வித்தியாசமான கிறிஸ்துமஸ் மரத்தை வெக்க ஆசையா? அப்ப இத பாருங்க...

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொரு வருடமும் ஒரே மாதிரியான கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து போர் அடித்திருக்கும். அதிலும் அந்த அலங்காரம் எந்த மாற்றமும் இல்லாமல் ஒவ்வொரு வருடமும் ஒரே மாதிரி இருக்கும். அதிலும் சிலர் கிறிஸ்துமஸ் மரத்தை சிம்பிளாகவும், பார்ப்பதற்கு மிகுந்த அழகாகவும் இருக்குமாறு வைக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். இத்தகையவர்களுக்கு ஒரு சூப்பர் ஐடியா இருக்கிறது. அது தான் ஏதாவது ஒரு தீம்மை தேர்ந்தெடுத்து, அதுவும் கிறிஸ்துமஸ் அன்று பயன்படுத்தும் பொருட்களை வைத்தே, கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்கலாம்.

அதென்ன பொருட்கள் என்று கேட்கிறீர்களா? அது தான், வண்ணமயமான பந்துகள், நட்சத்திரம், சிறிய பல்புகள், சிவப்பு நிற பொருட்கள் போன்றவை. பொதுவாக இத்தகைய பொருட்கள் அனைத்தையும் வைத்து தான் மரத்தை அலங்கரிப்போம். ஆனால் சற்று வித்தியாசமாக, இவற்றில் ஏதேனும் ஒரு பொருளை மட்டும் மையமாக கொண்டு, அவற்றை அதிகமாக மரத்தில் அலங்கரிக்கப் பயன்படுத்தலாம்.

சிலர் அவ்வாறு அலங்கரித்தால் என்ன நன்றாகவா இருக்கும்? என்று கேட்கலாம். எனவே தான் அத்தகைய தீம்களை கொண்டு அலங்கரிப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்களை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம். அது எப்படி இருக்கிறதென்று பார்த்து, அவற்றை பயன்படுத்தி அலங்கரித்து மகிழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பனி தீம் கிறிஸ்துமஸ் மரம்

பனி தீம் கிறிஸ்துமஸ் மரம்

கிறிஸ்துமஸ் மரத்தின் மீது உண்மையான பனி அல்லது காட்டனை வைத்து அலங்கரித்தால், அது பார்ப்பதற்கு பனிப்பிரதேசத்தில் கிறிஸ்துமஸ் மரத்தை வைத்தது போன்று அழகாக காணப்படும்.

பந்து தீம் கிறிஸ்துமஸ் மரம்

பந்து தீம் கிறிஸ்துமஸ் மரம்

கிறிஸ்துமஸின் போது வீட்டில் வைக்கப்படும் கிறிஸ்துமஸ் மரத்தை வெறுமையான சிவப்பு மற்றும் கோல்டன் நிற மின்னும் பந்துகளால் அலங்கரித்தால், அதன் தோற்றமே வித்தியாசம் தான். வேண்டுமெனில் விருப்பமான நிறங்களில் உள்ள பந்துகளை வாங்கி அலங்கரிக்கலாம்.

நட்சத்திர தீம்

நட்சத்திர தீம்

இந்த மரத்தில் ஜொலிக்கும் வகையான நட்சத்திரங்களில், பல்புகளை வைத்து அலங்கரிப்பட்டுள்ளது. இதைப் பார்க்கும் போது 'டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்...' பாட்டு தான் ஞாபகத்திற்கு வருகிறது.

ஆப்பிள் தீம்

ஆப்பிள் தீம்

இந்த கிறிஸ்துமஸ் மரத்தில் சிவப்பு நிறத்தில் உள்ள உண்மையான ஆப்பிள் பழங்களை வைத்து அலங்கரிப்பட்டுள்ளது. வேண்டுமெனில் அதே சிவப்பு நிறத்தில் இருக்கும் ஸ்ட்ராபெர்ரி, செர்ரி போன்ற பழங்களை வைத்தும் அலங்கரிக்கலாம்.

