Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
கண்களைக் கவரும் வித்தியாசமான சில பூஜை அறை டிசைன்கள்!!!
இந்திய வீடுகளில் சமையலறை, படுக்கை அறையைப் போன்று பூஜை அறையும் முக்கியமான ஒன்று. பூஜை அறை என்பது கடவுளை வழிபடுவதற்கான ஓர் புனிதமான இடமாகும். பூஜை அறை தான் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை வழங்குவதாக மக்கள் கருதுகின்றனர். அத்தகைய புனிதமான இடத்தை பலரும் அழகாக வைத்துக் கொள்ள முயல்வார்கள்.
அதற்காக பல்வேறு பூஜைப் பொருட்களால் அந்த அறையை அலங்கரிப்பார்கள். இங்கு பல டிசைனான பூஜை அறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் உங்கள் வீட்டின் அளவு மற்றும் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறான டிசைனைத் தேர்ந்தெடுத்து, உங்கள் வீட்டில் அழகான பூஜை அறையை உருவாக்குங்கள்.
சரி, இப்போது அந்த வித்தியாசமான டிசைன்களைக் கொண்ட பூஜை அறைகளைக் காண்போமா!!!

தற்கால பூஜை அறை டிசைன்
இந்த தற்கால பூஜை அறையின் டிசைன் பார்ப்பதற்கு அற்புதமான தோற்றத்தைக் கொடுக்கும். இந்த வகை டிசைனை ஹால் அல்லது வீட்டின் ஏதேனும் ஓர் அறையில் வைக்கலாம். இந்த டிசைனின் ஹைலைட், கண்களைக் கவரும் வகையில் டைல்ஸ் பதிக்கப்பட்டு மரத்தாலான பார்டர் மற்றும் படிகளைக் கொண்டிருப்பது தான்.
Image Courtesy: Hasta Architects/homify.in

கலைநயமிக்க பூஜை அறை
உங்களுக்கு சிற்பம், ஓவியம் போன்றவற்றில் விருப்பம் அதிகம் இருந்தால், இந்த வகையான பூஜை அறையைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த வகையில், வெள்ளை மற்றும் மஞ்சள் வண்ணம் கலந்திருப்பதோடு, சுவற்றில் அழகாக கிருஷ்ணரின் சித்திரம் வரையப்பட்டு, சுற்றி அழகாக காற்றோட்டம் உள்ளவாறான ஜன்னல் அமைக்கப்பட்டிருக்கும்.
Image Courtesy: The Orange Lane/ homify.in

படுக்கையின் மூலையில் பூஜை அறை
உங்கள் வீடு சிறியதாக இருந்து, உங்கள் படுக்கை அறையிலேயே சிறு பூஜை அறையை வைக்க நினைத்தால், இந்த வகையான பூஜை அறையைத் தேர்ந்தெடுக்கலாம். வாஸ்து சாஸ்திரத்தின் படி, படுக்கையறையில் பூஜை அறையை வைக்க நினைத்தால், தூங்கும் போது கால்கள் பூஜை அறையை நோக்கி இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
Image Courtesy: Instinct Designs/ homify.in

புனித மேடையுடனான பூஜை அறை
இந்த வகையான பூஜை அறை டைனிங் அறையிலோ அல்லது ஹாலிலோ வைப்பதற்கு சிறந்ததாக இருக்கும். மேலும் இந்த வகை பூஜை அறை பார்ப்பதற்கு நல்ல தோற்றத்தைத் தருவதோடு, கோயிலில் கடவுளைத் தொழுவது போன்ற உணர்வைத் தரும். மேலும் இது மரத்தாலான மேடையைக் கொண்டதால், பிரார்த்தனை செய்வதற்கு ஏற்ற புனிதமான இடமாக இருக்கும்.
Image Courtesy: Neeras Design Studio/ homify.in

நேர்த்தியான பூஜை அறை டிசைன்
இந்த வகை பூஜை அறை டிசைனானது வெள்ளை மார்பிள் மற்றும் மரத்தாலான சுவரைக் கொண்டிருக்கும். வீட்டில் வைக்கும் பூஜை அறையை எவ்வளவு டிசைனாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி, கடவுளை வைக்கும் திசையானது வடக்கு-கிழக்கு அல்லது கிழக்கு மற்றும் தெற்காக இருக்க வேண்டியது அவசியம். அதே சமயம் பூஜை அறையை குளியலறைக்கு அருகில் வைக்கவே கூடாது.
Image Courtesy: Hasta Architects/ homify.in

மரத்தாலான பூஜை அறை டிசைன்
இந்த வகை பூஜை அறையை வைப்பதற்கு, பூஜை அறையில் பெரிய ஜன்னல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால், இந்த மரத்தாலான பூஜை அறை நல்ல தோற்றத்தைக் கொடுக்கும்.
Image Courtesy: Hasta Architects/ homify.in

தெய்வீகமான பூஜை அறை டிசைன்
அழகான படிகளுடன், பின்னல்வகை திரையைக் கொண்ட இந்த வகையான பூஜை அறை டிசைன் ஒரு தெய்வீக உணர்வைத் தரும். அதுமட்டுமின்றி இது வித்தியாசமான தோற்றத்தையும் கொடுக்கும்.
Image Courtesy: Drashtikon Designer Consultant/ homify.in



Click it and Unblock the Notifications
