Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
ஆல்கஹால் பாட்டிலை வெச்சு சூப்பரா வீட்டை அலங்கரிக்கலாம்!!!
ஆல்கஹால் என்றாலே அது நமது மனதை சந்தோஷப்படுத்துவதற்காக மட்டும் தான் என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் அவ்வாறு வாங்கும் ஆல்கஹாலில் விலை அதிகமான ஒயின் மற்றும் சம்பெயின் பாட்டிலை ஷோகேஸில் வைக்கும் அளவில், அது மிகவும் அழகாக இருக்கும். ஆகவே அதனை தூக்கிப் போடாமல், சிலர் பாட்டிலை ஃபேப்ரிக் கவரால் சுற்றியோ அல்லது சாதாரணமாகவோ தான் ஷோகேஸில் வைப்பார்கள்.
ஆனால் அத்தகைய காலியான பாட்டிலை பல வழிகளில் அலங்கரித்து, வீட்டில் பல இடங்களிலும் வைக்கலாம். இவை அனைத்திற்கும் கற்பனைத் திறன் தான் முக்கியமானது. மேலும் இந்த கற்பனைத் திறத்தில் ஓரளவு ஃபேஷனும் இருந்தால், சூப்பராக இருக்கும்.
அதிலும் அவ்வாறு அந்த பாட்டிலை அலங்கரிக்கும் போது எந்த ஒரு ஆடம்பர செலவும் ஆகாமல், ஈஸியான முறையில் அலங்கரித்து, வீட்டில் உள்ள படுக்கை அறை, ஹால் அல்லது படிக்கும் அறையில் வைத்தால், வீடே சற்று வித்தியாசமான பார்வையில் தோன்றும். இப்போது அவ்வாறு இருக்கும் காலியான பாட்டிலை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம் என்பதைப் பார்ப்போமா!!!

பரிசு
ஒயின் பாட்டிலை அன்பளிப்பாக அளிப்பது என்பது புதிதானது அல்ல. ஆனால் அதே பாட்டிலை நன்கு அழகாக கண்ணை பறிக்கும் வகையில் அலங்கரித்து கொடுப்பது தான் வித்தியாசமானது.

மையப்பொருள்
ஒயின் பாட்டிலை வைத்து சூப்பராக அலங்கரித்து, டேபிளின் மையத்தில் அதனை வைக்கலாம். அதிலும் அதனை கிளிட்டர்ஸ், கிரீன் சார்ட் பேப்பர் மற்றும் சிறு கற்களாலும் அலங்கரிக்கலாம்.

பாட்டில் விளக்குகள்
ஒயின் பாட்டிலின் நடுவில் விளக்குகளை வைத்து எரிய வைத்தால், சற்று வித்தியாசமான நிறத்தில் பிரகாசிக்கும். அதற்கு பாட்டிலின் அடிப்பகுதியை வெட்டி விட்டு, மின்சாரை விளக்குகளை நடுவில் தொங்க விடலாம். இல்லையெனில் மெழுகுவர்த்தியை எரிய வைத்து, அதை பாட்டிலால் மூடி வைக்கலாம்.

பூ ஜாடி
ஒயின் பாட்டிலை வைத்து அலங்கரிப்பதில் பூ ஜாடி ஒரு சிறந்த ஐடியா. இதற்கு பாட்டிலில் பெயிண்ட் செய்து, அதனுள் ஏதேனும் ஒரு விருப்பமான பூக்களை வைக்கலாம்.

பூ ஸ்டாண்ட்
காலியான பாட்டிலில் காய்ந்த பூக்களை வைத்து அலங்கரிப்பது என்பது ஒரு சிறந்த முறை. அதற்கு தெர்மா கோலில் உள்ள சிறு உருண்டைகளில் கலரை அடித்து, அதனை பாட்டிலில் போட்டு, வேண்டுமென்றால் பூக்களின் காய்ந்த இதழ்களையும் சேர்த்து நிரப்பினால், அது ஒரு சிறந்த அழகைத் தரும்.



Click it and Unblock the Notifications
