World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்!

World Mental Health Day 2026: தற்போதைய பரபரப்பான உலகில் வேலைப்பளு, குடும்பப் பொறுப்புகள், பொருளாதார நெருக்கடி, சமூக வலைத்தளங்களின் தாக்கம் மற்றும் எதிர்காலம் குறித்த கவலைகள் பலரது மன அமைதியைப் பாதிக்கின்றன. மன அழுத்தம், பதற்றம், தூக்கமின்மை, தனிமை மற்றும் தொடர்ச்சியான சோகம் போன்றவை அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கலாம். ஆனால், பலரும் மனநலப் பிரச்சனைகளை வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். உடல் ஆரோக்கியத்தைப் போலவே மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பது அவசியம்.

World Mental Health Day 2026 How Instagram Reels Impact Mental Health Psychiatrist Explains

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 ஆம் தேதி உலக மனநல தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் மற்றும் மனநல பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஆங்காங்கு நடத்தப்படுகிறது. அந்த வகையில் தற்போது சமூக வலைத்தளங்கள் மக்களின் மனநிலையை ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் Social Media Reels scrolling பழக்கம் மனநிலையை மோசமாக பாதிக்கிறது.

இந்த உலக மனநல தினத்தை முன்னிட்டு அதிகமாக Instagram Reels பார்ப்பது ஒருவரது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது என்பது குறித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் மனநல மருத்துவத்தின் மூத்த ஆலோசகரான டாக்டர். யாமினி கண்ணப்பன் அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.

World Mental Health Day 2026 How Instagram Reels Impact Mental Health Psychiatrist Explains

அப்போது அவர் கூறியதாவது, "ஒருமுறை திறந்தால்... நிறுத்தவே முடியாது!" இது ஒரு பிரபலமான chips விளம்பரத்தில் வரும் சவால். இன்று இதே சவால் நம்முடைய Social Media Reels scrolling பழக்கத்திற்கும் பொருந்துகிறது.

"ஒரு Reel மட்டும் பார்க்கலாம்" என்று phone-ஐ எடுக்கிறோம். ஒரு Reel முடிவதற்குள் அடுத்தது வருகிறது. இப்படியே ஒரு மணி நேரமோ, பல மணி நேரங்களோ கடந்துவிட்டதே தெரியாமல் போகிறது. ஒவ்வொரு Reel-லும் புதுமையான காட்சி, இசை, நகைச்சுவை அல்லது ஆச்சரியம் என தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். இவ்வாறான தொடர்ச்சியான தூண்டுதல்கள், நமது மூளையின் reward system மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு புதிய Reel-லும் அடுத்தது என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்குவதால், தொடர்ந்து scrolling செய்யும் பழக்கமும் வலுப்பெறலாம்.

இத்தகைய அதீதமான செயற்கைத் தூண்டுதல்களுக்குப் பழகும் மனது, வாழ்வின் அன்றாட மற்றும் வழக்கமான மகிழ்ச்சிகள் முன்பைப் போல சுவாரஸ்யமாகத் தோன்றாமல் போகலாம். உதாரணமாக, நண்பர்களுடன் பேசுவது, புத்தகம் படிப்பது, இசை கேட்பது, நடைப்பயிற்சி செய்வது போன்ற இயல்பாக நமக்கு மகிழ்ச்சி அளித்த விஷயங்கள்கூட இப்போது சலிப்பாகத் தோன்றலாம். இதுவே "Digital Anhedonia" எனப்படும். அதாவது, தொடர்ந்து கிடைக்கும் டிஜிட்டல் தூண்டுதல்களுடன் ஒப்பிடும்போது, இயல்பான வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகள் குறைவான சுவாரஸ்யத்தைத் தருவதாக உணரப்படலாம்.

World Mental Health Day 2026 How Instagram Reels Impact Mental Health Psychiatrist Explains

ஆதலால், Reels scrolling நம் நேரத்தை மட்டுமல்ல; நாம் எதில் மகிழ்ச்சி காண்கிறோம், அந்த மகிழ்ச்சியை எப்படி உணர்கிறோம் என்பதையே மெல்ல மெல்ல மாற்றிக்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் கவனம் செலுத்தும் விஷயங்களிலும், பொழுதைக் கழிக்கும் விதத்திலும் இந்த மாற்றம் படிப்படியாக வெளிப்படலாம்.

கவனம் செலுத்தும் நமது திறனும் இதனால் பாதிப்புக்குள்ளாகிறது. ஒரு தூண்டுதலிலிருந்து இன்னொரு தூண்டுதலுக்குத் தொடர்ந்து தாவிக்கொண்டிருக்கும் இந்தக் கவனநிலையை, சிதறலை, University of Washington-ஐச் சேர்ந்த Computer Scientist David M. Levy, Ph.D., "Popcorn Brain" என்று குறிப்பிடுகிறார். நீண்ட நேரம் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டிய வாசிப்பு, வேலை அல்லது உரையாடல்கள் இதனால் சவாலாகத் தோன்றலாம்.

Scrolling-இன் ஒரு ஆபத்தான வடிவம் Doomscrolling எனப்படும். ஆபத்தைக் கவனிக்கும் நமது இயல்பான மனச் செயல்பாட்டைத் தொடர்ந்து தூண்டுவதன் மூலம், மீண்டும் மீண்டும் எதிர்மறையான செய்திகள் அல்லது கவலைக்குரிய உள்ளடக்கங்களைப் பார்ப்பதையே Doomscrolling என்கிறோம். இது மனதில் பதற்றத்தையும் கவலையையும் அதிகரித்து, எதிர்மறையான சிந்தனைகளைத் தூண்டலாம். தூக்கம், கவனம் மற்றும் அன்றாட மனநிலையையும் பாதித்து, மனதுக்கு ஒரு தொடர்ச்சியான 'எச்சரிக்கை நிலையில்' இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தலாம்.

World Mental Health Day 2026 How Instagram Reels Impact Mental Health Psychiatrist Explains

Scrolling அதிகரிக்க அதிகரிக்க, அதன் தாக்கம் உடல்நலத்திலும் வெளிப்படத் தொடங்குகிறது. குறிப்பாக, இரவு நேரத்தில் நீண்ட நேரம் scrolling செய்வது தூக்கத்தையும் உடலின் circadian rhythm-ஐயும் பாதிக்கக்கூடும். நீண்ட நேரம் phone-ஐப் பயன்படுத்துவதால் கண் சோர்வு, கழுத்து மற்றும் தோள்பட்டை வலி போன்ற உடல் உபாதைகளும் ஏற்படலாம். எனவே, scrolling என்பது வெறும் screen-time பிரச்சினை மட்டுமல்ல; அது நமது மனதையும் உடலையும் பாதிக்கக்கூடிய ஒரு பழக்கமாக மாறிவிடலாம்.

ஆனால் பிரச்சினை Reels-ல் இல்லை; அதை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் இருக்கிறது. Scrolling-க்கு நேர வரம்பு வைத்தல், படுக்கைக்கு முன் phone-free நேரங்களை உருவாக்குதல், Doomscrolling-ஐத் தவிர்த்தல் ஆகியவை உதவக்கூடும். அதேபோல் குடும்பத்துடன் உணவு உண்பது, நண்பர்களுடன் நேரில் பேசுவது, நடைப்பயிற்சி, வாசிப்பு, இசை, இயற்கை போன்ற real-world experiences-க்கும் மீண்டும் இடம் கொடுக்க வேண்டும்.

நமது மூளை neuroplasticity கொண்டது. நாம் தொடர்ந்து எதற்கு நமது கவனத்தை அளிக்கிறோமோ, அதற்கேற்ப நமது பழக்கங்களும் கவன முறைகளும் மாறுகின்றன. எனவே, digital உலகில் "scroll" செய்வதோடு, சரியான நேரத்தில் "stop" செய்வதையும் கற்றுக்கொள்வோம்." என்று டாக்டர் கூறினார்.

Story first published: Saturday, October 10, 2026, 16:28 [IST]
Desktop Bottom Promotion