For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெட்ரூமை ஜில்லுனு டெகரேட் பண்ணுங்க!

By Mayura Akilan
|

Bed Room
கோடையில் வீட்டிற்குள் இருக்கவே முடியாது. வியர்வை, கசகசப்பு என வாட்டி எடுக்கும். பகல் முழுவதும் அடித்த வெயில் இரவில் அப்படியே இறங்கும். இதனால் உறங்கவே முடியாமல் அவஸ்தையை ஏற்படுத்திவிடும். படுக்கை அறையை குளுமையாய் அலங்கரித்தால் கோடையிலும் ஆனந்தமாய் உறங்கலாம் என்கின்றனர் உள் அலங்கார நிபுணர்கள்.

பூக்களின் டிசைன்கள்

படுக்கை அறையில் பூக்கள் டிசைன் பிரிண்ட் செய்யப்பட்ட பெட்சீட் உபயோகிக்கலாம். அதேபோல் சுவர்களில் மென்மையான நிறங்களை பூசலாம். இதனால் கோடையில் இதமான சூழ்நிலை ஏற்படும்.

பருத்தி திரை சீலைகள்

கோடை காலத்தில் மாலை நேரத்தில் இதமான தென்றல் காற்று வீசும். பருத்தி துணிகளால் ஆன வர்ணமயமான திரைச்சீலைகளை உபயோகிக்கலாம். காலையில் கொஞ்சம் சூரிய ஒளி படுக்கை அறையில் விழவேண்டும். அப்பொழுதுதான் பாக்டீரியாக்கள் அழியும். ஆனால் மாலையில் குளுமை தரும் வகையில் வெப்பத்தை வடிகட்டும் திரைச்சீலைகளை போடவேண்டும். ஆரஞ்சு, மஞ்சள், எலுமிச்சை நிறங்கள் வெப்பத்தை அதிக வெப்பத்தை வெளியேற்றிவிடும்.

வெளிர் நிற தலையணை உறைகள், படுக்கை உறைகளை உபயோகிக்க வேண்டும். மாலை நேரத்தில் மெல்லிய துணிகளை நனைத்து பெட்ரூம் ஜன்னலில் விரித்து விடலாம். இதனால் குளிர்ந்த காற்று அறைக்குள் ஊடுருவும். படுக்கைக்கு முன்னதாக காட்டன் மேட் போட்டு வைக்கலாம். இதனால் வெப்பத்தை அது உறிஞ்சி கொள்ளும். தரைகளில் காலி இடங்களில் காட்டன் கார்பெட் உபயோகிப்பதும் நல்லது.

English summary

Bedroom Decor Ideas For Summer! | பெட்ரூமை ஜில்லுனு டெகரேட் பண்ணுங்க!

During summer, an ideal house should have bright colours which are light and colourful. It is time to refresh the bedroom decor for the summer season. So, take out dark and thick curtains, bedsheets and blankets from the bedroom and replace with light fabrics.
Story first published: Monday, May 7, 2012, 13:14 [IST]
Desktop Bottom Promotion