Latest Updates
-
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
விநாயகர் சதுர்த்திக்கு பூஜை அறையை டக்கரா அலங்கரிக்கலாமா!!!

விநாயகர் சதுர்த்தியன்று பூஜை அறையை எப்படி அலங்கரிக்கலாம்?
* வீட்டில் உள்ள பூஜை அறையை நன்கு சுத்தமாக கழுவி விட்டு, அங்கு ஒரு மரப்பலகையை கழுவி வைக்க வேண்டும்.
* பின் அந்த பலகையின் மீது பச்சரிசியால் மாக்கோலம் போட வேண்டும். பின்னர் அதன் மேல் தலை வாழை இலையை வாங்கி வந்து, அந்த பலகையின் மீது விரிக்க வேண்டும்.
* அடுத்து மூன்று கையளவு பச்சரிசியை, அந்த இலையின் மீது பரப்ப வேண்டும். பிறகு அந்த அரிசியின் மீது வலது கையின் மோதிர விரலால் பிள்ளையார் சுழி வரைய வேண்டும்.
* பின் கடைக்குச் சென்று வாங்கி வந்த, அழகான மண்ணால் செய்யப்பட்ட விநாயகரை, அந்த அரிசியின் மீது வைக்க வேண்டும். பின்னர் பூநூலை மஞ்சளில் தடவி, விநாயகருக்கு அணிவிக்க வேண்டும்.
* அடுத்து, விநாயகருக்கு எருக்கம்பூ மற்றும் அருகம்புல் மாலையை அணிவித்து, வேண்டுமென்றால் அழகான குடையை வாங்கி அவருக்கு நிழல் தரும் வகையில் நிறுத்தலாம்.
* பின் வீட்டில் இருக்கும் ஏதேனும் தங்கம், வெள்ளி போன்றவற்றை விநாயகருக்கு முன் வைத்து, அவரது வயிற்றில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து அலங்கரிக்க வேண்டும்.
* பின்னர், வீட்டில் சுவையாக விநாயகருக்கு படைக்க செய்து வைத்துள்ள கொழுக்கட்டை, லட்டு, போளி, எள்ளுருண்டை மற்றும் பல இனிப்புகளை அவர் முன் வைத்து, தேங்காய் வாழைப்பழம் வைத்து, விளக்கேற்றி கும்பிட வேண்டும்.
மேற்கூறியவாறு பூஜை அறையை அலங்கரித்து, விநாயகரை வழிபட்டு, அனைத்து நன்மைகளையும் பெற்று, விநாயர் சதுர்த்தியை கொண்டாடி மகிழுங்கள்.



Click it and Unblock the Notifications
