For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிளாஸ்டிக் பாட்டில்களால் வீட்டை அலங்கரிக்கலாமா!!!

By Maha
|

Plastic Reuse
இன்றைய காலக்கட்டத்தில் குளிர்பானங்களை அதிகம் அருந்துவது வழக்கமாகிவிட்டது. அப்படி குளிர்பானங்களை பிளாஸ்டிக் பாட்டிலில் வாங்கும் போது அதை குடித்துவிட்டு, காலியானதும் தூக்கிப்போடாமல், அதை கண்ணுக்கு கவர்ச்சியாக, கலை உணர்ச்சியுடன், சில நன்மைகள் தரும் உபயோகப் பொருட்களாக மாற்றலாம். அதிலம் இத்தகைய கிராப்ட் வேலைகளை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால், அவர்களும் விரும்பி செய்வதோடு, அந்த பொருட்களுக்கு அதிக மதிப்புக் கொடுத்து பராமரித்து வருவார்கள். இதனால் பெற்றோர்களுக்கு வீட்டை பராமரிக்கும் பணியும் குறையும். ஆகவே இத்தகைய பிளாஸ்டிக் பாட்டிலில் எப்படி கிராப்ட் வேலைகளை செய்வது என்று சில டிப்ஸ் இருக்கிறது, அதைப் படித்து தெரிந்து கொண்டு வீட்டை அழகுப்படுத்துங்கள்.

1. பிளாஸ்டிக் குடுவை : பெப்சி அல்லது ஸ்பிரைட் பாட்டிலை எடுத்துக் கொண்டு, அடிப்புறத்தில் இருந்து 8 செ.மீ அளவில் அளந்து வெட்டிக் கொள்ளவும். பின் அந்த முனைகளை சுற்றி, W வடிவத்தில் வருமாறு கத்தரிக்கோலால் 1/2 இன்ச் அளவிற்கு வெட்டிக் கொள்ளவும். பின் 1 செ.மீ அளவை, மேலிருந்து அளந்து அதனை வெளிப்புறமாக மடக்கிவிடவும். பின் அதில் தண்ணீர் ஊற்றி, பூக்களை வாங்கி அதில் வைத்து, டைனிங் டேபிள், டிவி அல்லது ஷோகேஸ் போன்றவற்றில் வைத்தால் அழகாய் இருக்கும்.

2. பாட்டில் காயின் பர்ஸ் : தேவையான பொருட்கள் : இரண்டு பிளாஸ்டிக் பாட்டில்கள், ஜிப், ஊசி, நூல். முதலில் பாட்டில்களை எடுத்துக் கொண்டு, அதனை அடிப்பகுதியில் இருந்து 3 செ.மீ நீளத்திற்கு அளந்து வெட்டிக் கொள்ளவும். பின் ஊசியை நூலில் கோர்த்து வைத்துக் கொண்டு, அந்த ஜிப்பை இரண்டு பாட்டில்களின் முனைகளிலும் வைத்து தைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அதில் எந்த ஒரு சிறு பொருளையும் போட்டு வைத்துக் கொள்ளலாம்.

3. பூத்தொட்டி : ஒரு பாட்டிலை எடுத்துக் கொண்டு, அதன் பாதியை வெட்டி, அதில் மண்ணை நிரப்பி செடிகளை வைத்து தண்ணீர் ஊற்றி வளர்க்கலாம். இல்லையென்றால் பாட்டிலின் நடுபகுதியில் செவ்வக வடிவத்தில் வெட்டி, அதில் மண்ணை போட்டு செடிகளை வைத்து, சுவற்றில் இரண்டு ஆணியை அடித்து, பாட்டிலின் இரு முனைகளிலும் கயிற்றைக் கட்டி, ஆணியில் தொங்க விடலாம். இவ்வாறு செய்தால் வீடு பார்க்க அழகாக இருப்பதோடு, பச்சை பசேலென்று இருக்கும்.

4. புல்வெளித் தெளிப்பான் : தோட்டத்தில் இருக்கும் புல்வெளிக்கு நீரைத் தெளிக்கும் இயந்திரம் போலவும் செய்யலாம். தேவையான பொருட்கள் : ஒரு பிளாஸ்டிக் பாட்டில், 10 பேனா கவர் மட்டும் போதும். முதலில் பேனாவை மூன்று இன்ச் அளவிற்கு வெட்டிக் கொள்ளவும். பின் பாட்டிலில் ஆங்காங்கு பேனாவை நுழைக்கும் அளவு ஓட்டையை போட வேண்டும். பிறகு அந்த பேனாவை பசையில் தொட்டு அந்த ஓட்டைகளில் நுழைத்து நன்கு காய வைக்க வேண்டும். பிறகு அதனை தோட்டத்தில் இருக்கும் பைப்பில் மாட்டினால் தண்ணீரானது அழகாக செடிகளுக்குத் தெளிக்கும்.

இவ்வாறெல்லாம் செய்தால், வீடு அழகாக இருப்பதோடு, சுற்றுசூழலையும் அழகாக, பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும்.

English summary

ways to reuse plastic bottles | பிளாஸ்டிக் பாட்டில்களால் வீட்டை அலங்கரிக்கலாமா!!!

There are many cool and interesting ways you can reuse or recycle plastic these plastic bottles and do your bit for the environment. Every time, you reuse a plastic drinking bottle, you are helping the Mother Nature. Once you have consumed the beverage from the bottle, you can use it to create a number of crafty things like a flower vase or a garden sprinkler with minimum efforts.
Story first published: Friday, July 20, 2012, 16:43 [IST]
Desktop Bottom Promotion