Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
நல்ல அதிர்ஷ்டத்திற்கு வீட்டில் வைக்க வேண்டிய வாஸ்து சிலைகள்!
வாஸ்து சாஸ்திரத்தின் படி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை அதிகரிக்கும் சில சிலைகள் வீட்டில் வைத்திருந்தால், வீட்டினுள் நேர்மறை ஆற்றல் நிறைந்து, வாழ்வின் முன்னேற்றத்திற்கு தேவையான புதிய வழிகள் திறக்கப்படும்.
வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருந்தால் தான், அந்த வீட்டில் குடியிருப்போர் சந்தோஷமான மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ முடியும். அதற்கு தான் வீட்டை வாஸ்துப்படி கட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒரு வீடு வாஸ்துப்படி இல்லாவிட்டால், அந்த வீட்டில் உள்ளோர் பலவிதமான பிரச்சனைகளை சந்திப்பார்கள். மேலும் வீட்டில் வைத்திருக்கும் பொருட்களைப் பற்றியும் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அதாவது நாம் வீட்டில் வைத்திருக்கும் பொருட்களையும் வாஸ்துப்படி பார்த்து வைத்தால், குடும்பம் செழிப்பாக இருக்கும்.

பலர் வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தரும் பொருட்களை வாங்கி வீட்டில் வைப்பதுண்டு. சரி, வீட்டிற்கு அதிர்ஷ்டத்தைத் தரும் பொருட்கள் எவையென்று நீங்கள் கேட்கலாம். வாஸ்து சாஸ்திரத்தின் படி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை அதிகரிக்கும் சில சிலைகள் வீட்டில் வைத்திருந்தால், வீட்டினுள் நேர்மறை ஆற்றல் நிறைந்து, வாழ்வின் முன்னேற்றத்திற்கு தேவையான புதிய வழிகள் திறக்கப்படும். இப்போது நல்ல அதிர்ஷ்டத்திற்கு வீட்டில் வைக்க வேண்டிய வாஸ்து சிலைகள் குறித்து காண்போம்.

யானை சிலை
வாஸ்து சாஸ்திரத்தில் யானை ஐஸ்வர்யத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. யானை சிலையை வைத்திருக்கும் வீட்டில் லட்சுமி தேவி குடியிருப்பாள். அதுவும் வெள்ளை அல்லது பித்தளையால் ஆன யானை சிலையை வீட்டில் வைத்திருந்தால், பணம் தொடர்பான பிரச்சனை நீங்குவதோடு, வீட்டுச் சூழலும் அமைதியாக இருக்கும். குறிப்பாக இது வீட்டில் உள்ள ராகு தோஷம் தொடர்பான பிரச்சனைகளைப் போக்கும்.

ஆமை சிலை
வீட்டில் ஆமை சிலையை வைத்திருப்பதும் நல்லது. பொதுவாக ஆமை விஷ்ணுவுடன் தொடர்புடையது என்பதால், ஆமை சிலையை வீட்டில் கிழக்கு அல்லது வடக்கு பகுதியில் வைத்திருக்க வேண்டும். ஆனால் ஆமை சிலையை வீட்டில் வைக்க வேண்டுமானால், அது சில உலோகத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும். இதனால் வீட்டில் அமைதியும் செழிப்பும் ஏற்படும்.

மீன் சிலை
பித்தளை அல்லது வெள்ளியால் ஆன மீன் சிலையை வீட்டில் வைத்திருப்பதன் மூலம், வீட்டில் உள்ளோர் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். ஆனால் மீன் சிலையை வீட்டின் வடகிழக்கு திசையை நோக்கி எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதன் விளைவாக வீட்டின் வருமானம் அதிகரிக்கும் மற்றும் குடும்பத்தில் உள்ளோர் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண்பார்கள்.

குதிரை சிலை
குதிரை ஆற்றலைக் குறிக்கிறது. ஆகவே வீட்டில் குதிரை சிலையை வைத்திருப்பது வாழ்வில் முன்னேறத் தூண்டுகிறது. அதுவும் குதிரை சிலையை தெற்கே வைப்பதால் அது பல நன்மைகளை வழங்கும். குறிப்பாக குதிரை சிலையை வைக்கும் போது, சிலையானது ஏதாவது கதவி அல்லது ஜன்னலை பார்த்தவாறு இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் மற்றும் அதிர்வுகளை உருவாக்க உதவுகிறது.

சிரிக்கும் புத்தர்
பொதுவாக சிரிக்கும் புத்தர் சிலையை யார் கண்டாலும், அவர்களின் முகத்தில் புன்னகை ஏற்படும். அப்படிப்பட்ட சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டில் வைத்திருந்தால், அந்த புத்தரின் ஆவி வீட்டில் ஒரு மங்களகரமான மற்றும் நேர்மறையான ஆற்றலை உருவாக்கும். அதுவும் தங்க முலாம் பூசப்பட்ட சிரிக்கும் புத்தர் சிலையை வைத்திருப்பதே நல்லது. சொல்லப்போனால் இது ஒரு சிறந்த பரிசுப் பொருளும் கூட.



Click it and Unblock the Notifications