Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
பாலுடன் இந்த பொருட்களை கலந்து குடித்தால், இருமடங்கு நன்மை கிடைக்குமாம்.. ட்ரை பண்ணி பாருங்க..
World Milk Day 2023: பால் அனைத்து வயதினரும் கட்டாயம் தினசரி உணவில் சேர்க்க வேண்டிய முக்கியமான உணவுப் பொருள். ஏனெனில் பாலில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்களான கால்சியம், புரோட்டீன், கனிமச்சத்துக்கள், நார்ச்சத்து, ரிபோஃப்ளேவின், பொட்டாசியம், பாஸ்பரஸ், அயோடின், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 போன்றவை அதிகளவில் உள்ளன.
பாலை தினமும் உட்கொண்டு வந்தால், பற்கள், எலும்புகள் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதுவும் வளரும் குழந்தைகள் பாலை குடித்து வந்தால், அவர்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். அதேப் போல் வயது அதிகரிக்கும் போது பாலைக் குடிப்பதால், அது முதுமைக் காலத்தில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைத்து, எலும்புகளை வலுவாக வைத்துக் கொள்ளும்.

இது தவிர பால் மூளையின் வளர்ச்சிக்கும், சிறந்த நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கவும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இந்த பாலை ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால் பாலை வெறுமனே குடிக்க நிறைய பேருக்கு பிடிக்காது. இன்று உலக பால் தினம் என்பதால், பாலுடன் எந்த பொருட்களை கலந்து குடித்தால், இருமடங்கு பலனைப் பெறலாம் என்பதைக் கீழே கொடுத்துள்ளோம்.
மஞ்சள் தூள்
மருத்துவ குணம் வாய்ந்த மஞ்சள் தூளை பாலுடன் சேர்த்தால், பால் சுவையாக இருப்பதோடு, உடலுக்கு ஏராளமான நன்மைகளும் கிடைக்கும். அதுவும் இரவு நேரத்தில் மஞ்சள் தூள் கலந்த பாலைக் குடித்தால் நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும் மற்றும் சளி, இருமல் இருந்தாலும் சரியாகும். மஞ்சள் பாலின் சுவையை இன்னும் கூட்ட, அத்துடன் வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்.
கொக்கோ பவுடர்
உங்கள் குழந்தைகள் பால் குடிக்கமாட்டார்களா? அப்படியானால் அவர்களுக்கு பாலுடன் கொக்கோ பவுடரை சேர்த்து கலந்து கொடுங்கள். இது பாலின் சுவையை அதிகரிப்பதோடு மட்டுமின்றி, அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், இதயத்திற்கும் நல்லது. மேலும் இந்த கொக்கோ பால் இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்தும், அழற்சியைக் குறைக்கும், மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
உலர் பழங்கள்
உலர் பழங்கள் அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. இந்த உலர் பழங்களை அப்படியே சாப்பிடுவதை விட, பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் இருமடங்கு நன்மை கிடைக்கும். அதற்கு பாதாம், முந்திரி, உலர் திராட்சை, வால்நட்ஸ் போன்றவற்றை பொடியாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் அதை வெதுவெதுப்பான பாலுடன் சேர்த்து இரவு தூங்கும் முன் குடித்தால், அது நல்ல தூககத்தைப் பெற உதவுவதோடு, உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
ப்ளேவர்டு மில்க்
தற்போது கடைகளில் ரோஸ், ஸ்ட்ராபெர்ரி, பட்டர்ஸ்காட்ச் போன்ற ப்ளேவர்டு பால் பவுடர்கள் விற்கப்படுகின்றன. இவை மிகவும் சுவையாக இருப்பதோடு, இவற்றில் டயட்டரி நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை இருப்பதால், செரிமான மண்டலம் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடும் மேம்படும்.
பழங்கள்
நீங்கள் குடிக்கும் பாலை இன்னும் ஆரோக்கியமானதாகவும், சுவையாகவும் மாற்ற விரும்பினால், பழங்களை சேர்த்து உட்கொள்ளலாம். அதுவும் வாழைப்பழத்தை மசித்து அத்துடன் வெதுவெதுப்பான பாலை சேர்த்து உட்கொண்டால், சுவையாக இருப்பதோடு, உடலுக்கு பல்வேறு நன்மைகளும் கிடைக்கும். முக்கியமாக வாழைப்பழ பாலானது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. பாலுடன் வாழைப்பழத்தை தவிர, மாம்பழம், ஆப்பிள், அத்திப்பழம் போன்ற பழங்களையும் சேர்த்து உட்கொள்ளலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications