பண்டிகை காலத்தில் உங்கள் வீட்டின் அழகை அதிகரிப்பதற்கான சில எளிய வழிகள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

இந்த பண்டிகை காலத்திற்கு என்னவெல்லாம் திட்டமிட்டுள்ளீர்கள்? ஏதேனும் பாரம்பரியம் மிக்க அலங்காரத்தை செய்யலாம் என எண்ணியுள்ளீர்களா? ஆம் எனில், நீங்கள் முதலில் படிக்க வேண்டிய சில சிறந்த வீட்டு அலங்கார டிப்ஸ்களைப் பற்றி நாங்கள் கூற போகிறோம்.

இந்த பொருட்களை கொண்டு வீட்டை அலங்கரிக்கும் போது சிறப்பான விளைவு கிட்டும். உங்கள் வீடு தனித்துவமாக காட்சியளிக்க இந்தியாவின் வளமை மற்றும் பல்வேறு பண்பாடு மற்றும் பாரம்பரிய கலைகளைக் கொண்டு அலங்கரியுங்கள்.

நவீன வீட்டு அலங்காரத்துடன் கிளாசிக் இந்திய டச் கிடைக்க சில சிறந்த வழிகள் விளக்கப்பட்டுள்ளது. இந்த பண்டிகை காலத்தில் உங்கள் வீட்டை விசேஷமான ஒரு இடமாக மாற்ற கீழ்கூறியுள்ள சில வீட்டு அலங்கார டிப்ஸ்களைப் பின்பற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பழமையான பொக்கிஷங்கள்

பழமையான பொக்கிஷங்கள்

ஒவ்வொரு இந்திய குடும்பத்திலும் குறைந்தது ஒரு பழமையான பொக்கிஷ பொருளாவது (ஆண்டிக்ஸ்) இருக்க வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். இந்த பழமையான நினைவுப்பொருட்கள் பல்வேறு வடிவங்கள், வண்ணங்கள் மற்றும் உலோகங்களில் கிடைக்கிறது. உங்கள் இருப்பிடம் கம்பீரமான தோற்றத்தை பெற வேண்டுமானால், இத்தகைய பொருட்களை வாங்கி உங்கள் வீட்டை அலங்கரித்திடுங்கள். சமகால கட்டுமானக் கலையுடன் பழங்கால பொருட்களை அலங்கரித்து வரலாற்றுக்குள் நுழைந்திடுங்கள்.

பாரம்பரிய வண்ணங்கள்

பாரம்பரிய வண்ணங்கள்

பாரம்பரிய வண்ணங்களை கொண்டு உங்கள் வீட்டிற்கு அழகை சேர்த்திடுங்கள். அடர்த்தியான மற்றும் அழகிய வண்ணங்கள் உங்கள் வீட்டை விசாலமாகவும் அழகாகவும் காட்டும். மேலும் உங்கள் வீட்டை பளிச்சென காட்டும். பலரின் கவனத்தையும் ஈர்க்கும். நியான் பச்சை, ஊதா மற்றும் சிகப்பு நிறங்களின் மீது கவனத்தை செலுத்தவும்.

திரைச்சீலைகள்

திரைச்சீலைகள்

திரைச்சீலைகள் என்றாலே அற்புதமான ஒன்றாகும். அவை உங்கள் வீட்டின் தோற்றத்திற்கு ஒரு அர்த்தத்தை அளிக்கும். உங்கள் வீட்டில் ஒரு இந்திய டச் இருக்க வேண்டுமென்றால், ஜார்ஜ்ஜெட் மற்றும் பட்டில் செய்யப்பட்ட அச்சிடப்பட்ட திரைச்சீலைகளைப் பயன்படுத்தவும்.

இந்திய கலை

இந்திய கலை

உங்கள் அலங்காரத்துடன் இந்தியாவை தொடர்பு படுத்த மற்றொரு அருமையான வழி, உங்களது சமகால வீட்டில் பாரம்பரியம் வாய்ந்த ஓவியங்களை வைப்பது. விண்டேஜ் ஓவியங்களை வைக்க வேண்டும் என விரும்பினால் உங்கள் முன்னோர் காலத்தில் இருந்த ஓவியங்களை கூட வைக்கலாம். இது கம்பீரமான தோற்றத்தை அளிக்கும்.

விளக்குகள் அனைத்தையும் கூறி விடும்

விளக்குகள் அனைத்தையும் கூறி விடும்

தொங்கும் விளக்குகள் மற்றும் விளக்குகள் மீது இந்திய கலைகளை பதித்தல் போன்றவைகள் உங்கள் வீட்டிற்கு அழகை சேர்க்க சிறந்த வழியாக அமையும். போதிய விளக்குகளைக் கொண்டு உங்கள் வீட்டிற்குள் வண்ணங்களை நிரப்புங்கள். பண்டிகை காலத்திற்கு இது உகந்ததாக இருக்கும்.

உட்கூரை

உட்கூரை

இன்றைய தேதியில் ஃபால்ஸ் சீலிங் என்பது புகழ் பெற்றதாக உள்ளது. பல்வேறு வகையான ஃபால்ஸ் சீலிங் வகையை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். அதில் உங்கள் வீட்டிற்கு எது சிறப்பாக இருக்கும் என்பதை நீங்கள் முடிவு செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Simple Ways To Add Glamour To Your Home This Festive Season

Add glamour to your home with the help of these simple tips. Here is how you add a little Indian touch to your humble abode.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter