Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
வீட்டில் கற்பூரத்தை ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
இந்து தர்மத்தில் தினசரி வழிபாடுகளில் பல புனிதமான பொருட்களை பயன்படுத்துவர்கள்.. அதில் மிக முக்கியமான ஒன்று கற்பூரம்.. நாடு முழுவதும் வழிபாட்டு முறைகளில் பல நடைமுறைகள் இருந்தாலும், சில பொதுவான அம்சங்கள், பயன்படுத்தப்படும் பொருள்கள், இந்து மதத்தை ஒன்றிணைக்கிறது. இந்த பொருட்கள் ஒவ்வொன்றும் இந்து மதத்தில் மத முக்கியத்துவம் வாய்ந்ததாக நம்பப்படுகிறது.
இதில் கற்பூரம் இந்திய குடும்பங்களில் மிக முக்கியமான பொருளாகக் கருதப்படுகிறது.. பூஜையில் பயன்படுத்தப்படும் கற்பூரம் வீட்டின் சுற்றுச்சூழலை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல், பல ஜோதிட பரிகாரங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.. வாங்க இந்த பதிவில் கற்பூரத்தின் நன்மைகள் குறித்து தெரிந்துக் கொள்ளலாம்..

1. எதிர்மறை ஆற்றல்களைத் தடுக்கிறது
ஆரத்தி இல்லாமல் பூஜை முழுமையடையாது. கற்பூர ஹாரத்தி சுற்றுச்சூழலில் இருந்து அனைத்து வகையான எதிர்மறை ஆற்றல்களையும் அசுத்தங்களையும் அகற்றும் என்று நம்பப்படுகிறது. இதனால், குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும் , சாதகமான காற்று வீசும் , பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் படிப்படியாக சீராகும் என்று நம்பப்படுகிறது..
2. காலசர்ப்ப தோஷம் / பித்ரு தோஷம் நீங்க
நட்சத்திரங்களின் சில நிலைகள் அல்லது தவறான நிலைகளில் குவிந்த கிரகங்கள் காரணமாக, கால சர்ப்ப தோஷம் மற்றும் பித்ரு தோஷம் காரணமாக பலர் உடல்நலம் மற்றும் நிதி பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். வீட்டில் ஒரு நாளைக்கு மூன்று வேளை கற்பூரத்தை ஏற்றினால், இதுபோன்ற பாதகமான பாதிப்புகள் நீங்கும் என்கின்றனர் பெரியோர்கள். மேலும், குளியலறையில் கற்பூரத்தை ஒரு கன சதுரம் வைத்திருப்பது நன்மை பயக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. தோஷங்கள் நீங்கி நலல் வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.
3. இறைவனின் அருள் கிடைக்க
சூரிய அஸ்தமனத்தில் கற்பூர ஆரத்தியை ஏற்றுவது தெய்வங்களை மகிழ்விப்பதாகவும், ஒவ்வொரு நாளும் அத்தகைய ஆரத்தியை ஏற்றி வழிபடுபவர்களுக்கு நிதி பிரச்சனைகள் தீருமாம்.. எனவே, தினமும் மாலை பூசையின் போது கற்பூர ஆரத்தி செய்வது நல்ல என பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி வீட்டில் அமைதி நிலவும்.
4. ஆபத்தை குறைக்கிறது
தினமும் கற்பூரம் ஏற்றி வருபவர்களுக்கு எதிர்பாராத விதமாக ஏற்படும் இறப்பு குறையும் என்று கூறப்படுகிறது. இது குறிப்பாக விபத்துகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது முடியாவிட்டால், தூங்கச் செல்வதற்கு முன் கற்பூரத்தை ஏற்றி வைக்க பரிந்துரைக்கப்படுகிறது. படிப்படியாக விபத்தால் மரணம் ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.
5. கெட்ட கனவுகளில் இருந்து விடுபட
நீங்கள் அடிக்கடி கெட்ட கனவுகளை காணுகிரீர்களா? , கற்பூரம் ஏற்றி வைப்பது உங்களுக்கு உதவியாக இருக்கும். கற்பூரமானது சுற்றுச்சூழலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை அகற்றி, அமைதியான சூழலை உருவாக்கி, கனவுகளை விலக்கி வைக்கும். படிப்படியாக சில மனநலப் பிரச்சனைகளையும் சரிபார்க்கலாம்.
6. பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும்
தினமும் கற்பூரம் ஏற்றி வைப்பவர்கள் பொருளாதார முன்னேற்றம் பெறலாம் என்பது ஐதீகம். ஒரு ரோஜாவை எடுத்து அதில் ஒரு சிறிய கற்பூரத்தை ஏற்றவும். பின்னர் அந்த ரோஜாவை துர்கா தேவியின் பாதத்தில் வைத்து வணங்குங்கள். இந்த முறையை தொடர்ந்து 43 நாட்கள் கடைபிடிப்பது நிதி முன்னேற்றத்திற்கு உதவும். நிதி பரிகாரங்கள் துர்கா தேவியுடன் தொடர்புடையது என்பதால், நவராத்திரியின் போதும் இதைச் செய்யலாம்.
7. கற்பூரம் உறவுகளை பலப்படுத்துகிறது
அறையின் மூலைகளில் இரண்டு கற்பூர உருண்டைகளை வைப்பது தம்பதியினருக்கு இடையிலான உறவை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது. எனவே, வீண் வாக்குவாதங்களும், சண்டை சச்சரவுகளும் அடிக்கடி நிகழும் உறவில் இந்த முறையைப் பின்பற்றுவது சிறந்தது என்று கூறப்படுகிறது. குடும்பத்தில் அமைதியுடன், கோபமும் குறையும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது...



Click it and Unblock the Notifications