Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
வாஸ்துப்படி, இந்த பொருட்களால் வீட்டை அலங்காரம் பண்ணிடாதீங்க... இல்ல நிறைய இழப்பை சந்திப்பீங்க...
வாஸ்துப்படி சில பொருட்கள் வீட்டின் அமைதியையும், மகிழ்ச்சியையம் அழிக்கும். எனவே ஒரு பொருளைக் கொண்டு வீட்டை அலங்கரிக்க நினைக்கும் முன், அந்த பொருளை வீட்டில் வைக்கலாமா கூடாதா என்பதை அறிந்த பின்னரே வைக்க வேண்டும்.
நம் அனைவருக்குமே நல்ல அழகான பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட வீடுகளில் வாழ ஆசை இருக்கும். அதற்காக பலர் தங்களின் வீடுகளை பல கலைப் பொருட்கள், ஓவியங்கள், போட்டோக்கள் என்று பலவற்றால் அலங்கரிப்பார்கள். நாம் வாழும் வீடானது நமக்கு பிடித்த பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தால், அந்த வீடானது சொர்க்கம் போன்று இருக்கும். ஆனால் நாம் விரும்பும் அனைத்து பொருட்களையுமே வைக்க முடியாது.

ஏனெனில் வாஸ்துப்படி சில பொருட்கள் வீட்டின் அமைதியையும், மகிழ்ச்சியையம் அழிக்கும். எனவே ஒரு பொருளைக் கொண்டு வீட்டை அலங்கரிக்க நினைக்கும் முன், அந்த பொருளை வீட்டில் வைக்கலாமா கூடாதா என்பதை அறிந்த பின்னரே வைக்க வேண்டும். கீழே வாஸ்துப்படி வீட்டை அலங்கரிக்க பயன்படுத்தக்கூடாத சில பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னவென்பதையும், எதனால் வைக்கக்கூடாது என்பதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தாஜ்மஹால்
தாஜ்மஹால் மிகவும் பிரபலமான நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும். இது காதலின் அடையாளமாக கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் இது ஒரு கல்லறை. எனவே தாஜ்மஹாலைக் குறிக்கும் சிறிய உருவங்கள் மற்றும் ஓவியங்கள் கொண்ட எதைக் கொண்டும் வீட்டை அலங்கரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மகாபாரதம் மற்றும் ராமாயண போர் காட்சிகள்
வாஸ்துப்படி, வீட்டில் மகாபாரதம் மற்றும் ராமாயணத்தில் உள்ள போர் காட்சிகளை கொண்ட போட்டோக்களை வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அது குடும்ப உறுப்பினர்களிடையே சண்டைகளை அதிகரிக்கும். என்ன தான் மகாபாரதம் மற்றும் ராமாயணம் போன்ற இதிகாசங்கள் நமக்கு பல விஷயங்கள் கற்றுக் கொடுத்தாலும், அழிவைக் குறிக்கும் எந்த ஒரு போட்டோக்களையும் வீட்டில் வைத்திருக்கக்கூடாது.

சேதமடைந்த/பயன்படுத்தாத கடிகாரம்
நேரம் மிகவும் இன்றியமையாதது மற்றும் அது தான் நம்மை வளர வைக்கிறது. இப்படி வளர்ச்சியைக் குறிக்கும் கடிகாரமானது ஓடாமல் வீட்டின் ஒரு ஓரத்தில் இருந்தால், அதை உடனே அப்புறப்படுத்துங்கள். இல்லாவிட்டால், அது அந்த வீட்டில் உள்ளோரின் வளர்ச்சியில் தடையை ஏற்படுத்தும்.

உடைந்த கண்ணாடி
உங்கள் வீட்டில் கண்ணாடியானது படுக்கைக்கு முன் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதேப் போல் வீட்டில் உடைந்த கண்ணாடியை வீட்டில் வைத்திருக்காதீர்கள். உடைந்த கண்ணாடியை வீட்டில் வைத்திருந்தால், அது ஏழு வருடங்கள் துரதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம் முன்னோர்கள் நம்புகிறார்கள்.

நீர்வீழ்ச்சி, மழை மற்றும் கடல் போட்டோக்கள்
வீட்டின் படுக்கையறையில் நீர்வீழ்ச்சி, மழை மற்றும் கடல் போன்ற போட்டோக்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது நிதி இழப்பை ஏற்படுத்துவதோடு, பல இழப்புக்களை சந்திக்க வைக்கும். இருப்பினும் இந்த மாதிரியான போட்டோக்களை வைக்க சிறந்த திசை வடக்கு திசையாகும்.

விலங்குகளின் போட்டோக்கள்
விலங்குகளின் போட்டோக்கள் அல்லது ஆந்தைகள், புறாக்கள், பாம்புகள் போன்றவற்றின் சிலைகளைக் கொண்டு வீட்டை அலங்கரிக்கக்கூடாது. வாஸ்துப்படி, இந்த விலங்குகள் வீட்டினுள் எப்போதும் எதிர்மறை ஆற்றல் சூழ்ந்திருக்கச் செய்யும். எனவே இந்த தவறை செய்துவிடாதீர்கள்.



Click it and Unblock the Notifications