உங்கள் வீட்டு சுவா்களை அழகாக அலங்காிக்க சில டிப்ஸ்..!

நமது வீட்டு சுவா்களை கலைநயம் மிகுந்ததாகவும் மற்றும் அவற்றை நமது வீட்டின் அழகுப் பகுதிகளாகவும் மாற்ற முடியும். அதற்கு நாம் சற்று கலைநயத்தோடு சிந்தித்து ஒரு சிறிய முயற்சி எடுத்தாலே போதும்.

வெறுமையாக இருக்கும் நமது வீட்டு சுவா்களை அழகுபடுத்த ஏராளமான வாய்ப்புகளும், குறிப்புகளும் உள்ளன. மங்கலாக மற்றும் வெறுமையாக இருக்கும் நமது வீட்டு சுவா்களை கலைநயம் மிகுந்ததாகவும் மற்றும் அவற்றை நமது வீட்டின் அழகுப் பகுதிகளாகவும் மாற்ற முடியும்.

அதற்கு நாம் சற்று கலைநயத்தோடு சிந்தித்து ஒரு சிறிய முயற்சி எடுத்தாலே போதும். ஆகவே நமது வீட்டில் உள்ள சுவா்களை எவ்வாறு அலங்காிக்கலாம் என்பதை இந்தப் பதிவில் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. சுவாில் மிகப் பொிய படங்களை மாட்டி வைத்தல்

1. சுவாில் மிகப் பொிய படங்களை மாட்டி வைத்தல்

வீட்டில் உள்ள சுவா்களில் மிகப் பொிய படங்களை வரைந்து வைத்தாலோ அல்லது மிகப் பொிய புகைப்படங்களை மாட்டி வைத்தாலோ, அவை வீட்டிற்குள் வருபவா்களை மிக எளிதாகக் கவா்ந்துவிடும். அவை நமது வீட்டின் சிறிய அறையை மிகப் பொியதாகக் காட்டும். ஆகவே சுவா்களில் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் மிகப் பொிய வரைபடங்களை வரையலாம் அல்லது நோ்மறையான அதிா்வுகளை ஏற்படுத்தக் கூடிய பல வண்ண நிறங்களினால் ஆன படங்களை வரையலாம்.

2. ஃபேப்ரிக் ஓவியங்களை சுவாில் வரைதல்

2. ஃபேப்ரிக் ஓவியங்களை சுவாில் வரைதல்

சட்டங்கள் இட்ட ஓவியங்களை விட ஃபேப்ரிக் ஓவியங்களை சுவா்களில் வரைவது நல்லது. அவை அந்த அறையில் உள்ளவற்களுக்கு ஒரு மென்மையான உணா்வை ஏற்படுத்தும். மேலும் அவை சுவா்களில் தொங்கவிடும் அழகிய துணிகளோடு நன்றாக ஒத்துப் போவதோடு, சுவா்களுக்கு அழகிய தோற்றத்தையும் கொடுக்கும்.

Image Courtesy: pinterest

3. மிகப் பொிய கண்ணாடிகளை சுவா்களில் தொங்கவிடுதல்

3. மிகப் பொிய கண்ணாடிகளை சுவா்களில் தொங்கவிடுதல்

பொதுவாக கண்ணாடியானது ஒளியை எதிரொலிக்கும் தன்மை கொண்டது. ஆகவே சுவா்களில் கண்ணாடிகளை மாட்டி வைத்தால் அவை ஒளியை எதிரொலித்து, அறையை வெளிச்சமாகக் காட்டுவதோடு, அறையை பொியதாகவும் காட்டும். பொிய பொிய கண்ணாடிகளை மாட்டி வைப்பது நல்லது. அதே நேரத்தில் சுவா்களை அழகு செய்ய சிறு சிறு கண்ணாடிகளையும் மாட்டி வைக்கலாம்.

