Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வாஸ்துப்படி வீட்டின் முன் 'இத' வெச்சா நேர்மறை ஆற்றல் அதிகரிச்சு.. வீட்டுல செல்வம் பெருகுமாம்..
ஒருவரது வீட்டினுள் நேர்மறை ஆற்றல் நுழைய வேண்டுமானால், வீட்டு வாசலை சுத்தமாகவும், நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் வகையான பொருட்களையும் வைக்க வேண்டும்.
நாம் குடியிருக்கும் வீடு வாஸ்துப்படி இருந்தால் தான் அந்த வீட்டில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும். வாஸ்து சாஸ்திரத்தில், ஒரு வீடு எப்படி இருக்க வேண்டும், எந்த பொருட்களை எங்கு வைக்க வேண்டும், எந்த பொருட்கள் வீட்டில் இருக்கக்கூடாது என்பன பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. மேலும் வீட்டை ஒருவர் அலங்கரிக்கும் போது ஒருசில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அது அந்த வீட்டினுள் எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, அந்த வீட்டில் பிரச்சனைகளை அதிகரிக்கும்.

ஒருவரது வீட்டு வாசலின் வழியாக ஆற்றல்கள் நுழைகிறது. எனவே ஒருவரது வீட்டினுள் நேர்மறை ஆற்றல் நுழைய வேண்டுமானால், வீட்டு வாசலை சுத்தமாகவும், நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் வகையான பொருட்களையும் வைக்க வேண்டும். இதனால் நேர்மறை ஆற்றல் நுழைவதோடு மட்டுமின்றி, லட்சுமி தேவியும் வீட்டிற்கு வருவார் என்பது நம்பிக்கை. இப்போது நேர்மறை ஆற்றல் அதிகம் நுழைய ஒருவரது வீட்டின் பிரதான நுழைவாயில் தொடர்பான சில வாஸ்து குறிப்புகளைக் காண்போம்.

சுத்தம் அவசியம்
வீட்டின் பிரதான நுழைவாயின் வழியே ஆற்றல்கள் நுழைவதால், நுழைவாயிலானது எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அசுத்தமாக இருக்கும் நுழைவாயிலின் வழியே எதிர்மறை ஆற்றல் தான் நுழையும். இதன் காரணமாக வீட்டில் உள்ளோரிடையே சண்டைகள் அதிகரிக்கும்.

ஸ்வஸ்திக், ஓம் அடையாளம்
வீட்டில் பிரதான நுழைவாயிலின் கதவில் ஓம், ஸ்வஸ்திக் போன்ற அடையாளங்களை வைக்க வேண்டும். மேலும் பிரதான நுழைவாயிலின் முன் ரங்கோலியைப் போடுங்கள். இது மங்களகரமானது மட்டுமின்றி, வீட்டில் அதிர்ஷ்டத்தை ஈர்க்கும்.

விநாயர் மற்றும் லட்சுமி சிலை
வீட்டின் நுழைவாயிலை சிலைகளைக் கொண்டு அலங்கரிக்க விரும்பினால், விநாயகர் மற்றும் லட்சுமி சிலைகளை வைத்து அலங்கரிக்கலாம். இது அந்த வீட்டில் உள்ளோருக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவதோடு, செல்வம் மற்றும் செழிப்பைத் தரும்.

குதிரை லாடம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டினுள் எதிர்மறை ஆற்றல் நுழைவதைத் தடுக்க பிரதான நுழைவாயிலில் குதிரை லாடத்தை தொங்கவிடுங்கள். அதுவும் கருப்பு குதிரை லாடத்தை வீட்டின் வாசல் கதவில் தொடங்கவிட லேண்டும்.

மிதியடி
வீட்டின் பிரதான நுழைவாயிலில் எப்போதும் ஒரு சுத்தமான மிதியடியை வைக்க வேண்டும். இதனால் வீட்டிற்கு வருவோரின் பாதங்களில் உள்ள அழுக்குகள் அந்த மிதியடியில் தங்கி, வீட்டில் நுழைய விடாமல் தடுக்கும்.

மணிபிளாண்ட்/துளசி செடி
வீட்டில் எப்போதும் நேர்மறை ஆற்றல் நுழைய வேண்டுமானால், வாஸ்துப்படி வீட்டின் பிரதான நுழைவாயிலின் அருகில் ஒரு மணிபிளாண்ட் அல்லது துளசி செடியை வைத்து வளர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications