Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்..
வாஸ்துப்படி, வீட்டின் எந்த திசையில் காலெண்டரை தொங்க விட வேண்டும் தெரியுமா?
2023 புத்தாண்டிற்கு உங்கள் வீட்டில் காலெண்டரை தொங்க விடும் முன்பும் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில விஷயங்கள் மற்றும் எந்த திசையில் காலெண்டரை தொங்க விட வேண்டும் என்பதை சற்று விரிவாக காண்போம்.
2022 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடியவுள்ளது. நாம் அனைவரும் புத்தாண்டை வரவேற்க தயாராகிக் கொண்டிருக்கிறோம். புத்தாண்டு வந்தாலே முதலில் நாம் செய்வது, புதிய காலெண்டரை வீட்டில் தொங்கவிடுவோம். காலெண்டரானது ஒருவர் நாளுக்கு நாள் முன்னேறி செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலான ஒரு பொருள். வாஸ்து சாஸ்திரத்தின் படி, இந்த காலெண்டரை நாம் சரியான திசையில் தொங்க விட வேண்டும். ஏனெனில் காலெண்டர் இருக்கும் இடம் மற்றும் திசையும் ஒருவரின் வீட்டில் மற்றும் ஒருவரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

வாஸ்து சாஸ்திரத்தில் கலெண்டரை தொங்க விடுவதற்கு என்று பல விதிகள் உள்ளன. தவறான இடத்தில் அல்லது திசையில் காலெண்டரை தொங்கவிட்டால், அது வீட்டில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போது 2023 புத்தாண்டிற்கு உங்கள் வீட்டில் காலெண்டரை தொங்க விடும் முன்பும் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில விஷயங்கள் மற்றும் எந்த திசையில் காலெண்டரை தொங்க விட வேண்டும் என்பதை சற்று விரிவாக காண்போம்.

வீட்டின் எந்த இடத்தில் காலெண்டரை தொங்கவிடக்கூடாது?
* வாஸ்து சாஸ்திரத்தின் படி, காலெண்டரானது கடிகாரத்தைப் போன்றது. எனவே எப்படி கடிகாரத்தை வீட்டின் தெற்கு பகுதியில் தொங்கவிடக்கூடாதோ, அதேப் போல் காலெண்டரையும் தொங்கவிடக்கூடாது. இது வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஈர்த்து, வீட்டில் உள்ளோரின் முன்னேற்றம் மற்றும் செழிப்பில் இடையூறை ஏற்படுத்தும்.
* காலெண்டரை எப்போதும் வீட்டின் பிரதான வாசலின் முன் தொங்கவிடக்கூடாது. இது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும்.
* காலெண்டரை காற்று அதிகம் வீசும் இடத்தில் தொங்கவிடக்கூடாது. வாஸ்துப்படி, காலெண்டர் பறந்து கொண்டே அல்லது அசைந்து கொண்டே இருப்பது துரதிர்ஷ்டமாக கருதப்படுகிறது.
* கதவுகளுக்கு பின் காலெண்டரை தொங்கவிடக்கூடாது. இல்லாவிட்டால், அது வீட்டில் உள்ளோரை அடிக்கடி நோய்வாய்ப்பட வைக்கும்.

காலெண்டரை வீட்டில் தொங்க விடும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
* வீட்டில் தொங்க விடும் காலெண்டரில் போர், இலையுதிர் காலம், வறண்ட மரம், சோகமான படங்கள், காட்டு விலங்குகளின் படங்கள் எதுவும் இருக்கக்கூடாது. ஏனெனில் இது குடும்பத்தில் சண்டைகளை அதிகரித்து, வீட்டின் அமைதியைக் கெடுத்துவிடும்.
* அழுவது போன்ற அல்லது சோகமாக இருப்பது போன்ற படங்கள் உள்ள காலெண்டரையும் வீட்டில் வைத்திருக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது வீட்டில் பணப்பிரச்சனையை உண்டாக்கும்.
* பழைய காலெண்டருக்கு மேலே புதிய காலெண்டரை தொங்க விடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது வீட்டில் உள்ளோரிடைய சண்டைகளை உருவாக்கும்.
* கிழிந்த காலெண்டரை வீட்டில் வைத்திருக்கக்கூடாது. ஏனெனில் இது வாஸ்து தோஷத்தை உருவாக்கும்.
* வாஸ்துப்படி, காலெண்டரானது பச்சை, நீலம், வெள்ளை, பிங்க், நீலம் மற்றும் சிவப்பு நிறங்களில் இருப்பது அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது.
இப்போது எந்த திசையில் காலெண்டரை தொங்கவிட வேண்டும் என்பதைக் காண்போம்.

செல்வம் பெருக எந்த திசையில் காலெண்டரை தொங்க விட வேண்டும்?
வீட்டில் செல்வம் பெருகுவதற்கு காலெண்டரை கிழக்கு திசைகளில் தொங்க விடுவது நல்லதாக கருதப்படுகிறது. இந்த திசையில் காலெண்டரை தொங்கவிடும் போது, அந்த வீட்டில் உள்ளோருக்கு சூரிய பகவனின் குணாதியங்கள் இருக்கும். மேலும் கிழக்கு திசையில் காலெண்டரை தொங்க விட்டால், வீட்டில் உள்ளோர் அவர்களின் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். அதுவும் காலெண்டரில் சூரியன் உதிப்பது போன்ற படம் இருந்தால், அது இன்னமும் நல்லது. ஆனால் கிழக்கு திசையில் காலெண்டரை வைப்பதாக இருந்தால், பிங்க் மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ள காலெண்டரை தொங்கவிடுங்கள்.

வேலை சிறப்பாக நடக்க எந்த திசையில் காலெண்டரை தொங்க விட வேண்டும்?
வாஸ்துப்படி, பணியிடத்தில் உங்கள் வேலை சிறப்பாக நடைபெற வேண்டுமானால், காலெண்டரை மேற்கு திசையில் வையுங்கள். இதனால் வேலை சுமூகமாக நடப்பதோடு, உங்களின் வேலையும் வேகமடையும் மற்றும் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் முன்னேற்றம் ஏற்படும்.

வீட்டில் மகிழ்ச்சி பெருக எந்த திசையில் காலெண்டரை தொங்க விட வேண்டும்?
வடக்கு திசை குபேர திசையாக கருதப்படுகிறது. இந்த வடக்கு திசையில் காலெண்டரை தொங்கவிடுவதால் செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் வாழ்வில் திருப்திகரமான உணர்வைத் தரும். இந்த திசையில் தொங்க விடும் காலெண்டரில் தோட்டம், நீரூற்றுகள், ஆறுகள், கடற்கரை போன்ற படங்கள் இருந்தால் இன்னும் நல்லது. இது தவிர, திருமண போட்டோக்கள் மற்றும் குழந்தைகளின் படங்கள் உள்ள காலெண்டரையும் தொங்கவிடலாம். ஆனால் சிறப்பான பலனைப் பெற பச்சை, வெள்ளை நிறங்களைக் கொண்ட காலெண்டரை தொங்க விட வேண்டும்.



Click it and Unblock the Notifications