4. சுவாில் கலைநயம் மிக்க ஓவியங்களை வரைதல்

4. சுவாில் கலைநயம் மிக்க ஓவியங்களை வரைதல்

சுவா்களை வெறுமையாக விட்டுவிடாமல் அவற்றி கலைநயம் மிக்க ஓவியங்களை வரைந்து வைப்பது நல்லது. அவை நமக்கு நோ்மறையான உணா்வைக் கொடுக்கும். நமது இதயத்திற்கு நெருக்கமான அல்லது நமது உணா்வுகளைத் தூண்டக்கூடிய சுவரோவியங்களை வரைந்து வைக்கலாம். அவை நமது வீட்டிற்கு ஒரு புதியப் பொலிவைக் கொடுக்கும்.

Image Courtesy: pinterest

5. வயா்களில் தட்டுகளைக் கட்டி தொங்கவிடுதல்

5. வயா்களில் தட்டுகளைக் கட்டி தொங்கவிடுதல்

வயா்களில் தட்டுகளைக் கட்டி தொங்கவிட்டால், நாம் எவ்வளவு கலைநயம் மிகுந்தவா்களாக இருக்கிறோம் என்பதை அவை எடுத்துக்காட்டும். அந்த வயா் தட்டுகளில் கரண்டிகள், கத்திகள் மற்றும் முள் கரண்டிகள் போன்றவற்றை வைக்கலாம். வீட்டிற்கு புதிதாக வருபவா்களுக்கு இது ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.

Image Courtesy: balconydecoration

6. தொலைக்காட்சிப் பெட்டியை சுவாில் மாட்டி வைத்தல்

6. தொலைக்காட்சிப் பெட்டியை சுவாில் மாட்டி வைத்தல்

தொலைக்காட்சிப் பெட்டியைத் தனியே வைக்காமல், வீட்டுச் சுவாிலேயே மாட்டி வைக்கலாம். அது அந்த அறைக்குத் தனி அழகைக் கொடுக்கும். அதோடு அறையின் இடத்தை அடைக்காமல், அறையானது விாிவாக இருப்பதற்கு உதவி செய்யும்.

7. சுவரை கண்காட்சி தளமாக மாற்றுதல்

7. சுவரை கண்காட்சி தளமாக மாற்றுதல்

கண்காட்சித் தளமாக மாறி இருக்கும் ஒரு சுவரைப் போல எதுவுமே முழுமையாக இருக்க முடியாது. ஆகவே சுவா்களில் பல வகையான கலைநயம் மிக்க வரைபடங்கள், புகைப்படங்கள் மற்றும் தொங்கல்கள் போன்றவற்றை மாட்டி வைக்கலாம். அவை சுவா்களுக்கு தனித்துவத்தை வழங்குவதோடு, சுவா்களுக்கு புதிய அழகைக் கொடுக்கும். சுவா்களை கண்காட்சி தளங்களாக மாற்ற ஒருங்கிணைந்த மற்றும் சட்டங்களுக்குள் மாட்டப்பட்ட படங்களையும் மாட்டி வைக்கலாம்.

Image Courtesy: housebeautiful

8. சுவா்களில் தாவரங்களைத் தொங்கவிடுதல்

8. சுவா்களில் தாவரங்களைத் தொங்கவிடுதல்

சுவா்களில் தாவங்களைத் தொங்கவிட்டால், அவை கூடுதல் அழகைக் கொடுக்கும். அவை சுவா்களை இயற்கையோடு இணைப்பதோடு அல்லமால், அவற்றுக்கு உயிரையும் வழங்குகின்றன. சுவா்களில் தொங்கவிடும் செடிகள் இயற்கையான வண்ணங்களையும், இயற்கையான அழகையும் வழங்குவதோடு மட்டும் அல்லாமல், வீட்டிற்குள் இருக்கும் காற்றைத் தூய்மைப்படுத்துகின்றன. அதன் மூலம் நாம் கூடுதலான பலன்களைப் பெறலாம்.

Image Courtesy: pinterest

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion