For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டுத் தோட்டத்தில் பூண்டுச் செடியை வளர்க்கும் வழிகள்!!!

By Boopathi Lakshmanan
|

பண வீக்கம் அதிகரிக்கும் இந்த சூழலில் காய்கறிகளின் விலை வானத்தை எட்டும் அளவிற்கு உயர்ந்து வருகின்றன. இதை சரிக்கட்ட சமையலுக்கு தேவையான பொருட்களை நாம் ஒரு வீட்டுத் தோட்டம் அமைத்து பயனடையலாம். சிறிது முயற்சி எடுத்தால் போதும் அதை மிகவும் சிறப்பாகவும், அழகாகவும் வளர்க்க பராமரிக்கச் செய்ய முடியும். இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் நாம் புதிய காய்கறிகளை இதன் மூலம் பெற முடியும். உங்களின் அக்கறை கொண்டு மிகவும் கவனமாக வளர்க்கப்பட்ட காய்கறிகள் நிச்சயம் சுவைக்காமல் போகாது. இப்போது புதிதாக காய்த்த காய்கறிகளை நாம் வாங்கி சமைக்க முடிவதில்லை. இத்தகைய முயற்சி நமது ஆரோக்கியத்தையும் பணத்தையும் சேமிக்கும் வண்ணம் அமைகின்றது.

garlic

சமையலுக்குத் தேவையான காய்கறிகளை வளர்க்க சிறது முயற்சி தேவைபடுகின்றது. தற்போதைய நவீன கால சூழலில் பெரிய தோட்டத்தை அமைப்பது கடினம் தான். ஆனால் நிச்சயம் சில செடிகளை நடுவதற்கும் வைப்பதற்கும் வெளியில் இடம் இருக்கும். உங்கள் பால்கனியில் செடிகளை வளர்ப்பது அழகாகவும் மதிப்பூட்டுவதாகவும் அமையும். அதற்கு சில எளிய வழிகளை கொண்டு நாம் வீட்டுத் தோட்டங்களை அமைக்க முடியும்.

இதை அமைப்பதற்கு முன்னதாக நாம் செய்ய வேண்டிய வேண்டிய காரியங்கள் இரண்டு உள்ளன. முதலாவது அதற்கான இடத்தையும் மற்றும் இரண்டாவதாக எந்த வகை காய்களை பயிர் செய்ய வேண்டுமென்று தேர்ந்தெடுப்பது தான். வளர்க்க முனையும் காய்களில் பூண்டும் ஒரு சிறந்த காய்களில் ஒன்றாகும். உங்கள் சமையலில் பெருமளவில் நாம் எப்போதும் இதை பயன்படுத்துவோம். ஆகையால் இதை முயற்சி செய்யுங்கள். பூண்டு வளர்ப்பது எப்படி என்று ஒரு சில குறிப்புக்களை இங்கு நாம் பார்ப்போம்.

பூண்டை பயிரிடும் காலம்

சமையல் அறை தோட்டத்தில் நாம் பூண்டை பயிரிட திட்டமிடடும் போது, எந்த பருவத்தில் பயிரிட வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும். எப்படியாயினும், குளிர் காலம் பூண்டு வளர்ப்பிற்கு சிறந்த பருவம் அல்ல. குளிர் காலம் வர ஒரு சில மாதங்களுக்கு முன்பே, நிலம் வறண்ட நிலையில் இருக்கும் போது அதை பயிரிடுவது சிறந்தது. வசதியற்ற பருவ காலத்தில் பூண்டு வளர்க்கும் போது நமக்கு நல்ல பலன் கிடைக்காது.

வேர் பிடிக்கச் செய்தல்

பூண்டை குளிர் காலம் தொடங்கும் முன்னர் விதைத்து விட்டால், அது குளிருக்கு முன்னரே வேர் பிடித்து விடும். பூண்டு வளர்ப்பு ஒரு சில எளிய வழிகளில் மிகவும் சுலபமாக செய்யும் காரியமாகும். முதலில் இதற்காக நிலத்தை பண்படுத்த வேண்டும். நிலம் குளிரின் காரணமாக இறுகுவதற்கு முன் பூண்டை பயிரிடுங்கள். இதனால் அவை சீக்கிரம் வேர் பிடிக்கும். பச்சை இலைகள் குளிர் காலம் வரும் முன்னே தோன்றும். நல்ல வளமான மண்ணைத் தேர்ந்தெடுத்து பூண்டை பயிரிட வேண்டும்.

கவனமாக தேர்ந்தெடுங்கள்

பயிரிடுவதற்கு முன் உங்களுக்கு தேவையான பூண்டு வகையை கவனமாக தேர்ந்தெடுங்கள். இவற்றில் வன் கழுத்து பூண்டு மற்றும் மென் கழுத்து பூண்டு ஆகியவைகள் அடங்கும். வன் கழுத்து பூண்டில் தலை பகுதி சுருண்டு காணப்படும். அதிக அளவு பற்களை மென்மையான கழுத்து பூண்டு வகையில் காண முடியும். பயிரிடும் போது பெரிய பெரிய பூண்டுகளை பயிரிடுங்கள். அப்போது தான் நமக்கும் பெரிய பூண்டு கிடைக்கும். பெரிய பற்களை பயிரிடவும் மற்றும் சிறிய பற்களை நமது சமயல் அறையிலும் பயன்படுத்தலாம்.

பயிரிடுதல்

பூண்டை பயிரிடும்போது மொட்டு மேல் நோக்கி இருப்பது போல் பயிரிடல் வேண்டும். இதை பயிரிட்ட பின் அதன் மேலுள்ள மண்ணை சீர்ப்படுத்துங்கள். இதுவே வீட்டுத் தோட்டத்தில் பூண்டு வளர்க்கும் முறையாகும். ஒரு வகைக்கு மேல் பூண்டுகளை பயிர் செய்தால் நீங்கள் அவற்றின் எல்லைகளை நிர்ணயம் செய்வது நல்லது.

அக்கறையுடன் பார்த்துக்கொள்ளுங்கள்

பயிரிடுவது மட்டுமல்லாமல் அதை நல்ல முறையில் நாம் கவனித்துக் கொள்ளவும் வேண்டும். நல்ல உரமிட்டு மற்றும் தண்ணீர் விட்டு பார்த்துக் கொள்ள வேண்டும். மீன் கழிவுகளை எடுத்து வைத்து அவற்றை உரமாக பயன்படுத்தலாம். இரண்டு நாளுக்கு ஒரு முறையாவது உரமிடல் வேண்டும். பூண்டிற்கு பெருமளவு நீர் தேவைப்படாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டியது அவசியம். மண்ணின் தன்மை ஈரப்பதத்துடன் இருப்பது நல்லது. அப்படியில்லாமல் வறண்டு காணப்பட்டால் தண்ணீர் பாய்ச்சுங்கள்.

அறுவடை

ஐந்திலிருந்து ஆறு இலைகள் வரும் வரை காத்திருங்கள். இவை முளைத்த பின் அறுவடைக்கு தயாராகிவிட்டது என்று நினைத்துக் கொள்ளுங்கள். வெயில் காலத்திற்கு முன் அல்லது குளிர்காலத்தில் அதை அறுவடை செய்யலாம்.

English summary

Steps To Grow Garlic In Your Home

One best veggie you can grow in your kitchen garden is garlic. Growing garlic is going to help your cooking in a big way. So try planting it in your kitchen garden. Here are a few steps to grow garlic in your kitchen garden.
Story first published: Thursday, December 26, 2013, 19:08 [IST]
Desktop Bottom Promotion