Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
வாஸ்துப்படி கடிகாரத்தை வீட்டின் எந்த திசையில் வைக்க வேண்டும் தெரியுமா?
வாஸ்துவில் எந்த திசையில் எதை வைக்க வேண்டும், எதை வைக்கக்கூடாது என்பது பற்றி கூறப்பட்டுள்ளது. மேலும் வீட்டின் எந்த திசையில் கடிகாரத்தை வைக்க வேண்டும், எந்த திசையில் வைக்கக்கூடாது என்பது குறித்தும் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்கும் ஒரு பொருள் தான் கடிகாரம். இந்த கடிகாரமானது நேரம் எவ்வளவு வேகமாக கடந்து செல்கிறது என்பதை நினைவூட்டுகிறது. தற்போது என்ன தான் போனில் நேரத்தை பார்க்க முடிந்தாலும், பெரும்பாலான வீடுகளில் கடிகாரங்கள் ஒரு அலங்காரப் பொருளாக திகழ்கின்றன. இப்படிப்பட்ட கடிகாரம் வாஸ்து சாஸ்திரத்தில் முக்கியமான பொருளாக கருதப்படுகிறது. அதே சமயம் வாஸ்துவில் திசைகளின் முக்கியத்துவம் கூறப்பட்டுள்ளது.

வீட்டில் கடிகாரத்தை மாட்டும் போது, அதை சரியான திசையில் தொடங்க விட வேண்டும். தவறான திசையில் தொடங்கவிட்டால், அதன் விளைவாக வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரித்து, வீட்டின் அமைதியும், செழிப்பும் பாதிக்கப்படும். வாஸ்துவில் எந்த திசையில் எதை வைக்க வேண்டும், எதை வைக்கக்கூடாது என்பது பற்றி கூறப்பட்டுள்ளது. மேலும் வீட்டின் எந்த திசையில் கடிகாரத்தை வைக்க வேண்டும், எந்த திசையில் வைக்கக்கூடாது என்பது குறித்தும் கூறப்பட்டுள்ளது. இப்போது அதுக்குறித்து காண்போம்.

வடக்கு
கடிகாரத்தை வீட்டின் வடக்கு திசையில் தொங்க விடுவதே நல்லது. ஏனெனில் வடக்கு செல்வம் மற்றும் செழிப்பின் கடவுளான குபேரனின் திசையாகும். இந்த திசையில் கடிகாரத்தைத் தொங்க விடும் போது, அது குடும்பத்தில் உள்ள அனைத்து நிதி பிரச்சனைகளையும் விலக்கி வைக்கும்.

கிழக்கு
ஒருவேளை உங்களால் வடக்கு திசையில் கடிகாரத்தை மாட்ட முடியாவிட்டால், கிழக்கு திசையில் வைக்கலாம். கிழக்கு திசையானது தேவர்களின் தலைவனான இந்திரனின் திசையாகும். இந்த திசையில் வீட்டில் கடிகாரத்தை வைத்தால், அது வீட்டில் செழிப்பை ஈர்க்கும்.

மேற்கு
ஒருவேளை உங்கள் வீட்டில் வடக்கு, கிழக்கு திசைகளில் கடிகாரத்தை வைக்க முடியாவிட்டால், மேற்கு திசையிலும் கடிகாரத்தை வைக்கலாம். மேற்கு திசையானது மழையின் அதிபதியான வருணனின் திசையாகு. எனவே இந்த திசையில் கடிகாரத்தை வைக்கும் போது, அது வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வரும்.

தெற்கு
வாஸ்துப்படி, வீட்டின் தெற்கு திசையில் மட்டும் கடிகாரத்தை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது குடும்பத்தில் பிரச்சனைகளை அதிகரிக்கும் மற்றும் நிதி இழப்பை ஏற்படுத்தும். ஏனெனில் தெற்கு திசையானது மரணத்தின் அதிபதியான எமனின் திசையாகும்.

செய்யக்கூடாதவை
* வாஸ்துப்படி வீட்டில் உடைந்த மற்றும் பழுதடைந்த கடிகாரத்தை ஒருபோதும் வைத்திருக்கக்கூடாது. ஏனெனில் இம்மாதிரியான கடிகாரம் வீட்டில் நேர்மறை ஆற்றல் நுழைவதைத் தடுத்து, எதிர்மறை ஆற்றலை ஈர்க்கத் தொடங்கும்.
* வீட்டின் பிரதான கதவில் கடிகாரம் வைப்பது அசுபமாக கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, இது உங்கள் வீட்டில் பதற்றத்தை ஏற்படுத்தும். எதிர்மறை ஆற்றலின் ஆதிக்கத்தை அதிகரிக்கும் மற்றும் பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.



Click it and Unblock the Notifications