Latest Updates
-
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா?
Vastu Tips: மூங்கில் செடியை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. பணமும் குவியும், தொழிலிலும் முன்னேற்றம் ஏற்படும்..
Bamboo Plant Vastu Tips In Tamil: வீட்டை அழகாக வைத்துக் கொள்ள ஒவ்வொருவரும் பல்வேறு பொருட்களை வாங்கி அலங்கரிப்போம். அதில் சிலர் பெயிண்டிங்கை வாங்கி அலங்கரிப்பார்கள், இன்னும் சிலர் கலைப் பொருட்களை வாங்கி வீட்டை அழகுபடுத்துவார்கள். இன்னும் சிலருக்கு செடிகள் மீது விருப்பம் இருக்கும். இப்படி செடிகளை வீட்டினுள் வளர்ப்பதாக இருந்தால், வீட்டினுள் வளர்க்க உகந்த செடிகளை வாங்கி, அவற்றை சரியான இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும்.
அப்படி வளர்க்கும் போது தான் வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டம் சிறப்பாக இருக்கும். வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளைக் குறைப்பதில் செடிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதுவும் மூங்கில் செடி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த செடியை வீட்டில் வைத்தால், வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிப்பதோடு, மகிழ்ச்சி பெருகும், செல்வம் அதிகரிக்கும்.

முக்கியமாக மூங்கில் செடி வீட்டில் இருந்தால், அது அந்த வீட்டில் குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வத்தை அதிகரித்து, படிப்பில் சிறந்து விளங்க வழிவகை செய்யும். ஆனால் அதற்கு மூங்கில் செடியை வாஸ்துப்படி வீட்டில் சரியான இடத்தில், திசையில் வைத்து வளர்க்க வேண்டும். இப்போது வாஸ்து சாஸ்திரத்தின் படி, மூங்கில் செடியை வீட்டில் எங்கு வைக்க வேண்டும் என்பது குறித்து காண்போம்.
மூங்கில் செடி ஏன் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது?
வாஸ்து சாஸ்திரத்தின்படி, மூங்கில் செடி அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் செடியாகக் கருதப்படுகிறது. இந்த மூங்கில் செடி நேர்மறை ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. அதோடு இது வீட்டில் செழிப்பையும் அதிக வருமானத்தையும் தருகிறது. இது தவிர, இந்த செடி வீட்டில் உள்ளோரின் மனதுக்கும் ஆன்மாவிற்கும் அமைதியைத் தருகிறது.
வாஸ்துப்படி மூங்கில் செடி வளர்ப்பதற்கான சிறந்த திசை
வாஸ்துப்படி மூங்கில் செடியை வீட்டில் சரியான இடத்தில் வைத்து வளர்க்கும் போது, அது அந்த வீட்டில் பலவிதமான நன்மைகளை வழங்குவதோடு, சுற்றுச்சூழலையும் சுத்திகரிக்க உதவுகிறது.
* வாஸ்து சாஸ்திரத்தின் படி, மூங்கில் செடியை வளர்க்க ஏற்ற சிறந்த திசை கிழக்கு ஆகும். இந்த திசையில் மூங்கில் செடியை வைத்து வளர்க்கும் போது, அது வீட்டில் அமைதியையும், மகிழ்ச்சியையும் அதிகரிக்கும். அதோடு வீட்டின் நிதி நிலையும் மேம்படும்.
* மூங்கில் செடியை வீட்டின் மேற்கு திசையில் வைத்து வளர்த்து வந்தால், அது வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு படிப்பின் மீது ஆர்வத்தை அதிகரிக்கும். அதுவும் அந்த மூங்கில் செடியில் ஒரு நாணயத்தை வைத்தால், அது குழந்தைகளின் மனதை நிலையாக வைத்திருக்கும்.
* மூங்கில் செடியை வீட்டின் வடக்கு திசையில் வைத்திருந்தால், அது தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அதுவும் அந்த மூங்கில் செடியில் எப்போதும் தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் தண்ணீர் இருந்தால் தான் தொழில் செழிப்பாக இருக்கும்.
* வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் மூங்கில் செடிகளை நடுவதால் செல்வம் பெருகும். லட்சுமி தேவியின் ஆசி எப்போதும் உங்கள் வீட்டின் மீது இருக்கும்.
நினைவில் கொள்ள வேண்டியவைகள்
* மூங்கில் செடியை எப்போதும் ஜன்னலுக்கு அருகில் வைக்கக்கூடாது. ஏனெனில் இந்த செடியில் வெயில் நேரடியாக படுமாயின், செடி வாடிப்போய்விடும். இதன் மூலம் வீட்டின் நிதி நிலையில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
* வாஸ்துப்படி வீட்டில் மூங்கில் செடியை வளர்ப்பதாக இருந்தால், 2 முதல் 3 அடி உயரம் வரை மட்டுமே வளர விட வேண்டும். அதுவே மங்களகரமானவை. மேலும் மூங்கில் செடி இருக்கும் இடத்தில் சுற்றுச்சூழல் நன்றாக இருக்கும் மற்றும் அந்த இடத்தில் எதிர்மறை ஆற்றல் நெருங்காது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications