Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
வீட்ல பச்சை மிளகாய் செடி போட்டிருக்கீங்களா? இதப்படிங்க!

தரமான மிளகாய் செடி வளர்ப்பு பற்றி தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.
பயிரிடும் பருவம்
பச்சை மிளகாய் ஆண்டுக்கு மூன்று பருவங்களில் பயிரிடலாம். ஜனவரி – பிப்ரவரி, ஜூன் – ஜூலை, செப்டம்பர் – அக்டோபர் ஆகிய மாதங்கள் பயிரிடலாம். மிளகாய் வளர மித வெப்பமான பருவமே ஏற்றது அதிக குளிரோ, அதிக வறட்சியோ ஏற்றதல்ல. எனவே சூரிய வெப்பம் நிலத்தில் இருந்து அதிக தண்ணீரை உறிஞ்சாத பருவமாக இருந்தால் பச்சை மிளகாய் வளர்ச்சி அபரிமிதமாய் இருக்கும். அதேபோல் அதிக தண்ணீர் ஊற்றி நிலம் களிமண்ணாக இருந்தாலும் ஏற்றதல்ல என்கின்றனர் வேளாண்துறையினர்.
நோய் தாக்குதல்
பச்சை மிளகாயை நாற்றழுகல் நோய், பழ அழுகல் நோய் தாக்கும். பச்சைமிளகாயின் நாற்றுக்கள் மடிந்து சொட்டையாக மாறிவிடும். இதற்கு பூஞ்சைத்தாக்குதலே காரணமாகும். மண்ணில் காணப்படும் இந்த பூஞ்சைகள் விதை விதைத்த உடன் நாற்றாங்களை தாக்கத் தொடங்குகின்றன.
இப்பூஞ்சை தாக்குதலினால் செடிகள் வளராமல் திட்டு திட்டாக காணப்படும்.
நாற்றங்கால் நிலத்தை வடிகால் வசதியுள்ள நிழல் இல்லாத பகுதிகளில் மேட்டுப் பாத்தியாக அமைக்க வேண்டும். போதிய அளவு விதையை மட்டும் கலக்கமாக விதைக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப தண்ணீரைப் பாய்ச்சுதல் வேண்டும். விதைகளை விதைப்பதற்கு முன்பு திராம் அல்லது கேப்டான் மருந்துடன் கிலோவிற்கு 4 கிராம் வீதம் மருந்திட்டு விதைக்க வேண்டும். மண்ணிலிருந்து தாக்கும் பூசணங்களையும் சிறிது காலத்திற்கு தடுத்து விதைகளின் முளைப்புத் திறனை அதிகரிக்கும். இதனால் நாற்றுக்கள் நன்கு வளரமுடியும்.
பூக்கும், காய்க்கும் பருவம்
மிளகாய் செடி நன்றாக பூக்க வேண்டுமெனில் பொட்டாசியம் சல்பேட் 10 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். இதனால் பூ நன்றாக பூக்கும். இதேபோல் டிரை கார்டினாலை ஒரு லிட்டர் தண்ணீரில் 25 மில்லி லிட்டர் கலந்து தெளிக்க நன்றாக காய் பிடிக்கும்.
பூச்சித்தாக்குதல்
மிளகாய் செடியை இலைப்பேன், அசுஉணி, செஞ்சிலந்து ஆகிய மூன்று விதமான பூச்சிகள் தாக்குகின்றன. இவற்றை முறையான மருந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
அதேபோல் காய் பிடித்திருக்கும் பருவத்தில் காய் துளைப்பான் பூச்சிகள் தாக்கும். இவற்றை விளக்குப் பொறி வைத்து தாய் பூச்சிகளை அளிக்கலாம். மிளகாய் காய்த்த உடன் அவற்றை பறித்துவிடவேண்டும். அப்பொழுதுதான் புதிய பச்சை மிளகாய் காய்க்கும்.
அதேபோல் மிளகாய் செடிகளுக்கு அருகில் உளுந்து, பாசிப்பயறு செடிகளை பயிரிட்டால் அதன் மூலம் நன்மை தரும் பூச்சிகள் பெருகி விளைச்சல் நன்றாக இருக்கும் என்கின்றனர் வேளாண்மைத்துறையினர். இந்த ஆலோசனைகளை பின்பற்றுங்கள் மிளகாய் உற்பத்தி அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications