Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வீட்டில் பணம் அதிகம் சேர வேண்டுமா? அப்ப வாஸ்துப்படி இந்த சிலைகளை வாங்கி வையுங்க...
வீட்டில் சிலைகளைக் கொண்டு அலங்கரிக்கும் போது, கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சில வகையான சிலைகள் வீட்டினுள் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
நாம் அனைவருமே வீட்டை அழகாக வெளிக்காட்ட விரும்புவோம். அதற்காக வீட்டை பல அழகான பொருட்களை வாங்கி அலங்கரிப்போம். வாஸ்துப்படி வீட்டில் வைக்கப்படும் ஒவ்வொரு பொருட்களுமே அந்த வீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். வீட்டை அலங்கரிப்பதற்கு ஏராளமான பொருட்கள் உள்ளன. சிலர் வீட்டில் பல அழகான போட்டோக்களை வாங்கி மாட்டுவார்கள், சிலர் உள்அலங்கார செடிகளைக் கொண்டு வீட்டை அலங்கரிப்பார்கள். இன்னும் சிலர் சிலைகளை வாங்கி வைத்து வீட்டை அலங்கரிப்பார்கள்.

ஆனால் வீட்டில் சிலைகளைக் கொண்டு அலங்கரிக்கும் போது, கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சில வகையான சிலைகள் வீட்டினுள் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இன்னும் சில வகையான சிலைகள் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, அந்த வீட்டில் செல்வம் பெருக வழிவகை செய்யும். இப்போது ஒருவரது வீட்டில் செல்வம் அதிகரிக்க வாஸ்துப்படி எந்த சிலைகளை வாங்கி வைக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

விநாயகர் சிலை
வீட்டில் விநாயகர் சிலையை வைப்பது நல்லது. அதுவும் பித்தளையாலான விநாயகர் சிலையை வைத்தால், வீட்டில் மகிழ்ச்சி அதிகரிப்பதோடு, அந்த வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் தரும். முக்கியமாக விநாயகர் சிலையை வைத்துள்ள வீட்டில் பணம் அதிகம் சேரும், வீட்டில் உள்ள பிரச்சனைகள் நீங்கும். வீட்டின் வாசலில் விநாயகர் சிலையை வைத்தால், வாஸ்து தோஷம் நீங்கும்.

உலோக யானை
வாஸ்து சாஸ்திரத்தின் படி, உலோகத்தால ஆன யானைகளை வீட்டில் வைப்பது நல்லது. இப்படி வைப்பதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். அதோடு வீட்டில் மகிழ்ச்சி பெருகுவதோடு, செல்வமும் அதிகரிக்கும். எந்த வீட்டில் யானை சிலை உள்ளதோ, அந்த வீட்டில் லட்சுமி தேவி குடிபுகுவாள்.

பசுவின் சிலை
வீட்டில் பசுவின் சிலையை வைப்பது வாஸ்துப்படி நல்லதாக கருதப்படுகிறது. இதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பசுவானது அனைத்து தெய்வங்களும் குடியிருக்கும் ஒரு மங்களகரமான விலங்காக கருதப்படுகிறது. எனவே பசுவின் சிலையை வீட்டில் வைப்பதன் மூலம், அனைத்து தெய்வங்களும் வீட்டில் இருப்பதற்கு சமம். முக்கியமாக பசுவின் சிலை வாஸ்து தோஷத்தை போக்கும்.

ஆமை சிலை
ஆமை விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுகிறது. அதனால் ஆமை சிலையை வீட்டில் வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. எந்த வீட்டில் ஆமை சிலை உள்ளதோ, அந்த வீட்டில் செல்வம் பெருகும். வாஸ்துப்படி ஆமை சிலையை வடக்கு திசையில் வைப்பது மகிழ்ச்சியையும், செழிப்பையும் தரும்.

ஓடும் குதிரை சிலை
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் குதிரை சிலையை வைப்பது, அந்த வீட்டில் உள்ளோருக்கு நல்ல முன்னேற்றத்தைத் தரும். அதுவும் ஓடும் குதிரையின் சிலையானது வேகம் மற்றும் வலிமையைக் குறிக்கிறது. ஆகவே இந்த மாதிரியான சிலையை வீட்டின் வடக்கு திசையில் வைத்தால், அந்த வீட்டில் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.



Click it and Unblock the Notifications