For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இயற்கை முறையில் காய்கறிகளை வளர்க்க வேண்டுமா? இதோ ஃபாலோ பண்ணுங்க...

By Boopathi Lakshmanan
|

குளிர்பிரதேச காய்கறிகளான கேரட், அஸ்பாரகஸ், ஸ்ப்ரௌட்ஸ், கீரைகள், வெங்காயம் ஆகியவை பூமிக்கு அடியில் வளரக் கூடிய தாவரங்களாக இருப்பதால் அவற்றின் வளர்ச்சிக்கு அதிகளவு சூரிய வெப்பம் தேவையில்லை. இந்த தாவரங்களை மழைக்காலத்தின் முடிவில் விதைத்து, குளிர்காலத்தில் அறுவடை செய்வார்கள். இவற்றை வீட்டின் பின்பக்கத்தில் கூட வளர்க்க முடியும்.

குளிர்கால காய்கறிகளை இயற்கை முறையில் வளர்க்க முடியும். இயற்கை முறை விவசாயத்தில் செயற்கை அல்லது இரசாயன பொருட்களுக்கு இடமில்லை. இது இயற்கையானதாகவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் உள்ள பயிர் சுழற்சி முறை, இயற்கை உரங்களை பயன்படுத்துதல் மற்றும் செயற்கையான பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்தல் ஆகியவற்றை கiடி பிடிக்கும் விவசாய முறையாகும். சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துக் கொண்டு வரும் இந்நாளில் இயற்கை விவசாயத்திற்கு மிகவும் அதிகமான தேவை உள்ளது. ஆரோக்கியமாக இருக்க விரும்பும் மக்கள் இப்பொழுதெல்லாம் இயற்கை உணவுகளையே பயன்படுத்துகிறார்கள்.

Tips To Grow Winter Vegetables Organically

குளிர்கால காய்கறிகளை இயற்கை விவசாய முறையிலும் வளர்க்க முடியும். சிறிய மற்றும் பெரிய இடங்களிலும் எளிதில் செய்யக் கூடிய முறையாக இயற்கை விவசாயம் உள்ளது. குளிர்கால காய்கறிகளை இயற்கை விவசாய முறையில் வளர்க்க சில வழிகாட்டுதல்களை இங்கே விவரித்துள்ளோம்.

1. சரியான பயிர்களை தேர்ந்தெடுத்தல்

உலகின் அனைத்து பகுதிகளிலும் குளிர்காலம் மாறுபட்ட தன்மை கொண்டதாக இருக்கும். சில பகுதிகளில் மிகக் கடுமையானதாகவும், வேறு சில பகுதிகளில் குறைவான குளிர் கொண்டதாகவும் இருக்கும். எனவே, இயற்கை விவசாயத்திற்கான பயிர்களைத் தேர்ந்தெடுக்கும் போது, அவை அந்த இடத்தின் வெப்பநிலைக்கு வாழ ஏற்றவாறு இருப்பதை உறுதி செய்யவும். ஒவ்வொரு காய்கறிக்கும் ஒவ்வொரு விதமான வாழிடமும், வெப்பநிலையும் தேவை. உதாரணமாக, வெங்காயம் வெப்பநிலையை மிகவும் நன்றாக அனுசரித்து நடந்து கொள்ளும் பயிராகும். அது 18 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கூட குறைந்த வெப்பநிலையை தாங்கக் கூடிய பயிராகும்.

2. பயிர் சுழற்சி முறை

இயற்கை வேளாண்மையில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகளில் ஒன்றாக இருப்பது பயிர் சுழற்சி முறையாகும். ஒரே பயிரை தொடர்ந்து பயிர் செய்து வந்தால், அந்த மண் தனது சத்துக்களை இழந்து விடும். மேலும், காய்கறிகளை மாற்றிப் பயிரிடும் போது பூச்சிக் கொல்லிகளின் தாக்கத்தையும் தவிர்த்து விடும். எனவே, நீங்கள் ஒவ்வொரு பருவத்திற்கும் பயிர்களை மாற்றி பயன்படுத்த வேண்டும்.

3. பாதுகாப்பு வளையம்

குளிர்கால காய்கறிகளை கடுமையான மற்றும் வறட்சியான காற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்காக, மரங்களை நட்டு இயற்கையான காற்றுத் தடைகளை ஏற்படுத்தலாம், இதற்காக புதர் செடிகளை நடலாம், காய்கறி செடிகளை வீட்டு சுவற்றின் ஓரங்களில் நட்டு சுவர்களை தடையாக பயன்படுத்தலாம். இதன் மூலம் குளிர் காற்று தடுக்கப்பட்டு விடும்.

4. இயற்கை உரங்கள்

இயற்கை வேளாண்மையில் இயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இரசாயன பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்கள் பயன்படுத்துவதால் மண்வளம் பாதிக்கப்பட்டு மண்ணின் உயிர்ச்சத்துகள் அழிந்து விடுவதால், இயற்கை வேளாண்மை இந்த இரசாயன பூச்சிக் கொல்லிகளை ஆதரிப்பதில்லை. மேலும்,இயற்கை வேளாண்மையில் விளைந்த குளிர்கால காய்கறிகளின் இலை, தழைகளை விலங்குகளின் பசிதீர்க்கும் உணவாகவும், தீவனமாகவும் பயன்படுத்த முடியும். இந்த உரங்களில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆபத்தான பொருட்கள் இல்லை, மேலும் இவை தாவரங்கள் இயற்கையாக வளர உதவி புரிகின்றன. அதே போல, நச்சுத்தன்மை கொண்ட இரசாயனங்களுக்குப் பதிலாக இயற்கையான பூச்சி மற்றும் களைக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன.

5. மூடி வைத்தல் மற்றும் உரமாக்குதல்

மூடி வைத்தல் மற்றும் உரமாக்குதல் ஆகிய இரண்டும் இயற்கை விவசாயத்தின் இரண்டு வழிமுறைகளில் ஒன்றாகும். பசுந்தழைகள், காய்கறிகளின் கழிவுகள் மற்றும் மண்ணைக் கொண்டு மெல்லிய படலத்தை உருவாக்குவதே மூடி வைத்தல் (Mulching) என்று அழைக்கப்படுகிறது. தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவும் நுண்ணுயிரிகள் வளரவும், குளிர்காலத்தில் பயிருக்குத் தேவையான வெப்பத்தை கொடுக்கவும், களைகளை வளராமல் தடுக்கவும் இந்த படலம் உதவும். இதே வழிமுறையில், உரங்களை பயன்படுத்தி தாவரங்களை வளர்க்கும் உரமாக்குதல் இயற்கை வேளாண்மையின் மற்றொரு வழிமுறையாகும். தாவரங்களின் கழிவுகள், விலங்குகளின் சாணம் மற்றும் பிற இயற்கைப் பொருட்களை வைத்து உருவாக்கப்பட்ட உரம் தான் உரமாக்குதல் (Composting) முறையில் பயன்படுத்தப்படுகிறது.

இவையெல்லாம் குளிர்கால காய்கறிகளை வளர்க்க உதவும் சில வழிகாட்டுதல்களாகும். இயற்கை உணவுகளில் அதிக ஊட்டச்சத்துகளும் மற்றும் பாரம்பரிய முறையில் வளர்க்கப்பட்ட உணவுகளை விட அதிக நிறமாகவும் இருக்கும். இந்த வழிமுறைகளை உங்கள் வீட்டின் பின்னால் உள்ள தோட்டத்தில் பயன்படுத்துங்கள்.

English summary

Tips To Grow Winter Vegetables Organically

Winter vegetables can also be grown using Organic Farming. Organic farming is very easy and can be done in both small and large spaces. A few tips to grow winter vegetables organically are described below:
Story first published: Tuesday, December 3, 2013, 19:42 [IST]
Desktop Bottom Promotion