பல்பு இலைகள்

பல்பு இலைகள்

இந்த கிறிஸ்துமஸ் மரத்தில் பச்சை இலைகளே வெளியே தெரியாது. ஏனெனில் அந்த இலைகளின் மேல் சின்ன சின்ன பல்புகளை வைத்து அலங்கரிப்பட்டுள்ளது. இதே போன்று வீட்டையும் பல்புகளால் அலங்கரிக்கலாம். இதனால் மரத்தோடு, வீடே அழகாக ஜொலிக்கும்.

எலக்ட்ரானிக் மரம்

எலக்ட்ரானிக் மரம்

இது ஜெர்மனியில் உள்ள ஒரு பெரிய எலக்ட்ரானிக் கிறிஸ்துமஸ் மரம். இத்தகைய மரத்தை வேண்டுமானால், வீட்டில் வித்தியாசமான நிறங்களில் உள்ள டியூப் லைட்டுகளை பயன்படுத்தி செய்யலாம்.

மெழுகுவர்த்தி மரம்

மெழுகுவர்த்தி மரம்

கிறிஸ்துமஸ் அன்று மெழுகுவர்த்தியும் ஒரு ஸ்பெஷல் தான். அத்தகைய மெழுகுவர்த்தியில் சிறியதாக இருக்கும் மெழுகுவர்த்தியை கிறிஸ்துமஸ் மரத்தின் இலைகளில் ஆங்காங்கு வைத்து அலங்கரிக்கலாம்.

ரயில் பொம்மை கிறிஸ்துமஸ் மரம்

ரயில் பொம்மை கிறிஸ்துமஸ் மரம்

இந்த மரத்தின் ஸ்பெஷலே, மரத்தை அலங்கரித்து, மரத்திற்கு அடியில் பொம்மை ரயில் சுற்றி வரும் படியாக வைப்பது தான்.

பூக்கும் கிறிஸ்துமஸ் மரம்

பூக்கும் கிறிஸ்துமஸ் மரம்

இந்த கிறிஸ்துமஸ் மரத்தின் ஒவ்வொரு இலைகளிலும், அழகான ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறப் பூக்களை வைத்து அலங்கரித்தால், கிறிஸ்துமஸ் மரம் பூத்துக் குலுங்குவது போல் இருக்கும்.

சரிகை கிறிஸ்துமஸ் மரம்

சரிகை கிறிஸ்துமஸ் மரம்

சாதாரணமாக மரத்தை அலங்கரித்து, பின்தங்க நிற சரிகை பேப்பரைக் கொண்டு, மரத்தை சுற்றிவிடலாம். இதற்கு வேறு நிறத்தில், சுவாரசியமாக இருக்கும் சரிகையை கூட பயன்படுத்தலாம்.

வெள்ளை நிற கிறிஸ்துமஸ் மரம்

வெள்ளை நிற கிறிஸ்துமஸ் மரம்

இதற்கு வெள்ளை நிறத்தில் இருக்கும் சிறு பல்புகளைக் கொண்டு அலங்கரிக்கலாம். இதனால் மரமானது பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக, மனதை மென்மையாக்கும் வகையில் இருக்கும்.

ரோஸ் தீம்

ரோஸ் தீம்

இந்த மரமானது சற்று வித்தியாசமான சிறு சிறு சிவப்பு நிற ரோஜாப் பூக்களை ஆங்காங்கு வைத்து அலங்கரிப்பது மிகுந்த அழகைத் தருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Christmas Tree Pics To Borrow Ideas | வித்தியாசமான கிறிஸ்துமஸ் மரத்தை வெக்க ஆசையா? அப்ப இத பாருங்க...

The best idea for your Christmas tree decoration is to have a central theme. If you want to get a clear picture, then take a look at these unique pictures of decorated Christmas trees.
Story first published: Monday, December 24, 2012, 13:48 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter