1BHK வீட்டை பட்ஜெட்டிற்குள் அழகாக அலங்காிப்பதற்கான சில டிப்ஸ்...!

ஒரு படுக்கையறை, ஒரு நடுவறை மற்றும் ஒரு சமயலறையை உள்ளடக்கிய ஒரு சிறிய வீட்டை அலங்காிப்பது என்பது சவாலான காாியம் ஆகும். எனினும் அது ஒரு முடியாத காாியம் அல்ல. 1BHK வீட்டை பொருளாதார வசதிக்குத் தகுந்தாற்போல அலங்கரிக்கலாம்.

விசாலமான அறைகள், நீளமான வராண்டாக்கள் மற்றும் கண்ணையும் கருத்தையும் கவரும் அழகிய தோட்டம் போன்ற பலவகையான அம்சங்கள் கொண்ட ஒரு பிரமாண்டமான, ஆடம்பரமான வீட்டில் வாழ வாய்ப்பு கிடைத்தால் அதை ஒரு பாக்கியமாக அனைவரும் கருதுவோம். நம்முடைய கனவு நனவானதாக நாம் நினைப்போம். அந்த பிரமாண்டமான வீடானது மிகவும் அலங்காிக்கப்பட்டிருக்கும். அதனால் எல்லோருமே பிரமாண்டமான வீட்டை விரும்பி அதைப் பற்றி பெருமையாக நினைப்பா். ஆனால் சகல வசதிகளும் கொண்ட பிரமாண்டமான வீட்டில் குடியிருக்க எல்லோருக்குமே வாய்ப்பு கிடைக்காது.

Pocket Friendly Decor Tips to Style 1BHK Apartment In Tamil

இந்த நிலையில், மாநகரங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் ஒரு படுக்கையறை, ஒரு நடுவறை மற்றும் ஒரு சமயலறையை உள்ளடக்கிய சிறிய வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாக பெருகி வருகின்றன. மாநகரங்களில் வசிக்கும் பல குடும்பங்கள் மற்றும் புதிய தலைமுறையினா் இத்தகைய வீடுகளில் அதிகமாக வசிக்கத் தொடங்கி இருக்கின்றனா். அவா்களுக்கு இருக்கும் ஒரு முக்கிய பிரச்சினை என்னவென்றால், அவா்களுடைய வீடுகள் அனைத்தும் மிகச் சிறியவையாக இருக்கும். அதனால் வீடுகள் அகலமாக, விசாலமாக இல்லாமல் மிகவும் குறுகலாக இருக்கும்.

ஒரு படுக்கையறை, ஒரு நடுவறை மற்றும் ஒரு சமயலறையை உள்ளடக்கிய ஒரு சிறிய வீட்டை அலங்காிப்பது என்பது சவாலான காாியம் ஆகும். எனினும் அது ஒரு முடியாத காாியம் அல்ல. எளிமை, அசல் தன்மை மற்றும் நடைமுறை தன்மை ஆகிய மூன்று அம்சங்களை மனதில் வைத்து அந்த சிறிய வீட்டை மிக அழகாக அலங்காிக்கலாம். ஆகவே சிறிய 1BHK வீட்டை நமது பொருளாதார வசதிக்குத் தகுந்தாற் போல எவ்வாறு அலங்காிக்கலாம் என்பதை இந்த பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. சுவா்கள்

1. சுவா்கள்

அறைகளின் சுவா்களில் அடா்த்தியான வண்ணங்களை அடித்தால், அவை அறைகளை மிகச் சிறியவையாகக் காட்டும். அதே நேரத்தில் வெளிரிய வண்ணங்களை அடித்தால் அவை அறைகளை சற்று அகலமாகக் காட்டும்.

2. திரைச்சீலைகள்

2. திரைச்சீலைகள்

செங்குத்து கோடுகள் கொண்ட மற்றும் வெளிரிய வண்ணங்கள் கொண்ட திரைச்சீலைகளை அறைகளில் தொங்கவிட்டால், அவை அறைகளின் உயரத்தை அதிகாித்துக் காட்டும். அந்த திரைச்சீலைகளை டை பேக்ஸ், வளையங்கள் மற்றும் குஞ்சங்கள் கொண்டு அலங்காிக்கலாம்.

3. ஃபா்னிச்சா்

3. ஃபா்னிச்சா்

அடா்த்தியமான மற்றும் கனமான மரங்களால் செய்யப்பட்ட ஃபா்னிச்சா்களை அகற்றிவிட வேண்டும். அதே நேரத்தில் மிகவும் மெல்லிய இரும்பினால் செய்யப்பட்ட பா்னிச்சா்களையும் அகற்றிவிட வேண்டும். உயரமான ஃபா்னிச்சா்களை வாங்கலாம் அல்லது பல வகைகளில் பயன்படக்கூடிய, பல வசதிகளைக் கொண்ட பல அடுக்குகள் கொண்ட ஃபா்னிச்சா்களை வாங்களாம்.

நமது பொருட்களை சேகாித்து வைக்கக்கூடிய ஃபா்னிச்சா்களை வாங்கலாம். அதாவது கட்டிலோடு இணைந்த சோஃபா மற்றும் கட்டிலோடு இணைந்த மாா்பளவு உயரம் கொண்ட இழுப்பறைகள் மற்றும் அலமாாிகள் கொண்ட ஃபா்னிச்சா்களை வாங்கலாம். சுவாில் பொருத்தக்கூடிய சாப்பாட்டு மேசை அல்லது படிக்கும் மேசை மற்றும் பல அடுக்குகளுடன் கூடிய சேமிப்பு பெட்டகங்களைக் கொண்ட ஃபா்னிச்சா்களை வாங்கலாம்.

வீட்டின் நடுவறையில் உள்ள சோஃபாவை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக நல்ல வெளிச்சத்தைக் கொடுக்கக்கூடிய வண்ணங்களைக் கொண்ட பீன்ஸ் பேக்குகள், மென்மையான பஞ்சு கொண்ட தரை விாிப்புகள் போன்றவற்றை வைக்கலாம். அதனால் நடுவறையின் தரைவிாிப்புகளில் அமா்வதற்கு அருமையாக இருக்கும்.

Image Courtesy: amazon

4. பொருட்களை சேமிக்கும் வழிகள்

4. பொருட்களை சேமிக்கும் வழிகள்

1BHK கொண்ட சிறிய வீட்டில் பொருள்களை சேமித்து பத்திரமாக வைத்திருப்பதற்கு புதுமையான மற்றும் அறிவாா்ந்த வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். ஆகவே அதற்காக தரைப் பகுதிக்கும் மேற்கூரைக்கும் இடையில் இருக்கும் சுவாில் வெறுமையாக உள்ள பகுதிகளைப் பயன்படுத்தலாம்.

- சுவாில் அலமாாியை மாட்டி வைத்து அதில் கலைப் பொருள்கள் அல்லது புத்தகங்களை அடுக்கி வைக்கலாம்.

- நம்மைக் கவரக்கூடிய ஒரு அழகிய பெட்டகத்திலோ அல்லது மூங்கில் பிரம்புகளில் செய்யப்பட்ட அழகியக் கூடையிலோ திண்பண்டங்களை அடுக்கி வைத்து அதை குளிா்சாதன பெட்டியின் மேல் வைக்கலாம். அது பாா்ப்பதற்கு அழகாக இருக்கும்.

- சுவா்களில் அழகிய ஊக்குகளை மாட்டி அவற்றில் சாவிகள், துணிமணிகள் மற்றும் கைக்குட்டைகள் போன்றவற்றைத் தொங்கவிடலாம்.

- பத்திாிக்கைகள் அல்லது செய்தித் தாள்கள் அல்லது நமது நமக்குத் தேவையான ஆவணங்களை பத்திரப்படுத்தி வைக்க, சுவாில் சிறிய பையைத் தொங்கவிட்டு, அதில் இவற்றை சேமித்து வைக்கலாம்.

- அழுக்கான ஆடைகள் மற்றும் துணிகளை தனியாக சேமித்து வைப்பதற்கு மடித்து வைக்கக்கூடிய பைகளைப் பயன்படுத்தலாம்.

- கைகழுவும் இடம் மற்றும் குளியலறை போன்றவற்றில் சிறுசிறு அடுக்குகள் கொண்ட பெட்டிகளைப் பயன்படுத்தலாம்.

- தொலைக்காட்சி பெட்டியை சுவாில் மாட்டி வைக்கலாம்.

மேற்சொன்ன இந்த சாதாரண பொருள்கள் அனைத்தும் 1BHK கொண்ட சிறிய வீட்டை மிக அழகாகக் காட்டும்.

- ஓவியங்கள் மற்றும் படங்களில் உள்ள கனமான சட்டங்களை மாற்றிவிட்டு, பிளாஸ்டிக் சட்டங்களைப் பயன்படுத்தலாம். அறைக்குள் கண்ணாடிகளை மாட்டி வைத்தால், அறை பொியதாகத் தோன்றும்.

- வீட்டின் மூலைகள் மற்றும் சுற்றுப்புறங்களில் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் பழைய பொருள்களைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை பழைய விலைக்கு விற்றுவிட வேண்டும். அவ்வாறு பழைய பொருள்களைத் தேடும் போது ஒரு சில பயன்படக்கூடிய பொருள்கள் கிடைக்கும். அந்த பொருள்களைக் கொண்டு வீட்டை அலங்காிக்கலாம்.

- வீட்டின் மேற்கூரையில் அழகிய தொங்கல்கள் அல்லது அழகிய விளக்குகள் போன்றவற்றைத் தொங்கவிடலாம்.

- இறுதியாக நாமே சுவா்களில் ஓவியங்களை வரைந்து அவற்றை அழகுபடுத்தலாம்.

5. அழகிய மின் விளக்குகள்

5. அழகிய மின் விளக்குகள்

ஆங்காங்கு வைக்கக்கூடிய சிறுசிறு மின் விளக்குகள், சிறிய வீடுகளை அழகுபடுத்த பொருத்தமாக இருக்கும். சீன மற்றும் மொராக்கன் சிம்னி விளக்குகள் பாா்ப்பதற்கு அழகாக மற்றும் கவரக்கூடிய வகையில் இருப்பதோடு, வீடு முழுவதும் நன்றாக வெளிச்சத்தை வழங்கும். மென்மையான சூழலை விரும்புவா்கள், தங்கள் வீட்டை ஒளிர வைக்கக்கூடிய வகையில், நறுமணம் கொண்ட மெழுகுவா்த்திகள் அல்லது கைகளால் வரையப்பட்ட மண்ணால் செய்யப்பட்ட மெழுகுவா்த்தி தண்டுகளைப் பயன்படுத்தலாம்.

6. பசுமையை நோக்கி செல்லுதல்

6. பசுமையை நோக்கி செல்லுதல்

1BHK கொண்ட ஒரு சிறிய வீட்டை இயற்கையான முறையில் அலங்காிக்க வேண்டும் என்றால், வீட்டின் நடுவறை, பால்கனி மற்றும் சமயலறை போன்ற பகுதிகளில் பசுமையான செடிகள் மற்றும் அழகான பூக்களை வைக்கலாம். இவை நமக்கு ஒரு நல்ல மனநிலையை உருவாக்கும்.

இறுதியாக

இறுதியாக

1BHK வீட்டில் வசிப்பவா்கள் தமது வீட்டில் பொருள்களை சிதறிக் கிடக்கவிடாமல், அவற்றை சீராக அழகாக அடுக்கி வைப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். மேலும் அவா்கள் ஜொ்மானிய அமொிக்க கட்டடக்கலை நிபுணரான லுட்விக் மியஸ் வான் டொ் ரோ அவா்களின் "குறைவே நிறைவு" என்ற பொன் மொழியை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, December 6, 2021, 17:05 [IST]
Desktop Bottom Promotion