Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த ஒரு ரூபாய் பொருளை வீட்டுல எரிங்க... அப்புறம் நடக்குற அதிசயங்களைப் பாருங்க..
Camphor Remedies In Tamil: இந்து மதத்தில் தெய்வ வழிபாடுகளின் போது பயன்படுத்தப்படும் ஒரு பொருள் தான் கற்பூரம். இந்த கற்பூரத்தை சூடம் என்றும் அழைப்பார்கள். கற்பூரம் நறுமணமிக்க பொருள்.
நல்ல மணம் நிறைந்த பொருட்களை பூஜைக்கு பயன்படுத்தினால், தெய்வங்கள் மகிழ்ச்சி அடைவதாக நம்பப்படுகிறது. மொத்தத்தில் கற்பூரம் மிகவும் புனிதமான பொருளாக கருதப்படுகிறது.

இப்படிப்பட்ட கற்பூரம் வாஸ்து சாஸ்திரத்திலும் நன்மை விளைவிக்கும் பொருளாக விளங்குகிறது. கற்பூரத்தை வீட்டில் ஏற்றும் போது, அதனால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் வெளியேற்றப்பட்டு, நேர்மறை ஆற்றலை வீடு முழுவதும் நிரம்பியிருக்கச் செய்யும்.
முக்கியமாக கற்பூரமானது வீட்டில் உள்ள தோஷங்களைப் போக்க உதவுகிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் பலவிதமான பிரச்சனைகளை சந்தித்து வந்தால் அல்லது உங்களின் விருப்பங்கள் நிறைவேற வேண்டுமென்று விரும்பினால் கற்பூரத்தை பின்வருமாறு பயன்படுத்துங்கள்.
* உங்கள் வீட்டில் யாரேனும் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு வந்தால், தினமும் மாலை வேளையில் கற்பூரத்தை ஏற்றுங்கள். இப்படி செய்து வந்தால், வீட்டில் உள்ளோர் அடிக்கடி நோய்வாய்ப்படுவது தடுக்கப்படுவதோடு, துன்பங்களும் நீங்கும்.
* திருமணம் தடைபடுகிறதா அல்லது தள்ளிப் போகிறதா? அப்படியானால் 6 கற்பூரத்துடன், 36 கிராம்பை வைத்து, அதில் அரிசி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை துர்கா தேவிக்கு படைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், விரைவில் திருமணம் நடக்கும்.
* வீட்டின் கழிவறை மற்றும் குளியலறையில் தோஷம் இருந்தால், அந்த தோஷத்தைப் போக்க, நெய்யில் கற்பூரத்தை நனைத்து, அதை தினமும் காலை, மாலை மற்றும் இரவு எரிக்க வேண்டும். இது தவிர ஒரு சிறிய பௌலில் நீரை ஊற்றி அதில் 2 கற்பூரத்தைப் போட்டு, வீட்டின் கழிவறை மற்றும் குளியலறையில் வைக்க வேண்டும்.
* நீங்கள் நிலம் வாங்க வேண்டுமென்று விரும்பினால், ஒரு இடத்தில் ஒரு கைப்பிடி மண்ணை வைத்து, அதன் மேல் ஒரு கற்பூரத்தை வைத்து எரித்து வழிபட வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும்.
* வீண் செலவு அதிகம் செய்யும் பழக்கம் உள்ளதா? இப்பழக்கத்தைக் கைவிட முடியவில்லையா? அப்படியானால் மாலை வேளையில் சூரியன் அஸ்தமனமாகும் போது, கற்பூரத்தை ஏற்றி வீடு முழுவதும் காட்டி, லட்சுமி தேவியை வழிபடுங்கள். இப்படி செய்தால், அப்பழக்கம் குணமாகும்.
* உங்கள் வீட்டில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லையா? பணம் வீட்டில் நிலைத்திருப்பதில்லையா? அப்படியானால் வீட்டின் ஒவ்வொரு அறையிலும் வெள்ளி அல்லது பித்தளை கிண்ணத்தில் இரண்டு கற்பூரம் மற்றும் 2 கிராம்பை வைத்து எரிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி, நேர்மறை ஆற்றல் அதிகரித்து பணம் வீட்டில் பெருகும்.
* வீட்டில் சண்டை அதிகமாக வருகிறதா? அப்படியென்றால் வீட்டின் மூலைகளில் ஒரு கற்பூரத்தை வையுங்கள். இதனால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் விலகி, வீட்டில் உள்ளோரிடையே நல்ல பிணைப்பு மற்றும் புரிதல் ஏற்படும்.
* உங்களுக்கு எந்த ஒரு காரியத்திலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்க வேண்டுமா?அப்படியானால் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஜவ்வரிசியுடன் 12 கற்பூரத்தை வைத்து எரியுங்கள். இப்படி செய்தால், அதிர்ஷ்டத்தின் ஆதரவுடன் முன்னேற்ற பாதையும் திறக்கப்படும்.
* ஒவ்வொருவருமே நிறைய பணத்தை சம்பாதிக்க வேண்டுமென்று விரும்புவோம். நீங்களும் அப்படி விரும்பினால், கடின உழைப்பின் பலனைப் பெற ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் துர்கை அம்மனுக்கு சிவப்பு ரோஜாவை வழங்கி, கற்பூரத்தை ஏற்றுங்கள். இப்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications