Latest Updates
-
ஒரு லிட்டர் பெட்ரோல் விற்றால் பெட்ரோல் பங்க்-க்கு எவ்வளவு ரூபாய் லாபம் கிடைக்கும் தெரியுமா? -
ரக்ஷா பந்தன் அன்று உங்க அண்ணன் ராசிக்கேற்ற நிறத்தில் ராக்கி கட்டுங்க.. நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.. -
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
World Toilet Day 2023: பொது கழிப்பறையை பயன்படுத்தும் போது கட்டாயம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!
World Toilet Day 2023: உலக கழிப்பறை தினமானது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 2001 ஆம் ஆண்டில் தான் உலக கழிப்பறை அமைப்பானது உருவாக்கப்பட்டது. இந்த நாட்களில் நாம் பயன்படுத்தும் கழிப்பறையை சுத்தமாக வைத்துக் கொள்வதை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றனர்.
உலகெங்கிலும் உள்ள மக்களிடையே இந்த விழிப்புணர்வு செல்லவே இந்த கழிப்பறை தினமானது கொண்டாடப்படுகிறது. வீட்டில் இருக்கும் கழிப்பறை மட்டுமல்லாது நம் பயணத்தின் போது பயன்படுத்தும் பொது கழிப்பறையும் சுத்தமாக இருக்க வேண்டும். பொது இடங்களில் கழிப்பறையை பயன்படுத்தும் போது சில விஷயங்களை கருத்தில் கொண்டு பயன்படுத்துவது நல்லது. அதைப்பற்றி தான் நாம் இக்கட்டுரையில் காணப் போகிறோம்.

கழிப்பறை உருவான வரலாறு
1860 களில் தான் மேற்கத்திய பாணியில் கழிப்பறைகள் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேய பிளம்பர் தாமஸ் கிராப்பர் என்பவர் தண்ணீர் மூலம் சுத்தம் செய்யும் ஃப்ளஷ் வசதி கொண்ட கழிப்பறையை வடிவமைத்தார். ஆனால் ஐரோப்பா நாடுகளில் 16 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே கழிப்பறை வசதி உள்ளது. 1775 ஆம் ஆண்டில், அலெக்சாண்டர் கம்மிங்ஸ் என்பவர் கழிப்பறையில் இருந்து துர்நாற்றம் வருவதை தடுக்க எஸ் வடிவ குழாயை உருவாக்கினார்.
கழிப்பறை சுத்தம் இல்லாமையால் வரும் பிரச்சினைகள்
நம்முடைய நாட்டில் நவீன தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தால் கூட இன்னமும் சுத்தம் என்பதில் பின்தங்கியே இருக்கிறோம். கழிவறை அவசியத்தை பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது. மிகவும் பின்தங்கிய சூழலில் வாழும் மக்களே இத்தகைய துன்பத்தை அனுபவிக்கிறார்கள். மனிதக் கழிவுகளிடையே வாழும் சூழலையும் அவர்கள் அனுபவித்து வருகிறார்கள்.
பொது இடங்களில் கழிப்பறையை பயன்படுத்தும் போது நாம் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
கழிப்பறையின் கைப்பிடியை ஒரு போதும் தொடாதீர்கள்
கழிப்பறையின் கைப்பிடியை வெறும் கையால் தொடுவது அவ்வளவு நல்லது கிடையாது. ஏனெனில் கழிப்பறையின் கைப்பிடியில் ஏராளமான கிருமிகள் காணப்பட வாய்ப்புள்ளது. இந்த கிருமிகள் உங்கள் கைகளில் ஒட்டிக் கொண்டு உங்களுக்கு தொற்று நோய்களை ஏற்படுத்த வழி வகுக்கும். எனவே கழிப்பறைக்கு செல்வதற்கு முன்பும் கழிப்பறையை விட்டு வெளியே செல்லும் போதும் சரி கைப்பிடியை பிடிக்க டிஷ்யூ பேப்பரை பயன்படுத்துங்கள். வெறும் கைகளால் கைப்பிடியை தொட வேண்டாம்.
உங்களுடைய தனிப்பட்ட பொருட்களை எப்பொழுதும் கவனமாக வையுங்கள்
உங்களுடைய தனிப்பட்ட பொருட்களை எப்பொழுதும் கவனமாக வைப்பது மிகவும் அவசியம். உங்கள் கைகளில் இருக்கும் தொலைபேசி, கைப்பைகள் இவற்றில் கிருமிகள் ஒட்டிக் கொள்ள நிறைய வாய்ப்புண்டு. எனவே உங்கள் கைப்பைகளை கதவுக்கு பின்னால் இருக்கும் கொக்கியில் தொங்க விடுவது நல்லது.
இந்திய கழிப்பறையை பயன்படுத்துங்கள்
மேற்கத்திய கழிப்பறையில் அதன் மேற்பரப்பை தொட வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் இந்திய கழிப்பறைகள் அப்படி இருப்பதில்லை. எனவே எப்பொழுதும் மேற்கத்திய பாணி கழிப்பறைக்கு பதிலாக இந்திய கழிப்பறையையே தேர்ந்தெடுங்கள். மேற்கத்திய கழிப்பறை இருக்கையை நன்கு துடைத்து விட்டு பயன்படுத்துங்கள்.
ஃப்ளஷ் செய்து விட்டு வெளியே வாருங்கள்
எப்பொழுதும் கழிப்பறையை விட்டு வெளியே வரும் போது ஃப்ளஷ் செய்து விட்டு வெளியே வாருங்கள். அதே நேரத்தில் காற்றில் மற்றும் நீரின் வழியாக பரவக் கூடிய கிருமிகள் அதிகம். எனவே கழிப்பறை மூடியை மூடி விட்டு ஃப்ளஷ் செய்வது நல்லது. அதே மாதிரி ஃப்ளஷ் பட்டனை அழுத்த டிஸ்யூ பேப்பரை பயன்படுத்துங்கள்.
பாத்ரூமில் இருக்கும் ஹேண்ட் ட்ரையரை பயன்படுத்தாதீர்கள்
பாத்ரூமில் இருக்கும் கை உலர்த்திகளை பயன்படுத்த வேண்டாம். கைகளை விரைவாக உலர்த்துவதற்கு ஃப்ளோ ட்ரையரை பயன்படுத்த வேண்டாம். இதில் இருந்து வரும் வெப்பமான காற்று கிருமிகளை எளிதாக பரப்பும். கைகளை உலர்த்த டிஸ்யூ பேப்பரை பயன்படுத்துங்கள். வேண்டுமானால் கைகளில் கைக்குட்டையை கூட நீங்கள் வைத்துக் கொள்ளலாம். முக்கியமாக கைகளை சுத்தம் செய்ய ஹேண்ட் சானிட்டரை பயன்படுத்துங்கள். இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.
2023 ல் உலக கழிப்பறை தினத்தின் நோக்கம்
2023 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி இதற்கான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. மக்களிடையே கழிவறை சுகாதாரம் மற்றும் போதுமான தண்ணீர் வசதி இது குறித்து பிரச்சாரம் செய்யப்படுகிறது. அரசாங்கமும் மக்களும் இணைந்து செயல்பட்டால் நம் குழந்தைகளுக்கு நோய் நொடி இல்லாத ஒரு பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்க முடியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications