தெற்கு பார்த்த வீடு நல்லதா? கெட்டதா?

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாக ஒரு வீட்டிற்கு குடியேறும் முன்போ அல்லது வீட்டை வாங்கும் முன்போ, அந்த வீடு வாஸ்து சாஸ்திரத்தின் படி அமைந்துள்ளதா என்பதைப் பார்த்தே எதுவும் செய்வோம். ஏனெனில் நல்ல வாஸ்துப்படி கட்டப்படாத வீடு, பணப்புழக்கத்தைக் குறைப்பதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும் என பலர் நம்புகிறார்கள்.

South Facing Home Vastu – Most Important Vastu Tips And Remedies

அதிலும் சிலர் வீட்டின் வாசல் எந்த திசையை நோக்கியுள்ளது என்பதையும் பார்ப்பார்கள். அதில் தெற்கு பக்க வீடு என்றாலே வேண்டாம் சாமி என்பார்கள். கிழக்கும், வடக்கும் தான் ராசியான வீடுகள் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி சிலர் காரணம் தெரியாமலேயே புறக்கணிப்பதால், தெற்கு பக்க வீட்டில் குடிப்புகுவதற்கு பலர் அஞ்சுகிறார்கள். ஆனால் தெற்கு பார்த்த வீட்டை ஒதுக்குவது உண்மையிலேயே சரிதானா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏன் பயம்?

ஏன் பயம்?

மக்கள் தெற்கு பக்க வீட்டிற்கு செல்ல பயப்பட முக்கிய காரணமாக இருப்பது, அந்த திசை எமதர்மனுக்கு உரிய திசையாகும். இந்த ஒரு காரணத்தினால் தான் தெற்கு திசை வீட்டைப் பலரும் புனிதமில்லாததாக கருதுகிறார்கள். ஆனால் அந்த வீடு சரியான வாஸ்து சாஸ்திரப்படி அமைந்திருந்தால், எவ்வித பிரச்சனையும் இல்லை.

பலரும் அறியாத உண்மை

பலரும் அறியாத உண்மை

பல பெரிய தொழிலதிபர்களின் வீடுகள், தொழிற்சாலைகள் போன்றவை தெற்கு திசை நோக்கிய படி தான் இருக்கிறது என்பது பலரும் அறியாத உண்மையாகும். இதற்கு காரணம் தெற்கு நோக்கிய வீடு சரியான வாஸ்து சாஸ்திரத்தில் அமைந்திருப்பது தான். எனவே நீங்கள் தெற்கு பார்த்த வீட்டில் இருப்பவரானால், வீட்டில் செல்வமும், ஆரோக்கியமும் மேம்பட கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வாஸ்து டிப்ஸ்களைப் படித்து பின்பற்றுங்கள்.

டிப்ஸ் #1

டிப்ஸ் #1

வாஸ்து சாஸ்திரத்தின் படி, தெற்கு பார்த்த வீட்டில் சமையலறையானது தென்கிழக்கு திசையில் அமைந்திருப்பது மிகவும் நல்லது. இல்லாவிட்டால் வடமேற்கு திசையிலாவது அமைந்திருக்க வேண்டும். இதனால் அந்த வீடு சிறப்பாகவும் புனிதமாகவும் இருக்கும்.

டிப்ஸ் #2

டிப்ஸ் #2

தெற்கு திசை பார்த்த வீட்டில் இருக்கும் படுக்கை அறை தென்மேற்கு திசையில் இருப்பது நல்லது. இந்த திசையில் படுக்கும் அறை அமைந்திருந்தால் தான், அதீத நன்மையைப் பெற முடியும். முக்கியமாக இப்படி அமைந்தால், மன அமைதி அதிகரிக்கும்.

டிப்ஸ் #3

டிப்ஸ் #3

தெற்கு பக்க வீடு இன்னும் சிறப்பாக இருக்க, வாஸ்து சாஸ்திரத்தின் படி தெற்கு பக்க சுவர், வடக்கு பக்க சுவரை விட உயரமாகவும், அடர்த்தியாகவும் இருக்க வேண்டும். இதனால் தெற்கு பக்க வீட்டின் உண்மையான பலனைப் பெறலாம்.

டிப்ஸ் #4

டிப்ஸ் #4

தெற்கு பக்க வீட்டில் கார் செட், தோட்டம், செப்டிக் டேன்க் போன்றவை, அந்த வீட்டில் தென்மேற்கு திசையில் அமைந்திருக்க வேண்டியது அவசியம். முக்கியமாக வீட்டின் தெற்கு பகுதியை விட வடக்குப் பகுதி காலியாக இருக்க வேண்டும்.

டிப்ஸ் #5

டிப்ஸ் #5

தெற்கு வாசல் கொண்ட வீட்டில் கிணறு எந்த பக்கத்தில் இருக்க வேண்டும் என தெரிந்து கொள்ள வேண்டுமா? கட்டாயம் கிணறு, குளம் போன்றவற்றை வீட்டின் தெற்கு பகுதியில் அமைக்கக்கூடாது.

டிப்ஸ் #6

டிப்ஸ் #6

தெற்கு பக்க வாசல் கொண்ட வீட்டில், மரங்களை வடகிழக்கு பகுதியில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேப் போல் மாடி படிக்கட்டுகளை வடகிழக்கு பகுதியில் அமைக்கக்கூடாது. எனவே இதில் மிகவும் கவனமாக இருங்கள்.

அனைத்து ராசிக்காரருக்கும் நல்லதா?

அனைத்து ராசிக்காரருக்கும் நல்லதா?

தெற்கு பார்த்த வீடு அனைத்து ராசிக்காரருக்கும் நல்லதல்ல. இம்மாதிரியான வீடு ரிஷபம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், தனுசு மற்றும் சிம்ம ராசிக்கார்களுக்கு மிகவும் யோகம் நிறைந்த வீடாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் இந்த திசை நோக்கிய வீட்டை வாங்கலாம் அல்லது குடிப்புகலாம்.

எது எந்த திசையில் இருப்பது நல்லது?

எது எந்த திசையில் இருப்பது நல்லது?

* சமையலறை - தென்கிழக்கு, வடமேற்கு

* பூஜை அறை - வடகிழக்கு, மேற்கு, கிழக்கு

* படுக்கை அறை - தென்மேற்கு, தெற்கு, மேற்கு

*கழிவறை - தென்கிழக்கு

குறிப்பு

குறிப்பு

தெற்கு வாசல் கொண்ட வீட்டில் வசிப்பவர்கள், மேற்கு வாசல் வீட்டில் குடியிருப்பவர்களிடம் சம்பந்தம் செய்து கொள்ளக்கூடாது. ஏனெனில் தெற்கும், மேற்கும் ஆகாது. இதனால் வீண் சண்டைகள், விவாதங்கள் தான் வரும். மேலும் இந்த மாதிரியான வீடு ஜாதகம் இல்லாதவர்களுக்கு மிகவும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

South Facing Home Vastu – Most Important Vastu Tips And Remedies

Does your home facing south side? Here are some of the most important vastu tips and remedies for leading a happy and prosperous life.