Latest Updates
-
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பாரம்பரிய நெய் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
டாய்லெட் பேப்பரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க -
இந்த பிரச்சனை இருந்தா, பூண்டு அதிகமா சாப்பிடாதீங்க.. - எச்சரிக்கும் டாக்டர்! -
நாகர்கோயில் வாழைக்காய் துவட்டல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
September 2026 Career Horoscope: செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இந்தியாவில் பின்னோக்கி பாயும் ஒரேயொரு நதி எது தெரியுமா? இது பின்னோக்கி பாய காரணம் என்ன தெரியுமா? -
லன்ச்பாக்ஸ்-க்கு ஒருடைம் இப்படி கீரை சாதம் செஞ்சு குடுங்க.. ருசியாவும் இருக்கும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 01 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு நல்ல நேரம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்..
வரவேற்பறைக்கு கம்பீரம் தரும் நாற்காலிகள்!

நமக்கானது நாற்காலி
நம் வீட்டிற்கு வாங்கும் நாற்காலி மேஜைகளை நமக்கானதாக வாங்கவேண்டும். நமது உடல் அமைப்பு, பழக்க வழக்கம் போன்றவற்றை கவனத்தில் கொண்டு வாங்கவேண்டும். பக்கத்து வீட்டில் வாங்கியிருக்கின்றனரே என்பதற்காக அதே மாதிரி நாமும் வாங்கவேண்டும் என்று எண்ணி வாங்கத் தேவையில்லை.
சிறிய குழந்தைகள், வயதானவர்கள் உள்ள வீடுகளில் அவர்களுக்கு ஏற்ற இட வசதியை ஏற்படுத்தக்கூடிய நாற்காலிகளை வாங்கவேண்டும். அறையை அடைத்துக்கொள்ளும் பர்னிச்சர்களை வாங்குவதை விட மடக்கி போட வசதியான நாற்காலிகளை வாங்குவது நல்லது. ஏனெனில் இருவருக்குமே இடைஞ்சல் ஏற்படுத்தாத வகையில் நாற்காலி மேஜைகளை போடுவது அவசியம்.
வரவேற்பரையின் கம்பீரம்
நாற்காலிகளை வாங்கும் போது பல விசயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். சிறிய வரவேற்பரையாக இருப்பின் மடித்து வைக்கும் நாற்காலிகளை வாங்கலாம். தேவையற்ற சமயத்தில் மடித்து வைக்க வசதியாக இருக்கும்.
சோபா வாங்குவதனால் அதை பராமரிப்பது கொஞ்சம் சிரமமானது எனவே அதற்கான வசதி உள்ளதா என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
பெரிய தாராளமான இடம் என்றால் மரத்தாலான வேலைப்பாடுகள் கொண்ட நாற்காலிகளை போடலாம். இதனால் வரவேற்பரைக்கு கூடுதல் கம்பீரம் கிடைக்கும்.
ஆரோக்கியம் தொடர்புடையது
நீண்ட நேரம் அமர்வதாக இருந்தால் எண்ணெய் கரை உள்ளிட்டவைகள் நாற்காலி மேஜைகளை பாதிக்காத வகையில் விரிப்புகளை கொண்டு நாற்காலி, சோபாக்களை அலங்கரிக்கலாம். மாதம் இருமுறை அவற்றை கழற்றை துவைத்து பின் மாட்டலாம். இது ஆரோக்கியத்தோடும் தொடர்புடையது.
முக்கியமாக நம்மிடம் பணம் இருக்கிறது என்பதற்காகவும் பகட்டை காண்பிக்க வேண்டும் என்பதற்காகவும் பொருட்களை வாங்காமல் நமக்கு தேவையான, அத்தியாவசியமான பொருட்களை வாங்கினாலே வீடும் அழகாகும். வீட்டிற்கு வருபவர்களுக்கும் வசதியாக இருக்கும்.



Click it and Unblock the Notifications