For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டுத் தோட்டத்தில் பப்பாளி மரம் வளர்க்கலாம்

By Mayura Akilan
|

Tree Care
கனிகளின் சிகரம் என்றும், ஏழைகளின் ஆப்பிள் என்றும் மருத்துவர்களால் வர்ணிக்கப்படுவது பப்பாளி. பப்பாளிக் காயில் இருந்து எடுக்கப்படும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பப்பாயின் என்ற என்ஸைம் அதிக மருத்துவ குணம் கொண்டது.

பப்பாளிப் பழத்தில் குளுக்கோஸ், வைட்டமின்கள் ஏ மற்றும் சி அதிக அளவில் உள்ளன. பப்பாளி பழம், இலைகள், வேர்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. பப்பாளிப் பழம் உணவை, குறிப்பாக பருப்புவகை உணவுகள், இறைச்சி போன்றவற்றை எளிதில் செரிக்க வைக்கும் குணம் கொண்டது. 35 கிராம் இறைச்சியை ஒரு கிராம் பப்பாளி செரிக்க வைத்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பப்பாளிப் பழம் பித்தத்தைப் போக்கும். கல்லீரல், கணையம், சிறுநீரக நோய்களை குணப்படுத்தும். ரத்த சோகைக்கும், புற்று நோய்க்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மருத்துவ குணம் நிறைந்த பப்பாளியை வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம்.

மிதவெப்ப மற்றும் வெப்பப் பிரதேசங்களில், சமவெளிகளில் களிமண் பூமியைத் தவிர மற்ற நிலங்களில் பப்பாளி நன்றாக வளரும். மலைப் பகுதிகளில், 1200 மீட்டர் உயரம் உள்ள பகுதிகளிலும் வடிகால் வசதி உள்ள நிலங்களிலும் பப்பாளி வளரும். பப்பாளியின் வயது 24 முதல் 30 மாதங்கள். ஆண்டு முழுவதும் பப்பாளியைப் பயிரிடலாம் என்றாலும், பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் மே முதல் அக்டோபர் மாதம் வரையிலும் பப்பாளி பயிரிடலாம் என்று வேளாண் அலுவலர்கள் பரிந்துரைக்கிறார்கள். நடவுக் காலத்தில் அதிக மழை இருக்கக் கூடாது. வேர் பகுதியில் அதிகம் தண்ணீர் தேங்கக் கூடாது.

பப்பாளி நாற்று தயாரிக்க

பப்பாளி நாற்று தயாரிக்க தொழுஉரம் மற்றும் மணல் நிரப்பி, பாலித்தீன் பைகளில் பை ஒன்றுக்கு 4 விதை வீதம் நட்டு நாற்று தயாரிக்கலாம். 60 நாள்களில் நாற்று தயாராகிவிடும். தொழுஉரம், மண் நிரப்பிய பாலித்தீன் பைகளில் 1 செ.மீ. ஆழத்தில் விதைப்பது நல்லது. ஒரு பைக்கு 4 விதைகள் வீதம் ஊன்றி நிழல்படும் இடத்தில் வைத்து பூவாளி மூலம் நீர் ஊற்ற வேண்டும். ஒரு பைக்கு 1 கிராம் வீதம் கார்போபியுரான் 3 கிராம் குருணை மருந்து இட்டு நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும்.

பப்பாளி பயிரிட நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது, 1.8 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீ. 45 செ.மீ. 45 செ.மீ. அளவில் குழிகள் தோண்டி, மண் மற்றும் தொழு உரமிட்டு நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும்.வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். செடிகளைச் சுற்றி தண்ணீர் தேங்கக் கூடாது.

இருபால் மலர்கள்

ஆண், பெண் என இருபால் தன்மை கொண்ட செடிகளை நீக்கியபின், செடி ஒன்றுக்கு 50 கிலோ தழை, மணி, சாம்பல் உரம் மற்றும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா உரமிட்டு நீர் பாய்ச்ச வேண்டும். 4-வது மற்றும் 8-வது மாதங்களில் 0.5 சதவீதம் துத்தநாக சல்பேட், 0.1 சதவீதம் போரிக் அமிலம் கலந்து செடிகளில் தெளித்தால் மகசூல் அதிகம் கிடைக்கும் .

செடிகள் பூக்கத் தொடங்கியதும் 15 அல்லது 20 செடிகளுக்கு ஒன்று வீதம் ஆண் செடிகளை விட்டுவைத்து, மற்றவைகளை அகற்றிவிட வேண்டும். கோ3, கோ7 ரகங்களில் இருபால் பூக்கள் கொண்டவைகளை மட்டும் விட்டுவிட்டு, பெண் மரங்களை நீக்கிவிட வேண்டும். பப்பாளி மரங்களை சப்பாத்தி பூச்சி என்ற ஒரு வகை பூச்சிகள் தாக்கும். வெள்ளை பூச்சிகள் அதிகமாக இருந்தால் பப்பாளி மரத்தை அழித்து விடுங்கள். ஆஸ்த்துமா போன்ற சுவாச கோளாறுகள் உருவாகிவிடும்.

English summary

How to Care for a Papaya Plant | வீட்டுத் தோட்டத்தில் பப்பாளி மரம் வளர்க்கலாம்

Papayas are warm weather trees that grow best with heat, full sun and little wind. Of the two types of papaya trees--Hawaiian and Mexican--the Mexican variety is hardier, taller and produces larger fruit, while the Hawaiian variety is a little more difficult to grow, is shorter and produces smaller fruit. It takes about 10 months for a papaya fruit to mature to the point that it will produce fruit
Story first published: Tuesday, April 10, 2012, 17:43 [IST]
Desktop Bottom Promotion