For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நல்லா சாப்பிட டைனிங் டேபிள் அழகா இருக்கணும்!

By Mayura Akilan
|

Home Decor
வீடென்றால் புறம் மட்டும் அழகாக இருந்தால் போதாது, அகமும் அழகாக இருக்க வேண்டும். . அப்போது தான் ஒரு வீடு முழுமையாகிறது. சமையலறையில் சிரமப் பட்டு சமைக்கும் உணவுகளை சந்தோசமாய் சாப்பிடும் இடம் டைனிங் டேபிள். அந்த இடத்தை அழகாய் அலங்கரிப்பது உணவு குறித்த ஆர்வத்தை அதிகரிக்கும். சாதாரண உணவு என்றாலும் அதனை மகிழ்ச்சியோடு ஆர்வமாய் உண்ண முடியும். நம்மைத் தவிர நமது சொந்தங்கள், நண்பர்களை விருத்துக்கு அழைக்கும் போது அவர்களை கவரும் வகையில் சாப்பிடும் மேஜையை அலங்கரிக்கலாம். அதுகுறித்த சின்ன சின்ன டிப்ஸ்.

நாகரீகமான தோற்றம்

உணவருந்தும் அறைக்கு நமது பட்ஜெட்டிற்கு ஏற்ப மரத்தாலான தரை அமைப்போ, மார்பில்களால் ஆன தரை அமைப்பாகவோ இருப்பது ஏற்றது. உணவருந்தும் மேஜை, நாற்காலிகள் அடர் நிறத்தில் இருப்பது நல்லது. கோல்ட் அல்லது க்ரீம் கலர் ஒரு நாகரீக தோற்றத்தைத் தரும். மிக்ஸ் மேக்ஸ் ஸ்டைலில் விரிப்புகளை பயன்படுத்தி அழகு படுத்துவது கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும்.

டேபிளில் பழக்கூடைகள்

டைனிங் அறையில் டேபிள் நடுவே ஒரு சின்ன பூக்கள் வைத்த கண்ணாடி பாத்திரம் வைத்து அதில் அழகாய் பூக்களை அடுக்கிவைக்கலாம். பழங்களை பாத்திரத்தின் நடுவில் வைத்து அடுக்கிவைத்தால் குழந்தைகள் ஆர்வத்துடன் எடுத்து சாப்பிடுவர். அதே போல் டேபிள் மேட் போட்டு அதன் மேல் கண்ணாடி போடலாம். டேபிள் க்ளாத் அழுக்காகாமல் இருக்கும், சுத்தம் செய்வதும் சுலபம். சாப்பிடாத நேரத்தில் டேபில் மேல் எதுவும் வைக்கவேண்டாம். பூக்கள் பாத்திரம், தண்ணீர் பாத்திரம் இருக்கலாம்

விருந்தினர்களுக்கு வரவேற்பு

விருந்தினர்களை வரவேற்கும் விதமாக உணவருந்தும் அறையில் ப்ளோர் மெட் போட்டு வைக்கலாம். கைவேலைப்பாடுகளால் ஆன அலங்காரப் பொருட்களை சுவற்றில் மாட்டிவைப்பது ரிச் லுக் தரும். கருப்பு, வெள்ளை புகைப்படங்களை மாட்டிவைக்கலாம். சுவர்களில் அழகான ஓவியங்களை மாட்டி வைப்பது கண்களை கவர்வதோடு சாப்பிடும் இடத்தின் அழகை அதிகரிக்கும்.

சாப்பிடும் அறை பெரியதாக இருக்கும் பட்சத்தில் பார்மல் லுக் ஏற்படுத்தும் வகையில் ஷோபா, குட்டித் தலையணைகளைக் கொண்டு வசதியாக அழகு படுத்தலாம். கவர்ச்சியாகவும், ஸ்டைலாகவும் இருக்கும்.

அழகான துணி மடிப்புகள்

டேபிள் மீது விரிக்கப்பட்ட கலர் கலரான விரிப்புகள் பழையதாகிவிட்டால் தூக்கிப் போட வேண்டாம். அதனை சதுர வடிவிலோ அல்லது வட்ட வடிவிலோ துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளலாம். சாப்பிடும்போது தட்டிற்கு கீழேயோ, சாப்பாடு பாத்திரங்களை வைப்பதற்கோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த கட்டிங் துணிகளை எண்ணெய்ப் பாத்திரங்கள், சூடான பா‌த்‌திர‌ங்க‌ளு‌க்கு‌க் கீழேயும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலு‌ம் கா‌ய்க‌றி நறு‌க்கு‌ம் போது இ‌ந்த‌த் து‌ண்டுகளை‌ ‌‌‌கீழே பய‌ன்படு‌த்‌தினா‌ல் டேபிள் ‌கீற‌ல் ‌விழாம‌ல் இருக்கும்.

English summary

How To Decorate your Dining Room | நல்லா சாப்பிட டைனிங் டேபிள் அழகா இருக்கணும்!

If entertaining guests and throwing parties is on your mind, formal dining room has to be your call. The advantage of a formal dining room is that it makes even the simplest food look special and welcoming, and you can also bring out your china wares out and decorate them at the dining table, rather than taking them out every time you have invited guests over for dinner.
Story first published: Thursday, March 1, 2012, 14:44 [IST]
Desktop Bottom Promotion