Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
வாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்!
வீடு என்பது குடும்பத்தோடு சேர்ந்திருக்கும் இடம். மகிழ்ச்சியோடு வாழ வேண்டிய இடத்தில் சண்டை சச்சரவுகள் அதிகம் இருந்தால் அங்கே ஏதோ குறை இருக்கிறது என்று அர்த்தம். அந்த குறையை சரி செய்தால் வீட்டில் மகிழ்ச
வீடோ, அலுவலகமோ செங்கல், சிமெண்டினால் கட்டப்பட்டிருந்தாலும் அது சரியான முறையில் கட்டப்பட்டிருந்தால் மட்டுமே நேர்மறை சக்திகள் அங்கே அதிகம் இருக்கும். நம்முடைய அலுவலகமோ, வீடோ எது என்றாலும் அங்கே மகிழ்ச்சியும், நேர்மறை சக்திகளும் நிறைந்திருக்க வேண்டும். அப்போதுதான் செல்வம் தங்கும். நல்லவை அதிகம் நடக்கும்.
பஞ்சபூத தத்துவங்களை உள்ளடக்கியது வாஸ்து. மக்கள் நிம்மதியாகவும், செழிப்பாகவும் வாழ அவர்கள் வசிக்கும் வீடு, தொழிற்சாலை, தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏனைய கட்டடங்கள் வாஸ்து சாஸ்திர விதிகளை அனுசரித்துக் கட்டப்பட வேண்டியது மிகவும் அவசியம்
வீடு வாஸ்து சாஸ்திரப்படி அமைந்திருந்தால் அங்கு மகிழ்ச்சிக்கும் செழிப்புக்கும் குறைவிருக்காது. வீடோ, வியாபார ஸ்தலமோ, தொழிற்சாலையோ, சொந்தமோ, வாடகையோ வாஸ்து சாஸ்திரப்படி கட்டப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு வீட்டிலோ, மனையிலோ, கடையிலோ அலுவலகத்திலோ நேர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்க வேண்டும். சில தேவையற்ற பொருட்கள் இருந்தால் அது எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும். நோய் பாதிப்பையும், அதிர்ஷ்டமின்மையையும் உருவாக்கிவிடும். ஒரு வீட்டிலோ, அலுவலகத்திலோ சண்டை சச்சரவுகள் அதிகம் இருந்தால் அந்த இடத்தில் உள்ள குறைகளை சரி செய்ய வேண்டும். என்னென்ன பொருட்களை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும், மகிழ்ச்சி தங்கும் என பார்க்கலாம்.

1. நுழைவு வாயில்
வீட்டின் நுழைவாயில் கதவானது வீட்டினுள் இருக்கும் மற்ற கதவுகளை விட மிகப்பெரியதாக இருக்க வேண்டும் மற்றும் இந்த நுழைவாயில் கதவானது கடிகார சுற்று முறையில் திறக்கும்படி அமைந்து இருக்க வேண்டும். நுழைவாயில் சுத்தமாக இருக்க வேண்டும், அப்படி இருந்தால் நல்ல எண்ணங்கள் வீட்டிற்குள் வரும். குப்பை தொட்டிகள், உடைந்த நாற்காலிகள் அல்லது முக்காலிகள் போன்றவற்றினை வீட்டின் முன்கதவிற்கு அருகில் கண்டிப்பாக வைக்கக்கூடாது.

2.வெளிச்சம் தேவை
நுழைவாயிலை சுற்றியுள்ள பகுதிகளில் எல்லாம் தேவையான அளவிற்கு வெளிச்சம் இருக்க வேண்டும். நுழைவாயில் பகுதியில் வாசலுக்கு எதிர்திசையில் கண்ணாடியினை வைக்கக்கூடாது அப்படியிருந்தால் அது நுழைவாயில் கதவின் பிம்பத்தினை அப்படியே பிரதிபலிக்கும், இதனால் வீட்டினுள் வரும் நல்ல ஆற்றலை அப்படியே திருப்பி அனுப்பி விடும். அன்னாச்சிப் பழம் ஒவியத்தை உங்களது வீட்டில் அல்லது தொழில் நடக்கும் இடத்தில் முன்புற அறைகளில் வரைந்து வைத்தால் அதிஷ்டமும், வாய்ப்புகளும், நேர்மறை எண்ணங்களும் தேடி வரும்.

3.விளக்கேற்றுங்கள்
மாலை நேரத்தில் வீட்டினை இருட்டாக வைத்திருக்கக் கூடாது வெளிச்சமான லைட் போட வேண்டும். பூஜை அறையில் விளக்கேற்றி வைத்திருக்க வேண்டும். விளக்கேற்றிய பின்னர் விநாயகர் அகவல், கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், அம்மன் பாடல்கள், சிவன் பாடல்களை ஒலிக்க விடுவது நல்லது.

4.நீர்வீழ்ச்சி வேண்டாம்
வீட்டிற்குள் அழகிற்காக நீர்வீழ்ச்சி போல் செய்திருப்பார்கள். ஒரு சில வீடுகளில் அதுபோன்ற இயற்கை காட்சிகள் நிரம்பிய படங்களை சுவர்களில் ஒட்டி வைத்திருப்பார்கள். ஆனால் அது வீட்டில் உள்ள செல்வம், வருமானத்தை வெளியேற்றி விடும் என்பதால் இதுபோன்ற படங்களை அழகிற்காக வைத்திருக்க வேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள்.

5.உடைந்த பொருட்கள்
வீட்டிற்குள்ளேயோ அலுவலகத்திலேயோ உடைந்த பொருட்களையோ, உடைந்த கண்ணாடிகளையோ, சாமி படங்களையோ வைத்திருக்கக் கூடாது. அப்படி வைத்திருந்தால் அது பொருளாதார ரீதியான சிக்கல்களை ஏற்படுத்தும் பணம் செலவாகும்.
பழுதடைந்த பழைய பொருட்கள், உடைந்த பொருட்கள், ஒடத்தின் படம் ஆகியவற்றை கண்டிப்பாக வீட்டினுள் எந்த பகுதியிலும் வைக்க கூடாது. குறிப்பாக படுக்கை அறையில் ஆந்தை சிலை, ஆந்தை படம், ஓடம், நீர்வீழ்ச்சி போன்ற படங்கள், மீன் தொட்டி, போன்றவற்றை வைக்க கூடாது.

6.காதல் சின்னம் தாஜ்மகால்
காதலின் பெருமையை உணர்த்துவதற்காக தன் மனைவி மும்தாஜின் நினைவாக ஷாஜகான் கட்டிய கல்லறைதான் தாஜ்மகால். இது மரணத்தையும் சோகத்தையும் நினைவு படுத்தக்கூடியது. எனவே இதுபோன்ற படங்களையோ, சிலைகளையோ வீட்டில் வைத்திருக்க கூடாது. அப்படி வைத்திருந்தால் இதனால் வீட்டின் நிம்மதி குலைந்து போகும்.

7.நடராஜர் படம் அல்லது சிலை
நடராஜரின் நடனம் உலக இயக்கத்திற்காகத்தான் என்று கூறுவார்கள். அனைத்து நடனக்கலைஞர்களின் வீடுகளிலும் நடராஜரின் உருவம் உள்ள சிலையோ, படமோ இருக்கும். ஆனால் நடராஜரின் நடனம் ஊழிக்காலத்தை அதாவது அழிவினை உணர்த்தக்கூடியது என்கின்றனர் நிபுணர்கள். எனவே ஒரு காலை தூக்கி நடனமாடியபடி இருக்கும் நடராஜர் உருவத்தை வீட்டிற்கு வைப்பது நல்லதல்ல என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள்.

8.செடிகளால் என்ன நன்மை
வீட்டிற்குள் வைத்து வளர்க்க வேண்டிய செடிகளை மட்டுமே வளர்க்க வேண்டும். முள் செடிகள், எதிர்மறை சக்திகளை அதிகரிக்கக்கூடிய செடிகளை வளர்க்கக் கூடாது. அப்படி வளர்த்தால் பணத்தட்டுப்பாட்டினை ஏற்படுத்தி விடும். அதேபோல செயற்கை செடிகளையோ காகிதப்பூக்களையோ வீட்டிற்குள் வைத்திருக்கக் கூடாது. இது வீட்டிற்குள் எதிர்மறை எண்ணங்களை நாமே வரவேற்பது போலாகிவிடும். இதே போல பழுதடைந்த எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தால் அதை உடனே கடையில் மாற்றி விடுவது நல்லது. அல்லது எடைக்கு போட்டு விட வேண்டும். அப்படி வீட்டிலேயே போட்டிருந்தால் அது எதிர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் சண்டை சச்சரவுகளை அதிகரிக்கும்.

9.குழந்தைகளின் படுக்கை அறை
குழந்தைகளின் படுக்கை அறைக்குள் சிங்கம், புலி, போன்ற காட்டு விலங்குகளின் படங்களை ஒரு சிலர் வீடுகளில் மாட்டி வைத்திருப்பது இது நல்லதல்ல. அந்த மிருகங்களின் குணங்கள் வீட்டில் உள்ள நம் குழந்தைகளுக்கு தொற்றிக்கொள்ளும் என்கின்றனர். இயற்கை காட்சிகளையும், மனதிற்கு அமைதியை ஏற்படுத்தும் படங்களையும் மாட்டி வைப்பது நல்லது.

10.பணப்பெட்டி
வீட்டு மனையிலோ, தொழிற்சாலை மனையிலோ, ஈசான்யம் மூடப்படக்கூடாது. இதனால் பிரச்சனைகள், மனச் சோர்வு, குழப்பம், சண்டை சச்சரவுகள் அதிகமாகும். செயல்களில் முன்னேற்றமின்மை, வறுமை, காரியத்தடை,உடல்நலக் குறைவு, விபத்துக்கள், அகால மரணம், சந்ததிக் குறைவு ஆகிய தீய பலன்களை ஏற்படுத்தும். பணப்பெட்டி அல்லது முக்கிய பைல்கள் வைக்கும் பெட்டி அல்லது பீரோவை அறையின் கன்னி மூலையில் தெற்கு அல்லது மேற்குச் சுவரை ஒட்டி வடக்கு அல்லது கிழக்குப் பார்த்து வைக்க வேண்டும்.

11.போர்க்கள காட்சிகள்
மகாபாரத போர்க்களத்தில் வரும் கிருஷ்ணன், அர்ஜூனன் சேர்ந்திருக்கும் படத்தை வைத்திருப்பார்கள். இதே போல ராமாயண போர்க்கள காட்சியும் பாதிப்பை ஏற்படுத்தும். இது குடும்ப ஒற்றுமைக்கு எந்த விதத்திலும் நன்மை தரக்கூடியது அல்ல என்கின்றனர் நிபுணர்கள். ஆனால் ராமர் பட்டாபிஷேக படங்களை வைத்திருப்பது குடும்ப ஒற்றுமையை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications











