தீபாவளிக்கான எளிய காகித கைவினை ஆலோசனைகள்!

Posted By: Staff
Subscribe to Boldsky

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. நீங்கள் உங்களின் தீபாவளிக்கான தயாரிப்பு வேலைகளை ஆரம்பித்து விட்டீர்களா? நீங்கள், உங்கள் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு உபயோகித்த அலங்கார பொருட்களை குப்பையில் கொட்ட வேண்டும்.

நண்பர்கள் மற்றும் உறவினர்களை வீட்டிற்கு விருந்திற்கு அழைக்க வேண்டும். தீபாவளி சமையலை திட்டமிட வேண்டும். அனைவருக்கும் பரிசுப் பொருட்கள் வாங்க வேண்டும். இதைப் போல் நீங்கள் செய்ய வேண்டிய அநேக வேலைகள் உள்ளன.

Simple Paper Craft Ideas For Diwali

நீங்கள் இந்த ஆண்டு வேறு ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களா? நீங்கள் ஏன் கைவினைப் பொருட்களால் அலங்காரம் செய்ய முயற்சி செய்யக் கூடாது? கலை மற்றும் கைவினைக் கருவி மூலம், அழகான தீபாவளி அலங்கார பொருட்களைச் செய்து உங்கள் வீட்டை அலங்கரிக்கலாம். அல்லது அதை உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பரிசாக அளிக்கலாம்.

உங்கள் குழந்தைகளும் இதன் மூலம் சில காகித கைவினை முறைகளை கற்றுக்கொள்ளுவார்கள். வண்ணமயமான காகிதங்கள் மூலம், நீங்கள் பல்வேறு பொருட்களைச் செய்து, மற்றும் அலங்கரித்து உங்கள் வீட்டிற்கு தீபாவளியன்று ஒரு முற்றிலும் பிரத்தியேகமான மற்றும் கம்பீரமான தோற்றத்தை கொடுக்க முடியும்.

நீங்கள் இப்பொழுதே அரம்பித்தால்தான் எவ்வித தடுமாற்றம் இன்றி தீபாவளியன்று உங்கள் வீட்டை நன்றாக அலங்கரிக்க இயலும். எனவே உங்களின் முயற்சியை இப்பொழுதே தொடங்குங்கள்.

Simple Paper Craft Ideas For Diwali

பொதுவாக, காகித கைவினைப் பொருட்கள் செய்ய, வித்தியாசமான காகிதங்கள், பல்வேறு நிறங்கள், பேனா, வண்ண பென்சில்கள், மணிகள் மற்றும் அலங்காரக் கற்கள், சிறிய உலோக அகல் விளக்குகள் முதலியன தேவைப்படும். நீங்கள் இந்தப் பட்டியலில் மேலும் சில விஷயங்களை சேர்த்துக் கொள்ளலாம்.

தீபாவளிக்கு எவ்வாறு எளிய காகித கைவினைப் பொருட்கள் செய்யலாம்? இங்கே சில யோசனைகள் உள்ளன. இதைப் பின்பற்றி, உங்கள் வீட்டிற்கு தீப ஒளி, நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வாருங்கள்.

1. தீபாவளி வாழ்த்துஅட்டைகள்: நீங்கள் ஏன் எல்லோரையும் மகிழ்விக்கும் வாழ்த்து அட்டைகளை பல்வேறு வண்ணக் கலை காகிதம் மற்றும் உங்களின் சிந்தனைகளைப் பயன்படுத்தி வடிவமைக்கக்கூடாது. நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு உங்களின் அன்பை வெளிப்படுத்த உங்களின் கைகளால் செய்த அழகிய தீபாவளி வாழ்த்து அட்டைகளைப் பரிசளிக்க முயற்சி செய்யலாம்.

2. தீபாவளி மிதக்கும் தீபங்கள்: இதைச் செய்ய உங்களுக்கு வண்ண நுரை காகிதம் மற்றும் சிறிய உலோக அகல் விளக்குகள் தேவைப்படும். பசை கொண்டு நுரை தாளில் ஒரு சிறிய உலோக அகல் விளக்கை ஒட்டி அதைச் சுற்றி ஒரு வட்டம் வரைய வேண்டும். பிறகு அதை வெட்டி, குந்தன் கற்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். இப்பொழுது உங்களின் மிதக்கும் விளக்கு தயார். இதைச் செய்வதும் மிகவும் எளிது.

Simple Paper Craft Ideas For Diwali

3. தீபாவளி பேப்பர் விளக்கு: உங்களூக்கு ஓரிகமி பற்றிய அறிவு கொஞ்சம் இருந்தால், உங்களால் அழகான மலர் வடிவங்கலைச் செய்ய முடியும். அதைச் செய்த பின்னர் அதன் நடுவே சிறிய அழகிய உலோக அகல் விளக்குகளைப் பொருத்துங்கள். குழந்தைகள் கூட வயதானவர்களின் வழிகாட்டுதலின் படி இதைச் செய்ய இயலும். குழந்தைகள் கத்திரிக்கோல் மற்றும் கத்திகள் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.

4. தீபாவளி திரைச் சீலைகள்: குழந்தைகள் இந்த செய்ய மிகவும் விரும்புவார்கள். நீங்கள் இணையத்தில் இருந்து இலவச வார்ப்புருக்களை பதிவிறக்கம் செய்து அதை பிரிண்ட் போட வேண்டும். பின்னர் அதை மணிகள், சிறிய அலங்கார ஜிகினா வட்டுக்கள் (sequins) மற்றும் பிற அலங்கார பொருட்கள் கொண்டு அலங்கரித்து, கதவில் தொங்க விட வேண்டும். இது உங்கள் வீட்டிற்கு வருபவர்களை வரவேற்கும். அதே சமயம் நீங்கள் உங்கள் பூஜை அறையின் நுழைவு வாயிலில் தோரணங்களைப் பயன்படுத்தலாம்.

5. தீபாவளி காலடித்தடங்கள்: பல குடும்பங்களில், தீபாவளி அன்று லட்சுமி பூஜை கொண்டாடப்படுகின்றது. எனவே லட்சுமியை வரவேற்க உங்களின் வீட்டில் சிறிய கால்தடங்களை வரையலாம்.

Simple Paper Craft Ideas For Diwali

6. தீபாவளி பேப்பர் வெடித் திரை: தீபாவளி என்றாலே பட்டாசு மற்றும் வெடிகள் என்றுதானே அர்த்தம். அதை வண்ணக காகிதத்தில் செய்தால் எப்படி இருக்கும்? அதற்கு ஒரு மெல்லிய அட்டையை சுருட்டிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அதை நீண்ட பகுதிகளாக வெட்டி எடுத்து, பட்டாசு வெடிக்கும் போது நீங்கள் காணும் வடிவமைப்புகளை அவற்றில் சித்தரிக்க வேண்டும். அதற்கு மேழும் அழகு சேர்க்க ஜிகினா பயன்படுத்தவும். இப்போது, அலுமினியம் ரோல்ஸ், பேப்பர் உலோகங்களை நீளவாக்கில் வெட்டி அந்த அட்டையில் ஒட்ட வேண்டும். இது உங்களின் வீட்டிற்கு மேழும். அழகு சேர்க்கும்.

English summary

Simple Paper Craft Ideas For Diwali

Simple Paper Craft Ideas For Diwali
Please Wait while comments are loading...
Subscribe Newsletter