்து விடுங்கள்.

9. செடிகள் அசுணிகளால் பாதிக்கப்பட்டுள்ளதா? அப்படியானால் அவைகளை கட்டுப்படுத்த நெளிவுக்குழாய் மூலமாக தண்ணீரை பீய்ச்சி அடிக்கவும். அல்லது பூச்சிக் கொல்லி மருந்தை பயன்படுத்துங்கள். ஆனால் அதற்கு இன்னொரு பரிந்துரையும் உள்ளது; குதூகலாமான ஒன்று. ஒட்டு நாடா ஒன்றை எடுத்து உங்கள் கைகளில் சுற்றிக் கொள்ளுங்கள். அந்த நாடாவின் ஒட்டும் பக்கத்தை வெளிப்புறமாக விட்டு அதனை பூச்சிகளால் பாதிக்கப்பட்ட இலைகளின் மீது தேய்க்கவும். இலைகளின் கீழ் பாகத்தின் மீது கவனம் தேவை. அதற்கு காரணம் அப்பகுதிகளில் தான் பூச்சிகள் அண்டும்.

10. அடுத்த முறை காய்கறிகளை வேக வைக்கும் போது, அந்த தண்ணீரை கீழே ஊற்றாமல், செய்களில் ஊற்றவும். காய்கறி சூப்களுக்கு உள்ள மகிமையை அப்போது அறிவீர்கள்.

11. வடி கட்டிய டீத்தூள் அல்லது காபி கொட்டையை பயன்படுத்தினால், அஸலியாஸ், அலிஞ்சி, கமிலியா, கார்டெனியா மற்றும் ப்ளூபெர்ரி போன்ற அமில விரும்பி செடிகளின் மண் அமிலமாக்கப்படும். மாதம் ஒரு முறை ஒரு இன்ச் அளவுக்கு லேசாக தூவினாலே போதும், மண்ணின் அமிலத்தன்மை சிறப்பாக இருக்கும்.

12. சீமைச்சாமந்தி தேநீரை பயன்படுத்தினால், பூஞ்சைகள் உருவாவதையும் தவிர்க்கலாம். இளம் செடிகளை உடனே தாக்கும் இந்த பூஞ்சைகள். சிறிதளவு தேநீரை செடியின் மண் பரப்பில் வாரம் ஒரு முறை ஊற்றினால் போதும். இதற்கு பதில் இலை சார்ந்த ஸ்ப்ரேக்களையும் பயன்படுத்தலாம்.

13. தேநீர் பரிமாற்ற உடனடி மேஜை வேண்டுமானால் உங்கள் களிமண் தொட்டிகள் மற்றும் ஏந்து தட்டுக்களை பயன்படுத்தலாம். ஒரு களிமண் தொட்டியை கவிழ்த்து அதன் மீது ஒரு பெரிய ஏந்து தட்டை வைக்கவும். தேநீரை பருகிய பின், உங்கள் ஏந்து தட்டை தண்ணீரால் நிரப்பிக் கொள்ளுங்கள். இப்படி செய்யும் போது உங்கள் மேஜை பறவை தண்ணீர் குடிக்கும் தட்டாக மாறும்.

14. செடிகளை காய வைக்க வேகமான வழி: தினசரி நாளிதழ் ஒன்றை எடுத்து உங்கள் கார் இருக்கையில் விரியுங்கள். அதன் மீது செடிகளை விரித்து வையுங்கள். பின் கார் ஜன்னல்களை ஏற்றி விட்டு கதவுகளை மூடி விடுங்கள். உங்கள் செடிகள் நல்ல முறையில் வேகமாக காய்ந்து விடும். இதை விட என்ன வேண்டும்? உங்கள் காரிலும் நறுமணம் வீசும்.

English summary

14 Simple Gardening Tips And Tricks

From using leftover coffee beans to preventing dirt from getting underneath fingernails, master gardener Paul James shares his top 14 tips and shortcuts to make spring gardening a breeze.
Desktop Bottom Promotion