Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
செல்வம் உங்கள் வீட்டில் தங்க வேண்டுமா? இதோ 10 வாஸ்து குறிப்புகள்..!
வீடுகளில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருந்தால்தான் செல்வம் தங்கும். எப்போதும் பணப்பிரச்னை ஏற்படாது என்கிறது வாஸ்து சாஸ்திரம்.. அதுமட்டுமல்லாமல் எல்லா மக்களுக்கும், குறிப்பாக சொல்லப்போனால் எல்லா படிநிலைகளில் உள்ள மக்களுக்கு தேவையானது பணம். நம்முடைய நிதி நிலை மேம்பட, நிதி சிக்கல்கள் தீர, செல்வத்தின் கடவுளான மகாலட்சுமி வழிபாடு செய்வது அவசியம்.
1. உரிமையை நிலைநிறுத்தும் பெயர்ப்பலகை
சொந்த வீட்டு உரிமையாளர்கள் தங்களது பெயர்ப்பலகையை வாசல் மதிலில் பதிக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்தப் பெயர்ப்பலகையை பார்த்துப் படிப்பவர்களின் மனதில் நீங்கள்தான் வீட்டு உரிமையாளர் என்று எழுகின்ற ஆக்கப்பூர்வமான உணர்வு உங்களது செல்வத்தை நிலைக்கச் செய்யும்.

2. தினமும் விளக்கேற்றல்
வீடு ஒளிமயமாக பிரகாசித்தாலே லட்சுமி கடாட்சம் பொங்கி வழியும். வீட்டு முகப்பிலும், பூஜை அறையிலும் தினசரி காலை மாலை விளக்கேற்றி வைத்தால் செல்வம் பெருகும். மங்களம் உண்டாகும்.
3. மங்களம் தரும் ஸ்வஸ்திக் இயந்திரம்
பூஜை அறையிலும் பிரதான அறையிலும் மங்களத்தின் சின்னங்களான ஸ்வஸ்திக், ஓம் குறிகளை இடுங்கள். நல்ல அறிகுறிகள் தோன்றி வீட்டை வளமாக்கும்.
4. கண் திருஷ்டியைப் போக்கும் எலுமிச்சை
சனிதோறும் பூஜை செய்து ஒரு டம்ளரில் எலுமிச்சைப் பழத்தைப் போட்டு பூஜை அறையில் வைக்கவும். வாரந்தோறும் பூஜித்து புதிய பழத்தை வைக்கவும். இப்படி செய்தால் கண் திருஷ்டி உங்கள் இல்லத்தையும் உங்கள் குடும்பத்தாரையும் விலகி ஓடும்.
5. பூஜை அறையில் புனித கங்கை நீர்
புனித கங்கை நீர் அடங்கிய கலசத்தை பூஜை அறையில் வைத்தால் வீடு பரிசுத்தமானதாக விளங்கும். மங்காத செல்வம் உண்டாகும்.
6. தீயசக்திகளை துரத்தும் உப்பு
வீட்டின் அறை மூலைகளில் சிறிய தட்டு அல்லது கிண்ணத்தில் உப்பு நிறைத்து வைக்கவும். தீய சக்திகளை அறவே கிரகித்து நீக்கும் தன்மை உப்புக்கு உள்ளது.
7. சரியான திக்கில் சமையலறை
வாஸ்துப்படி வீட்டில் தென்கிழக்கு மூலையில் சமையலறை அமைப்பதே ஆகச் சிறந்ததாகும். அது இயலாதபட்சத்தில் அதற்கு மாற்றாக வடமேற்கு மூலையில் சமையலறையை அமைக்கலாம். இருந்தாலும் தென்கிழக்கு மூலையில் அடுப்பை வைத்திருக்கோமா என்பதை உறுதி செய்யுங்கள்.
8. சமையலறையில் மருந்துகள் வைத்தலாகாது
எந்தவொரு தீயசக்தியும் சமையலறையை அண்டவிடக்கூடாது. இதற்கு முதல்படி நோய் நிவாரணிகளான மருந்துகள் சமையலறையில் வைக்கக்கூடாது. ஆரோக்கியத்துக்கும், மகிழ்ச்சிக்கும் இடமான சமையலறையில் மருந்துகளை வைத்திருப்பது ஆகாது.
9. படுக்கையறையில் தேவையில்லை முகம்பார்க்கும் கண்ணாடி
படுக்கையறையில் முகம் பார்க்கும் கண்ணாடியை அமைக்கக் கூடாது. சிலர் வீட்டில் டிரஸ்ஸிங் டேபிள் படுக்கையறையில் இருந்தால் இரவு தூங்கும்போது மறக்காமல் அதன் கண்ணாடியை திரையிட்டு மூடிவிடவும். வாஸ்துப்படி படுக்கையறையில் உள்ள கண்ணாடி பிணியையும் குடும்பத்தில் சச்சரவையும் ஈர்த்து தரும்..
10. அமைதியைத் தூண்டும் மணியோசை
மணி அடுக்குகளை வீட்டில் தொங்கவிட்டால் தீய சக்திகளை தவிடு பொடியாக்கும். காற்றில் எப்போதும் நல்ல சக்தியை பரப்பும் தன்மை இந்த மணிகளுக்கு உண்டு.



Click it and Unblock the Notifications