For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளிக்கு வீட்டை தீபத்தால் அலங்கரிக்க போறீங்களா? அப்ப இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க...

இந்த வருட தீபாவளிக்கு சற்று வித்தியாசமாகவும், அழகாகவும் இருக்கும் பலவண்ணங்களால் செய்யப்பட்ட தீபங்களைக் கொண்டு அலங்கரிக்கலாம். அதற்கேற்றாற் போல் பல்வேறு டிசைன்களைக் கொண்ட தீபங்கள் தற்போது கிடைக்கின்றன.

|

தீபாவளி என்றாலே மனதில் சந்தோஷமும், குதூகலமும் பொங்கும். அதிலும் தீபாவளி அன்று பட்டாசு மட்டும் மிகவும் பிரபலமானது அல்ல. தீபாவளி அன்று வீட்டை அழகாக தீபங்களால் அலங்கரிப்போம். அப்படி வீட்டை தீபத்தால் அலங்கரிக்கும் போது, ஒவ்வொரு வருடமும் ஒரே மாதிரியான தீபங்களை பயன்படுத்துவோம்.

ஆனால் இந்த வருட தீபாவளிக்கு சற்று வித்தியாசமாகவும், அழகாகவும் இருக்கும் பலவண்ணங்களால் செய்யப்பட்ட தீபங்களைக் கொண்டு அலங்கரிக்கலாம். அதற்கேற்றாற் போல் பல்வேறு டிசைன்களைக் கொண்ட தீபங்கள் தற்போது கடைகளில் கிடைக்கின்றன.

இங்கு அந்த தீபங்களின் சில டிசைன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்த்து, உங்களுக்கு எந்த தீபத்தின் டிசைன் பிடித்துள்ளதோ, அந்த தீபத்தைக் கொண்டு வீட்டை அலங்கரித்து, வரும் தீபாவளியை சந்தோஷமாக கொண்டாடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பச்சை நிற தீபம்

பச்சை நிற தீபம்

இந்த மாதிரியான பச்சை நிற பெயிண்ட் அடிக்கப்பட்ட தீபம் மிகவும் அழகாக இருக்கும். அதுமட்டுமின்றி, அந்த தீபத்தைச் சுற்றி மஞ்சள் மற்றும் பிங்க் நிறத்தால் போடப்பட்ட டிசைன், இந்த தீபத்தின் அழகை அதிகரிக்கிறது.

கணபதி தீபம்

கணபதி தீபம்

இந்த தீபத்தின் ஸ்பெஷல் என்னவென்றால், இந்த தீபத்தின் மேல் முதன்மைக் கடவுளாக கணபதியின் முகம் இருக்கும்.

ஐந்து முக தீபம்

ஐந்து முக தீபம்

இந்த ஐந்து முக தீபத்தைக் கொண்டு வீட்டை அலங்கரித்தால், அது மிகவும் சூப்பராக இருக்கும். குறிப்பாக இது பெரிதாக இருப்பதால், இதனை வீட்டின் நடுவில் வைத்தால், இன்னும் சூப்பராக இருக்கும்.

ரங்கோலி தீபம்

ரங்கோலி தீபம்

இந்த ரங்கோலி தீபமான ரங்கோலி கோலத்தை மையமாகக் கொண்டு டிசைன் செய்யப்பட்டது. இது பிடித்தால், இதனைப் பயன்படுத்துங்கள்.

பானை வடிவ தீபம்

பானை வடிவ தீபம்

பானை வடிவ தீபங்கள் பல நிறங்களில் கிடைக்கும். இந்த பானை வடிவ தீபம் கொண்டு வீட்டை அழகுப்படுத்தும் போது, வீடே மிகுந்த அழகுடன் காட்சியளிக்கும்.

ஸ்வஸ்திகா தீபம்

ஸ்வஸ்திகா தீபம்

இந்த தீபத்தின் சிறப்பு இது ஸ்வஸ்திகா போன்ற வடிவில் இருப்பது தான். இந்த தீபம் உண்மையிலேயே மிகவும் அழகாக இருக்கும்.

பலவண்ண தீபம்

பலவண்ண தீபம்

இந்த தீபமானது சாதாரண தீபத்தைப் போன்று இருக்கும். ஆனால் பல வண்ணங்களால் பெயிண்ட் செய்யப்பட்டிருக்கும். இந்த மாதிரியான தீபத்தை ரங்கோலியின் மீது வைத்து அலங்கரிக்கலாம்.

வட்ட வடிவ தீபம்

வட்ட வடிவ தீபம்

வட்ட வடிவில் கூட தீபம் உள்ளது. வேண்டுமெனில், அதைக்கூட முயற்சிக்கலாம்.

சாதாரண தீபம்

சாதாரண தீபம்

ஒருவேளை எந்த ஒரு நிறமும் தேவையில்லை, ப்ரௌன் நிற தீபம் தான் வேண்டுமானால், இந்த தீபத்தையே பயன்படுத்துங்கள்.

லேட்டஸ்ட் தீபங்களின் டிசைன்கள்!!!

லேட்டஸ்ட் தீபங்களின் டிசைன்கள்!!!

இன்னும் வேறு மாடல்களில் தீபம் வேண்டுமானால், இங்கு கிளிக் செய்யுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Diwali 2020: Colourful Diyas For Diwali Decoration

If you have plain diyas at home, you can either decorate and colour them for place them at home during Diwali. Otherwise, just buy some creatively designed diyas from the market. Here are some of the decorative and colourful diyas that you can use for Diwali decorations. Take a look.
Desktop Bottom Promotion